![]()
விபூதி தயாரிக்கும் முறை
விபூதி தயாரிக்கும் முறை.(சைவ சித்தாந்த முறைப்படி)
1. கற்ப விதி
2. அனுகற்ப விதி
3. உப கற்ப விதி
1. கற்ப விதி
பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்ட வேண்டும். பின்னர் அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. அனுகற்ப விதி
காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
3. உப கற்ப விதி
காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
பலன்கள்.
தலையினில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும்.
அனுஷ்டானம் செய்பவர்கள் 16 இடங்களில் தரிப்பார்கள்.(12 எனக் கொள்வாரும் உண்டு)
![]()
விலை
ஜீ(வ)வீத நதி
கலைடாஸ்கோப்
களைப்போடு வீட்டிற்குள் நான்.
இரண்டு முறை சுற்றி வந்து
காற்றில் கைகளை மூடி
‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று
என் கைகளை விரிக்க சொல்கிறாய்.
வினாக்களோடு விடுபடுகின்றன கைகள்.
பெரிய வண்ணத்துப் பூச்சியும்,
சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய்.
வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது,
நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.
![]()
ப்ரேமரூபா
யாருமற்ற இரவில்
வெற்றுப் புள்ளியாய் நீ.
மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய்.
உன் கண்ணசைப்பில்
கைக்குழந்தையாகிறேன்.
என் காதலைச் சொல்ல துணிகிறேன்.
‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய்.
விழி அருவி மடைதாண்டி
பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது.
இராவணன் இராமனான பொழுதினை ஒத்து
தன்னை இழத்தல் நிகழ்கிறது.
ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில்.
“கிழத்துக்கு இழுக்குது,
இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான்
செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன்,
போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.
![]()
வைராக்கியம்
மழை பெய்யும் காலம்
சருகின் சலனம்
எனது பள்ளி விடுமுறை நாளுக்கு தாத்தா-பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.
‘டேய்’ – அம்மா
‘ம்’- நான்
‘சினிமாவுக்கு போலாமா’-அம்மா
‘ம்’- நான்
‘போய் தாத்தாகிட்ட கேளு’ -அம்மா
‘தாத்தா,சினிமாவுக்கு போவட்டுமா’ – நான்
‘பத்திரமா போய்ட்டு வாங்க’ – தாத்தா.
மணி 6 நெருங்கிக் கொண்டிருந்தது.
‘சீக்கிரம் கிளம்புமா’
‘இருடா, மாவு அறைச்சிட்டு வந்திடுறேன்’
‘சீக்கிரம் சீக்கிரம் ‘
ஊருக்கு வெளியே 2 கி.மி-ல் தியேட்டர். தொலை தூரத்தில் பாடல்.
‘மருத மலை மாமணியே’–
‘டேய், சீக்கிரம் வாடா, மருத மலை பாட்டு போட்டுட்டான், டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சிட்டான்’.
கூட்டம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்.
இறை உணர்வோடு தொழில் தொடக்கம். அதே சமயம் மற்றவர்களுக்கு ஓரு Communication method.
நினைவுகளோடு மூழ்கி TV பார்க்க ஆரம்பித்தேன்.
‘மருத மலை மாமணியே – பாடல்’
‘பழைய பாட்டை நிறுத்தி தொலைங்க, சகிக்கல’ – மகன்.
காலம் மாற்றத்தில் உதிராத சருகுகள் எவை.
![]()
வாடிவாசல்
ஆவாஹனம்
நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
‘எனக்கான..’ எனத்துவங்குயில்
‘அனைத்தும் அறிவோம்’ என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.
![]()
அட்சய திருதியை
மீண்டும் ஓரு வியாபாரத்திற்கு தயாராகி விட்டோம்.
அனைவரும் வியாபார உத்திகளை மாற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நள்ளிரவு 12 மணி முதல் வியாபாரம்.
அனைத்து நிகழ்வுகளும் கலியில் மாற்றப்படும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
வைகாசி மாதம் அம்மாவாசைக்கு பிறகான மூன்றாவது நாள் – திருதியை.
அன்று தொடங்கப்படும் காரியங்கள் விருத்தி அடையும். (உ.ம் தானம், தருமம்,பசுவிற்கு உணவிடுதல்)
(தானம் – தனக்கு சமமானவர்களுக்கு கொடுப்பது,தருமம் – தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பது. )
வாசலில் வரிசையில் நிற்பது, கடன் வாங்கி நகை வாங்குவது அனைத்தையும் விட்டொழியுங்கள்.
வாருங்கள், வாழ்க்கை வாழ்தலில் இல்லை. உண்மையை உணர்தலில் இருக்கிறது.
![]()
அமிர்தம்
மயானச் சாலை
கிரகணம்
கிரகணத்திற்கு சில மணி நேரத்திற்கு (3 – 4 நேரம்) முன் உணவு உட் கொள்ளவேண்டும்.
கிரகண காலத்தில் உணவு செரித்தல் குறைவாகக் கூடும்.
மேலும் கிரகண காலத்தில் கண்ணுக்கு தெரியாத புழுதிப் படலம் எற்படும். அது உணவுகளில் மீது படியும். அது மிகப் பெரிய உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கிரகணத்திற்கு பின் வீட்டினை சுத்தப்படுத்துதல் இதன் பொருட்டே.
![]()
பிராப்தம்
மஹா பலி
உபாதி
லோபாமுத்ரா
மரம் அழிந்த கதை
ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில்
ஒரு மரம் இருந்தது.
வளரத்துவங்குகையில்
அது பேசத்தொடங்கியது.
அதன் பாஷைகள்
புரியாதனவாக இருந்தன.
ஒரு குழந்தையை அழைத்து
தன் மேல் கல் எறியச் சொன்னது.
புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது.
‘அங்க ஒரு மரம் இருக்குடா,
கல் எறிந்தால் பேசும்டா’ என்றது தனது நண்பர்களிடம்.
குழந்தைகளின் வருகையினால்
தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில்.
கால மாற்றத்தில்
பயணத்திற்கு இடையூராக இருப்பதாக
பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான்.
விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன.
பல காலம் கடந்த பிறகு
சில குழந்தைகள் பேசிக்கொண்டன.
‘எங்க முப்பாட்டன் காலத்துல
அங்க ஒரு மரம் இருந்தது.
எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா ‘
![]()



















