வெற்றிக்கு பின்னால் ஆன
விருதுகளும் கண்ணிரும்
நண்பனிடத்தில்.
ஆனந்தக் கண்ணீரா
என்றேன்.
கணத்த மௌனத்திற்குப் பின்
மொழியின் பிரவாகம்.
இழந்த குடும்ப உறவுகளையும்
காலங்களையும்
அதனால் ஆன காயங்களையும்
விருது சமன் படுத்துமா?
![]()
உருவேறத் திருவேறும்
மரணத்தின் அனுபவங்களை
மனதோடு ஒன்றி கூறுமாறு
வழி பட்ட மனிதர்களை
வழியில் பட்ட மனிதர்களை வினவினேன்.
காய்ந்த கிளை ஒன்று
மரத்தினில் இருந்து
விழுவதைப் போன்றது என்றான் ஒருவன்.
நீண்ட நதியினில்
படகினில் பயணம் என்றான் ஒருவன்.
நண்டின் கால்களை ஒடித்து
உள்ளிருப்பதை உறிஞ்சுவதைப்
போன்றது என்றான் ஒருவன்.
நான்கு தினைகளின் திரிபில்
பயணம் என்றான் ஒருவன்.
அடங்காத மனைவியின் வார்த்தைகள் கேட்டும்
அமைதியை கொண்டாடும்
கணவனின் உணர்வு என்றான் ஒருவன்.
வாழ்வினை அனுபவித்தவனுக்கு
மரணம் சூட்சமாய் கொண்டாடப் படும்
என்றார் என்றைக்குமான கடவுள்.
![]()