உமை
சில மனிதர்கள் பிறந்தது முதல் மற்றும் சிலர் பிறந்த பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பல், கழுத்து கன்னம் ஆகியவற்றில் நோயுள்ளவர்களாகவும் முகத்தில் அதிக வியாதி உடையவர்களாகவும் காணப்படுகின்றனரே அது ஏன்?
சிவன்
நாவினால் மிக்க கடும் சொற்களையும், மற்றவர்களிடத்திலும், பெரியவர்களிடத்திலும் பொய்யையும், கொடும் பழியைச் சொல்லுகிறவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும், தன்னுடைய காரியத்திற்காக பொய்யை மிகுதியாக சொல்லுகிறவர்களாகவும் இருக்கும் மனிதர்களுக்கு நாவினால் பிணிகள் உண்டாகின்றன. கெடுதலை கேட்பவருக்கும், பிறர் செவிகளை கெடுப்பவருக்கும் பலவைகயான காது நோய்களை அடைகின்றனர். பல் நோய், தலை நோய், காது நோய் அனைத்தும் வினையின் பயனே.
உமை
மனிதர்களிலே சிலர் மார்பு நோய், பக்க சூலை, வயிற்று நோய் மற்றும் உள்ள கொடிய சூலை நோயினால் பீடிக்கப்பட்டு துன்பப்படுகின்றனரே, அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமக் குரோதம் கொண்டவர்களாகவும், பிறருக்கு அளிக்காமல் தானே ஆகாரத்தினை உண்பவர்களாகவும், நம்பியவர்களுக்கு உண்ணத்தகாத உணவுகளையும் விஷத்தையும் கொடுத்தும் ஆசாரங்களை விட்டவர்களாகவும் இருப்பவர்கள் பின் ஏதாவது ஒரு முறை மனித பிறப்பு எடுக்கும் போது பலவிதமான பிணிகளால் துயர் பெறுகின்றனர். அவர்கள் இப்படி ஆவதற்கு காரணத்தை முன்னமே செய்து கொண்டனர்.
உமை
மனிதர்கள் கல்லடைப்பு, மது மேகம் போன்ற ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனரே, அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் காமத்தினால் பிறன் மனைவிகளை சேர்ந்தும், விருப்பம் இல்லாத விதவைப் பெண்களுடன் பலவந்தமாக சேர்ந்தும், அழகினால் கர்வப்பட்டும் இருக்கும் மனிதர்கள் மரணமடைந்து பின்னொரு பிறவியில் மனித பிறவி எடுத்து ஆண் உறுப்பு சார்ந்த வியாதிகளால் துயருருகின்றனர்
உமை
சில மனிதர்கள் இளைத்தவர்களாக காணப்படுகின்றனரே, அது ஏன்?
சிவன்
எந்த மனிதர்கள் முன் ஜென்மங்களில் மாமிச உணவை மிக விருப்பி உண்டும், தனக்கு மட்டும் சுவை உள்ள உணவை விரும்பியும், மற்றவர்கள் புசிப்பதை கெடுப்பவர்களாகவும், அயலார் சுகங்களில் பொறாமை கொண்டவர்களாகவும் அதனால் துயரம் உடையவர்களாகவும் இருந்த மனிதர்கள் பின் ஜென்மத்தில் தேக சார்ந்த வியாதி உள்ளவர்களாக நரம்பு தளர்ச்சி உடையவராக இருத்து தீவிர பலனை அனுபவிக்கின்றனர்.
உமை
சில மனிதர்கள் தொண்டை நோய் உடையவர்களாக இருந்து துன்பப்படுகின்றனரே, அது ஏன்?
தொடரும்..