வாருணை ஈசனும் ஒளியுறு உமையும்

( நீண்ட கால விருப்பம் இது. இது குறித்து எழுத நினைக்கும் போதெல்லாம் இதன் எல்லை அற்ற விரிவு என்னை மௌனமாக்கி விடும். காரணங்கள் அற்று ஒரு உந்துதலில் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனை எழுத எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நீக்க மற நிறைந்திருக்கும் சிவனும், சக்தியும், சிவனுக்கு நிகரா இருப்பினும் என்றும் தன்னை தன்னை வெளிப்படுத்தாது அருள் காட்டும் எனது குருவருளும் துணை செய்யட்டும் )
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.
கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்துஉலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.
நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லை, அதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.
எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர், கிருஷ்ணருக்கு அன்பானவர், பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்.
அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு முறை அனைத்தும் அறிந்த தேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினார். உலகத்தினை நிறைவு செய்யும் பிரளம் போன்ற நிகழ்வு உண்டானது. எனவே சிவனிடத்தில் இருந்து பிரளயாக்கினிக்கு நிகரான ஒளி நிரம்பிய மூன்றாவது கண் உண்டானது.
அந்த ஒளி இமயமலையை எரித்துவிட்டது. இதனால் உமை துயருற்றாள். சிவன் குளிர்ந்த மனத்துடன் மீண்டும் இமயமலையை முன்போல் தோற்றுவித்தார்.
உமை : பகவானே, இது எனக்கு மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கிறது. அக்கினி என்பிதாவான இமயமலையை எரித்து விட்டது, மீண்டும் நீங்கள் பார்த்தவுடன் அது முன்போல் ஆனது. அது எவ்வாறு?
சிவன் : நானே எல்லா உலகங்களுக்கும் முதல்வன் என்றறி. எல்லா உலகங்களும் விஷ்ணுவுக்கு எப்படியோ அப்படியே எனக்கும் உட்பட்டவை. விஷ்ணு படைப்பவர், நான் காப்பவன். சிறுமி ஆகிய நீ இதை அறியாமல் என் கண்களை மூடினாய்.சந்திர சூரியர்கள் இல்லாமையால் உலகம் இருளில் மூழ்கியது. எனவே உலகை காக்க மூன்றாவது கண்ணை தோற்றுவித்தேன்.
(யோக மார்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூன்றாவது நேத்ரம் எத்தனை முக்கியமானது என்று அறிவார்கள். இது குறித்து குருமுகமாக அறிக.)
உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?
தொடரும்
*வாருணை  – மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *