வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

ஆன்மீகம் – முன்பெல்லாம் பெரும்பாலான சிலைகள் குளம் சார்ந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டன. வேதிப் பொருள்களால் செய்யப்பட்டவை அல்ல.  ப்ரம்மத்திலிந்து தோன்றியவை மீண்டும் ப்ரம்மத்தில் என்பதே அடிப்படை.

அறிவியல் :
1. வினாயகர் சிலையுடன் சேர்த்து பூக்கள் மற்ற பொருள்களையும் குளத்தில் இடுவார்கள். அவைகள் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் இனப் பெருக்க காலம் மற்றும் வளர்ச்சி அடையும் காலம் இம் மாதம். எனவே பொருள்கள் குளத்தில் இடப்படும்.

2. மீண்டும் குளத்தில் அவை சேர்க்கப்படுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும்.

மற்றவை :
1. அந்த அந்த பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பலன் அடைவார்கள்.
2. பால கங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இவ் விழாவினை சிறப்பாக கொண்டாடத் துவங்கினார்.

Loading

சமூக ஊடகங்கள்

உலகம் தனித்திருந்தது

ஆதியில் மரங்களும் மனிதர்களும்
நேசம் கொண்டவர்களாக இருந்தனர்.
ஒருமித்த மொழியில்
பகிர்ந்து கொண்டனர் தங்கள் உணர்வுகளை.
தன்னை கொடுக்க தயங்கவில்லை மரங்கள்
அதனை விலக்க தயங்கவில்லை மனிதர்கள்.
நாளின் ஒரு பொழுதுகளில்
மனக்கசப்புகள்.
பெருங் காற்றின் வழி இலைகளை உதிர்ப்பதாக
மனிதனின் குரல்கள்.
நித்தமுமான கவனிப்புகள்
அநித்தியமானது என்று மரங்களின் குரல்கள்.
பிறிதொரு சந்ததியில்
மனிதனில் மொழியறிவு குறைந்து, குலைந்து
தான் மட்டும் அனைத்தும் அறிந்தவனாக
கர்வம் கொண்டிருந்தான்.
உலகில் அனைத்து மரங்களையும் அழித்து
கடைசி மரம் அழித்தலில் மரம் சொன்னது;
‘என்னை அழித்தால், நீயும் அழிவாய்’ என்று.
கோடாலியின் கடைசி வெட்டிதலில்
உலகம் தனித்திருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

பொருளற்றவனை
எளிதில் புரிந்து கொண்டு
குரைக்க துவங்கி விடுகின்றன
மிருகங்களும்.

*இல்லானை இல்லாளும் வேண்டாள் – ஔவை

Loading

சமூக ஊடகங்கள்

தனித்த எச்சங்கள்

நீண்ட நெடும் பயணத்தில்
பாதங்களைப் பதித்து
நம் இருவரின் பயணமும்
தொடர்கிறது.
என் பாத சுவடுகள் மட்டும்
தனித்திருக்கிறது.
காரணம் கேட்கிறேன்.
எச்சங்களை விட்டுச் செல்வதால்
நீ பிம்பம்,
தனித்திருப்பதால் நான் மூலம் என்று கூறி
விழி வழியே வரும்
வினாக்களைப் பரிசளிக்கிறாய்.
அங்கீகாரமாக கண்ணீர் முத்துக்கள் என்னில்.

Loading

சமூக ஊடகங்கள்

குடிப் பிறப்பு

நான்மணிக்கடிகை  – நான்கு விஷயங்களை சொல்லும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிக நுட்பமானப் பொருளைத் தரும். நான்கு வித மலர்கள் ஒரு மாலை போல்.

கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்;   மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தும் பிறக்கும்;
அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி?

பொருள் அனைவரும் அறிந்ததே.

கள்ளி போனற செடியில் வாசனை மிகுந்த அகில் பிறக்கும். வாசனை திரவியங்கள் மானின் வயிற்றில் இருந்து பிறக்கும். விலை உயர்ந்த முத்துக்கள் கடலில் இருந்து கிடைக்கும்.நல்ல மனிதர்களின் குடிப் பிறப்பினை எவர் அறியக் கூடும்.

எனவே மனித வாழ்வே மகத்துவம், குடிப் பிறப்பு அன்று.

Loading

சமூக ஊடகங்கள்

ஜன்னல் வெளிச்சங்கள்

காற்றின் தடமன்றி
வேறு என்ன அறிந்திருக்கும்
ஜன்னல்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சுடலை

பட்ட மரத்தில்
குருவிக் கூடு
எதைச் சொல்ல முற்படுகிறது?

*சுடலை – மயானம்

Loading

சமூக ஊடகங்கள்

சொல் பிறந்த கதை

சொற்களின் வேர் தேடி புறப்பட்டன
சிந்தனைகள்.
உன்னிடம் இருந்தா பிறக்கிறது என்று
ஆகாயத்திடம் வினவினேன்.
காற்று என்னுள் இருப்பதால் காற்றினை
கேட்கச் சொன்னது.
பற்றி எரிவதாலும், படர்ந்து எரிவதாகும்
நெருப்பு பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது காற்று.
கடந்து செல்ல துணைசெய்வது நீராவதால்
நீர் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நெருப்பு.
இயக்கம் அனைத்தும் பூமியில் என்பதால்
நிலம் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நீர்.
பிரபஞ்சங்களின் சேர்க்கையால் ஆனது
மனிதக் கூடு என்பதால்
மனிதனிடம் கேட்கச்சொன்னது நிலம்.
நாபிச் சுழியில் இருந்து சூல் கொள் வார்தைகள்
தொண்டைதாண்டி,
வாயினின் வழி வரத்துவங்குகையில்
சொற்களின் முடிவுகள் பூரணத்துவத்துடன்.

Loading

சமூக ஊடகங்கள்

மோட்டார் வாகனம் – சில குறிப்புகள்.

1.எரிபொருளைபாதி அளவில் நிரப்புங்கள். (50ரூ, 100 ரூ என நிரப்ப வேண்டாம்.)
Please fill fuel at least half tank. (Do not fill for Rs. 50 or Rs.100)
2.காற்றினைசரியான அளவில் நிரப்பவும்.(முன்பக்கம் – 20, பின் பக்கம் – 30, காரணம்25,35 எனில் டயருக்கு எதுவும் ஆகாது. ஆனால்முதுகுத்தண்டில் வலி வரும்.)
Air pressure for two wheeler – front – 20, back – 30 (with pillion also). When you ride with more than this, it will not affect the tyre.  It will affect our spinal cord .
3. 1500 கி.மி மேல் ஒருமுறைஆயில் மாற்றவும். (மிக அதிக அளவு– 2000 கி.மி)
Change the oil for every 1500 K.M(Max – 2000 K.M)
4. 5000 கி.மிக்கு ஒருமுறை ஆயில்பில்டரை சுத்தப் படுத்தவும்.
Clean the oil filter for every 5000 K.M
5. ப்ரேக்சரி இல்லாமல் வாகனத்தை இயக்காதீர்கள்.
Do not ride your vehicle without break.
6. சிக்னல்மிக அருகினில் சென்று ப்ரேக் செய்யாதீர்கள். எரிபொருள் நஷ்டம் ஏற்படும்.
Do not ride your vehicle with high speed and stop near the signal. This will make energy/fuel loss.
7. குறிப்பிட்டவேகத்தில் எல்லா நேரங்களிலும் இயக்கவும். (.ம்எல்லா நேரங்களிலும்– 50 கி.மி)
Ride your vehicle with constant speed at all times (Ex. 50 K.M)
8. எரிபொருளைவிடுமுறை நாட்களின் இறுதியில் நிரப்பிவிடவும்.
Fill the fuel during the week ends/holidays.
9. முடிந்தவரைமற்றவர்களுக்கு வாகனத்தை கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
Kindly avoid to give your vehicle to your friends.
10. வாகனத்திற்கானஅனைத்து நகல்களையும் எப்போதும வாகனத்தில் வைத்திருங்கள்.
Keep all your photo copy of your documents (RC book, insurance, driving license and pollution certificate etc.,)
11. எப்பொழுதும்ஹெல்மெட் அணிந்து செல்லவும்.
Always wear helmet. (Rule or not)
10. அதைமிகவும் உரிமையான நண்பனாக நேசியுங்கள்.
Treat your vehicle as your friend.

Loading

சமூக ஊடகங்கள்

மகராப் பிரியை

எல்லா அப்பாக்களுக்கும்
தெரிந்துவிடுகிறது
எவரும் அறியாமல்
மகளைக்  மட்டும்
ரகசியமாய் காதலிக்க.

மகராப் பிரியை * – அம்பாள் நாமாவளி 

Loading

சமூக ஊடகங்கள்

நடைவண்டி நாட்கள்

வாழ்வினில் என்ன இருக்கிறது
கனவுகளைத் தாங்கி
நடத்தல் தவிர.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – மின்னணு மூலம் விற்பனை

மின்னணு மூலம் விற்பனை –    e- sale  

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1. நட்சத்திர ஆமைகள் மற்றும் நாய்கள் விற்பனைக்கு.

2. சார், என் பொண்டாட்டிய விக்க முடியுமா சார்?

3. வயதானவர்களை இடம் மாற்றி விற்க, இங்கே அணுகவும். 50 முதல் 60 வயதான பெண்களுக்கு முன்னுரிமை அளித்து விற்றுத்தருகிறோம்.

4. புளுட்டோ கிரகத்தில் இடம் விற்பனைக்கு.

5. வெங்காயம் என்ற சொல்லுக்கு, நாங்கள் காப்புரிமை பெற்றிருக்கிறோம். அதை நீங்கள் 10 முறை பயன்படுத்த எங்களிடம் அணுகவும். 

Loading

சமூக ஊடகங்கள்

ஜகத்பதி

அன்று ஒரு நாள்
ஏரியில் நீராவி மண்டபத்தின் அருகில்
கால்களை அலைத்தபடி நான்.
நினைவுகளில்
தும்பைப் பூவின் தேன் துளி,
வட்டங்கள் பெரிதாகவும்
மிகப் பெரிதாகவும் மாறி மாறி.
கரையினில் சலனமற்று நீ.
கைகளில் இருந்து வீசிய
கற்களும் நீருக்குள் மூழ்கி அலைகளுடன்.
சைகைகளைக் காட்டி
காரணம் கேட்கிறேன்.
முற்றுப் பெறா புன்னகையை உதிர்க்கிறாய்.
அப்போது
கற்கள் மூழ்கி இருந்தன
அலைகள் அற்றதாய் ஏரி.
அப்போதும் சலனமற்று நீ.

ஜகத்பதி* – கால பைரவர் அஷ்டத்தில் வரும் பெயர்.

Loading

சமூக ஊடகங்கள்

நினைவிருத்தல்

நகரப் பேருந்தில் இருந்து
கைகாட்டிச் சென்ற
குழந்தைகளை
நினைவு வைத்திருக்குமா
நெடுஞ்சாலை மரங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

தடயங்கள் அற்ற தடம்

காற்றில் கரைந்து செல்லும்
வண்ணத்துப் பூச்சிக்கு
தடம் அமைத்து யார்?

Loading

சமூக ஊடகங்கள்

முடிவற்ற தேடல்கள்

பெருங்கூட்டமொன்று
கூடிக் கலந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒருவன் தான் தொலைத்த பணத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த புகழைத்
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த குடும்பத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த சந்தோஷங்களை
தேடுவதாகச் சொன்னான்.
கிடைத்த காலவெளியில்
அவரவர் தொலைந்தது கிடைத்ததாக உரைத்தார்கள்.
ஊழி ஓட்டத்தில் ஒருவன் வந்து
உரை பகன்றான் எதைத் தேடுகிறாய் என்று.
என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
‘அவன் கிறுக்கு பயல் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

மண் வாசனை

எல்லா மழைக் காலமும்
எழுப்பி விடுகிறது
உறங்கி இருக்கும் நினைவுகளை

Loading

சமூக ஊடகங்கள்

நான் தொலைதல்

நீ, கிளி பொம்மையை வாங்கி
அதை பறக்க விட முற்பட்ட தருணங்களில்
தொலைந்திருந்தது
எனது இளமைக் காலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
அப்பா ரோபோ : என்னடா, 100 மில்லியன் pages ஒரு செகன்டபடிக்கிற. 2*2 = 4ன்னு தெரியாதா?
2.
 ரோபோ  1 : என்னட்ராபிக்டா இது. இதுக்கு முதல்லஒரு ப்ரொக்ராம் எழுதனும்.
3.
காதலித்தபெண் கைவிட்டதால் ஆண் ரோபோ தற்கொலை.
4.
  ரோபோ  gen xyz – எங்கவீட்ட ஒரு பழைய மாடல்ரோபோ இருக்கு. 2013 மாடல் சார். அத  mercy killing  பண்ண என்ன procedure?
5.
தொகுப்பாளர்  ரோபோ  – யார்பேசிறீங்க.
மனிதன் :  நான் 1993ல்இருந்து உங்க குரல கேக்கிறேன். நீங்க, 12 May 1994 வியாழக்கிழமை கட்டிகிட்டு வந்த பச்ச கலர்பூப் போட்ட சுடிதாரும் சின்னபொட்டும் சூப்பர்ங்க. 14 May 1995 ம் தேதி ரிலீஸ்  ஆன மோக முள் படத்திலிருந்து பாட்டு போடுங்க.
ரோபோ X : மனுஷங்க data  பாத்துமயக்கம் போட்டுடுத்து சார்.
6.
  ரோபோ 1 : நமக்காவது டெய்லி 50 யூனிட் கரண்ட் வேணும். அவனுக்கு 1யூனிட் போதும். அவன்ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறான்.
7
  ரோபோ 1 : ஏன்டா ஓடிவர?
  ரோபோ 2 : என் பொண்டாட்டி ரொம்பகொடும காரியா இருக்காடா. டெய்லி1 யூனிட் கரண்ட் கூட குடுக்கமாட்டேங்கிறாடா?

Loading

சமூக ஊடகங்கள்

நித்ய கன்னி

ஒரு ஒளிநாளில்
எனக்கான காதலைச் சொல்கிறேன்.
மோனப் புன்னகைக் கொண்டு
புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறாய்.
வயோதிகனாக நானும்
நித்திய கன்னியாக நீயும்.
எப்படி என்கிறேன்.
ஒளிவேக சுழற்சி*
உண்மையை உணர்தியது என்கிறாய்.
கரைகிறது கனவுகள்.

*As per the Einstein’s relativity theory, when you travel with the speed of light, your age will be reduced. 

Loading

சமூக ஊடகங்கள்