2038 – Identity-Shifting Brain Cells

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

Identity-Shifting Brain Cells

Reality

•         The electrical activity of a neuron is considered a fundamental feature of its identity. But new research reveals this attribute is not necessarily fixed, at least in murine cortical inhibitory inter neurons
•         Fast-spiking (FS)  PV cells with a firing delay tended to express high levels of a transcription factor called Er81

•         In the past, the identities and properties of neurons – determined by genetic programs.  It is now identified that neurons are regulated by experience-driven and activity-dependent mechanisms in the adult brain.

Proof

1.
மனைவி – கணவன்
இங்க பாருங்க, உங்க மூளையில 237 * 457 * 528 நியூரான் சரியா ஒர்க் ஆகல, அதால காப்பித்தூள் வாங்கிகிட்டு வரலேன்னு சாக்கு சொல்றீங்க. இப்ப ஒங்களுக்கு தான் காபி கட்.

2.
Team Member – Manager
சார் என் ப்ரென் ல 581 & 645 நியூரான்  சரியா ஒர்க் ஆகல அதால தான் லீவ் சொல்லன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

 3.
அப்பா – மகன்
அப்பா என் ப்ரெய்ன் connectivity ல electrical activity சரியா இல்ல, அதால தான் Maths ல 99.9 எடுத்தேன்னு சொல்றத நான் ஒத்துக்க மாட்டேன்.

4.
காதலி – காதலன்
டேய் டார்லிங், Brain cell shifting left ஆ right ஆ இருக்கட்டும் டா, வண்டிய நேரா பாத்து ஒட்டுடா

5.
நண்பன்  – Electricity board
சார் இது என் ப்ரெண்ட், இவன் brain use பண்ணி கரண்ட் எடுக்க முடியுமான்னு பாருங்க சார். எங்க வீட்ல night lamp எரியல



Loading

சமூக ஊடகங்கள்

பிறவி வாடை

தன்னின் இருப்பை உறுதி செய்ய
இறகு ஒன்றினை
உதிர்த்துச் செல்கிறது
பறவை ஒன்று.
புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஏமாப்பு

செந்நிற சூரியனை
எதிர் கொண்டு செல்லும்
தனிப்பறவை
எப்பொழுது தன் கூடு அடையும்?


*ஏமாப்பு – பாதுகாப்பு,  ஆதாரம்
புகைப்படம் : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஸகுண உபாசனை

நேர் எதிரில் முழு நிலா
நம் இருவருக்கும் எதிரில்.
பெரியதும் சிறியதுமான
கடல் அலைகள்
ஒன்றைத் தழுவி ஒன்று.
மணலை கைகளில் எடுத்து
குவித்து மீண்டும்
மணலில் விடுகிறாய்.
மெல்லிய காற்று
நம் இருவரையும் தொட்டுச் செல்கிறது
பேச்சை தொடவும் தொடரவும்
விரும்புகிறேன்.
உன்னைத் தழுவிச் செல்லும் காற்று
இடமிருந்து வலமாக
என்னைத் தழுவிச் செல்கிறது என்கிறேன்.
‘காற்றுக்கு ஏது இடமும் வலமும்’ என்கிறாய்.
பிறிதொன்றான தருணங்களில்
நாபிச் சொற்கள்
ஒன்றுகின்றன நாதத்தில்.

ஸகுண உபாசனைஇறைவனுக்கு உகந்த குணங்களை அறிந்து, இறை நம்மை அறிந்த உடன் அந்த குணங்களால் இறைமையை உபாசனை செய்யும் முறை.

புகைப்படம் :  HarishKumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி வீடு

எனது ஊர் பேரைத் தாங்கிச் செல்லும்
எல்லா பேருந்துகளும்
இறைத்துச் செல்கின்றன
காலத்தால் மாற்ற முடியா புழுதியையும்,
சில நிதர்சங்களையும்.


புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

2038 – DNA can store digital information

DNA can store digital information
Reality
Model developed by Swiss scientists 
DNA as a method to store the data
It can last upto 2000 years without breaking down
While decoding, no errors
28grams of DNA could store 300000 terabytes.
DNA code is written in sequences of four chemical nucleotides, known as A,C,T and G.
        
Proof
1.
ஏங்க, காய்கறி வாங்கிகிட்டு கொத்தமல்லி, கருவேப்பில வாங்கிகிட்டு வரல.
மறந்துட்டேன்.
இந்த தப்பத்தான் போன தடவையும் சொன்னீங்க. இது உங்களுக்கு 4வது தடவ. இது முன்னால   06-12-2003 12.31 PM, 05-11-2007 6.01 PM, 27-06-2012 7.01 AM, 19-08-2015 8.03 PM ம் தேதிகள்ல இப்படி செஞ்சி இருகீங்க. உடனே நம்ம   டேட்டாவ எடுத்து பாத்திருப்பாளோன்னு நினைக்காதீங்க. எல்லாம் என் ஞாபத்தில் இருந்து சொல்றேன்.
#செத்தாண்டா சேகரு
2.
உங்க பாட்டி தவறிட்டாங்கன்னு இதுக்கு முன்னால 3 தடவ லீவு எடுத்து இருக்கீங்க. 06-06-2006 10.30 AM, 09-05-2009 7.35 PM, 28-03-2013 4.30 PM. ஆனா உங்களுக்கு மொத்தமே 2 பாட்டி இருக்கிறாங்கன்னு  Employee Personal form fillup பண்ணி கொடுத்து இருக்கீங்க. சொல்லுங்க எந்த கம்பெனி interview  க்கு போய்ட்டு வந்தீங்க
3.
Wife : நீங்களும் நானும் 2 வருஷம் லவ் பண்ணும் போது பைக்ல போன தூரம் 27131.56 கிமி. அதுல 34790 தடவ ரைட்ல திரும்பி இருக்கீங்க. 57943 தடல லெஃட்ல திரும்பி இருக்கீங்க. 3 தடவ பொண்ணுங்களை திரும்பி பாத்து இருக்கீங்க. இப்ப ஏன் நீங்க என்ன கவனிக்கறது இல்ல.
Husband : அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா
Wife : No explanation. I want answer.
4.
சார், நாங்கஉத்தம கழுகுகம்பெனியில் இருந்து வரோம். நாங்க DNA storage 
Specialist.
அட போங்க சார், எங்க கேப்டன விட நீங்க டீட்டெல் சொல்ல முடியாது
5.
வானவில் ஜோதிட ஆராய்ச்சி மையம்
1.சார் நீங்க எங்க software ஐ use பண்ணுங்க சார்
2.நாங்க ஏன் உங்க software ஐ use பண்ணனும்?
1.சார் எங்ககிட்ட இருக்கிற டேட்டா வச்சி 2015ல பிரசன்னாவுக்கும் ஸ்னேகவுக்கும் குழந்தை பிறக்கப்போகுதுன்னு சொன்ன முதல் ஆள் நாங்க தான் சார்.
Image : Internet 


Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – செம்பருத்தி

ஒரு நாள் பூ மார்கெட்டில் இருந்தேன்.
இதென்ன, செம்பருத்தி பூப்போல் இருக்கிறதே..
‘என்னா சார், அப்படி பாக்கிற. இது செம்பருத்தி பூ. எடுத்துக்க. 3 பத்து ரூபா. உனக்காக 4 தரேன்’.
டேய் மணி 4.30 ஆச்சு எழுந்திரி. போய் பூ எடுத்து கிட்டுவா.
தூக்கம் தூக்கமா வருது.
‘பூ எடுத்துகிட்டு வந்து சாமிக்கு போட்டா புண்ணியம்’. அன்று கட்டிய பூக்கள் இல்லாத காலம். (காலம் என்ன காலம் 1000 வருஷத்துக்கு முன்னாடியா, இப்பத்தான் 30 வருஷத்துக்கு முன்னாடி)
உறவுகளுடனும், நண்பர்களுடனும் பூவினை  பகிர்தல் என்பது இல்லாத காலம்.
இன்னைக்கு எப்படியும் ராமு வீட்டு அரளியையும், செல்லமா அவர்கள் வீட்டில் செம்பருத்தியையும் அந்த செந்தில் பயல் எடுக்குறத்துக்கு முன்னாடி எடுத்துடனும். உடல் வேகம் கொண்டது.
1.
அப்பாடா இன்னும் யாரும் வரல.அதால எல்லா பூவும் நமக்குத்தான்.
2.
ஓஹோ, இன்னைக்கு நீ அரளிப்பூ எடுக்கறயா. இரு நான் போயி செம்பருத்திப் பூ எடுத்து முடிச்சிடுறேன்.
n
கொஞ்சம் தூங்கிட்டேன். அதனால எல்லாப் பூவையும் அவன் எடுத்துட்டான்.
இரண்டு விதமான செம்பருத்தி. ஒன்று சாதாரண செம்பருத்தி, மற்றொன்று அடுக்கு செம்பருத்தி, ஒவ்வொன்றும் இப்போதைய உள்ளங்கைகளை விட பெரியது. கொஞ்சம் பவழமல்லி(பாரிஜாதம் என்பதை விட பவழமல்லி என்றால் வாசனை கூடத்தான்). பவழமல்லியை ஊசி நூலில் கோர்த்து பட அளவுக்கு போட்டா தனி அழகுதான்.
பெரியவர்களின் பேச்சுக்கள்
1.பாத்துப் போ, பூச்சி பொட்டு (பாம்புதானே) ஏதாவது செடில கிடக்கப் போவுது.
2.ஏண்டா இப்படி இத்தனை விடியக் காலையில வந்து பூ எடுக்குறீங்க. இன்னைக்கு .உங்க வீட்ட சொல்றேன். விடிஞ்ச பிறகு வாங்கடா?
3ஏண்டி கண்ணுகளா, எல்லா பூவையும் எடுத்துகிட்டு போறீங்களே. எனக்கு கொஞ்சம் குடுக்கக் கூடாதா. செல்லம்மா மச்சி (யார் இப்படி ஒரு உறவை சொல்லி முதலில் அழைத்தார்கள்). இது தான் அதிக பட்ச கோவம். ஆனால் எந்த பெரியவர்களும் மனமார திட்டியதில்லை
டேய், மாப்ள ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம கட செந்தில் அதாண்ட ஒன்னோட பூ எடுபான அவன் செத்துப் போயிட்டான் என்ற நண்பன் போனில் சொன்ன நிகழ்வும், போதும்பா எவ்வளவு நேரம் தான் பூவை பாத்துகிட்டே நிப்ப. சீக்ரம் வாங்கு. வீட்டுக்கு போகணும் என்ற மகனின் குரலும் ஒரு சேர ஒலிக்கின்றன.
மலர்கள் மரணிப்பதில்லை. ஏனெனில் அவைகளின் வாசம் எப்போதும் நீங்காமல் இருப்பதால்.

புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

திருவடி சார்பு

வெண்நிற மேகங்களுக்கு இடையில்
பால் நிலா சென்று மறைகிறது.
யாருமற்ற கடல் பரப்பிற்கு அருகினில்
நம் விளையாட்டுகள் தொடர்கின்றன.
நீ நீராகிறாய்
நானும் நீராகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ நிலமாகிறாய்
நானும் நிலமாகி உன் பாதம் தொடுகிறேன்.
நீ காற்றாகிறாய்
நானும் காற்றாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ கனலாகிறாய்
நானும் கனலாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ ஆகாயமாகிறாய்
நானும் ஆகாயமாகி உன்னைத் தொடர்கிறேன்.
பிறிதொரு காலங்களில்
மௌனத்தில் ஒன்றுகிறது
உன் கொலுசின் ஒலி
பிரபஞ்சத்தின் துடிப்புகள் 
அடங்
   கு
       கின்
            ற
                  ன.

ஓவியம் :  Sumitha Sundaram

Loading

சமூக ஊடகங்கள்

புறம் அறுத்தல்

விண் நோக்கி விழி வைத்து இருக்கும்
யாசகம் விரும்பா
யாசகன் ஒருவனை சந்தித்தேன்.
சிந்தனைகள் அற்று
நாணயம் ஒன்றை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில நாணயங்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
மதிப்பு மிக்க காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
வியப்பால் எனக்கான சிந்தனைகள் விரிகின்றன.
‘பொருள் வரின் மகிழ்வில்லையா’ என்கிறேன்.
‘யாசகனுக்கு எதிலும் எப்பொழும் மகிழ்வு தான்’ என்கிறான்.
உயிரின் ஒலி அடங்கும் காலம் உடலில்

புகைப்படம் : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மழைக்கால பக்கோடா

மயிலாடுதுறை பெரிய கடைத் தெருவின் வழியே நடக்கிறேன். நகரின் பிரதான் வீதிகளில ஒன்று அது.
லேசான மழைத் தூறல் தொடங்குகிறது.
கண் முன்னே டிபன் காளியாகுடியும், வானொலி பிரஸும் (மாத வானொலி நிகழ்ச்சிகள் புத்தக வடிவில்) நினைவில் ஆடுகின்றன.
அதிலிருந்து 10 அடி வலது புறத்தில் தள்ளூ வண்டியில் பக்கோடா கடை. பெரும்பாலும் உதிரி பக்கோடா மட்டுமே. அந்த நாளில் சமோசா போன்ற சமாச்சாரங்கள் கிடையாது. (இது என்ன ஊர் பற்றி எழுத ஆரம்பித்த உடன் அந்த நாள் என்றுதானே’ வருகிறது).அத் தெருவில் செல்பவர்கள் அந்த வாசனையை நுகர முடியாமல் செல்ல முடியாது மெல்லியதாய் மொறு மொறு என்று எண்ணை அதிகம் குடிக்காமல் இருக்கும்
டேய் தம்பி(மகனிடத்தில்) சாருக்கு என்ன வேணும்னு கேளு(நான் அப்போது 7வது)
‘எவ்வளவுங்க’.
‘என்ன புதுசா கேட்கிறீங்க. 50 பைசாதான்’. (அப்பா மாதம் தரும் 10ரூபாயில் இது நிச்சயம்.)
என்ன தம்பி பாத்துகிட்டே போர?
40 காசு தான் இருக்கு.
சரி சரி இங்க வா. இப்ப சாப்பிடு. நாளைக்கு மீதி 10 பைசா கொடு. (நாளைக்கு கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா, 10 பைசா கமிஷன் வாங்கிட வேண்டியது தான்)
மழைக்கும் அந்த சூடான பக்கோடாவும் ரொம்ம மேட்ச். பஹூ ருசி.(கடன் வாங்கிய வார்த்தைகள்லாசரா).
தம்பி இன்னொரு பொட்லம் வேணுமா
மத்யமாய் தலை ஆட்டுகிறேன்.
2 நிமிடம்இரு. சூடா போட்டுத் தரேன்.
கேட்கவா வேணும். வயறும் மனமும் நிறைந்த காலங்கள்.
இப்பொழுதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. நினைவு வாசனைகள் நீள்கின்றன.

புகைப்படம்: R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

ஓய்வுறுதல்

தாயத்தில் தொடங்குகிறது
பரமபத வாழ்வு.
சில நேரம் ஏணிகள்
சில நேரம் பாம்புகள்
சில நேரம்  சலனங்கள் அற்று.
அடைந்தபின்
மறுபடியும் தாயம் ஒன்று.
விடியலுக்குப் பின்
ஒய்வு பெருகின்றன

தாயக் கட்டைகளும்.

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சேதித்தல்

அடர்ந்த பெருங்காடு ஒன்றில்
பயணப்பட முற்படுகிறேன்.
சில மரங்களும் கொடிகளும்
பேசத் துவங்கி பின் தொடர்கின்றன.
சில மரங்களின் இலைகள் துளிர் விட ஆரம்பித்து இருகின்றன.
சில மரங்கள் பூத்து இருக்கின்றன.
சில மரங்கள் காய்ந்து இருக்கின்றன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.
காண இயலா பெரும்காடு
கடந்திடவும் வழியில்லை
திரும்பி செல்லவும் காலமில்லைஎன்கின்றன.
காலம் கடந்தவன்என்கிறேன்
பயணப்பட்டுஎதைக் காண விழைகிறாய்என்கின்றன.
பயணமே என் பணிஎன்கிறேன்.
எங்கள் வாக்கினை மறுதலித்தவர்கள்
எங்களில் ஒருவராகி விடுவார்என்கின்றன.
மௌனத்தில்வெற்றி கிட்டுவதில்லை
என்று கூறி பாதங்களை மாற்றி பதிய வைக்கிறேன்.
வெளிர் பச்சை நிற கொடி ஒன்று
என் கால்களை சுற்றத் துவங்குகிறது.
பின் தொடர்கின்றன கொடிகளும், மரங்களும்.
பிறிதொரு நாளில்
மற்றொருவன் பெரும் காட்டில்
பயணப்பட எத்தனிக்கிறான்.
அப்போது
மரங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகி இருந்தது.

*சேதித்தல்வெட்டுதல்திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்

புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

தரித்தல்

சலனமற்ற நீர்ப்பரப்பின் மேல்
பறந்து செல்லும் பறவை ஒன்று
வாயினில் இருக்கும் இரையினை
நழுவ விட்டுச் செல்கிறது.
பெரும் அலைகளுக்குப் பின்
தன் முனைப்பின்றி
அடங்குகின்றன அலைகள்.

*தரித்தல் – ஆதாரமாதல்
புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மீதானப் பெருவெளி

மருத நில மொன்றில்
மனிதன் ஒருவன் எதிர்ப்படுகிறான்.
கருத்த மேனியுடன்
ஆடைகளும் கறுத்து காணப்படுகிறது.
பல ருத்ராட்ஷ  மாலைகளில்
ஒன்று மட்டும் மிகவும் கருமை நிறமுடையதாய்.
ஸ்னேகமாய் புன்னைக்கிறான்.
கைகளை யாசிப்பது போல்
குவிக்கச் சொல்கிறான்.
தன் கைகளில் இருக்கும் நீரை
என் கைகளில் இடுகிறான்.
வெண்நிற மேகங்கள்
நீரில் பிரதிபலிக்கின்றன.
கைகளில் இருப்பது ‘நீரா அல்லது ஆகாயமா’ என்கிறான்.
விடை பகர துவங்குகையில்
தூரத்தில் நாய்கள் விளையாடத்

துவங்கி இருக்கின்றன.

மீதானப் பெருவெளி  – ஞெயம் அளக்கப்படு பொருள்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

அகளம்

எனக்கான வாசகங்களை
யாரோ எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்
பலர் கவிதையாகவும்

சிலர் மௌனமாகவும்.


*அகளம் – வடிவம் அற்றது – திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மேலாம் எழுத்து

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நெருப்பு

காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும்  தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும்  வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும்  சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.
  

* மேலாம் எழுத்துபரநாத ஒலிதிருமந்திரம் – 1212
புகைப்படம் :  Virtualcitizen India

Loading

சமூக ஊடகங்கள்

இறைச் சார்பு

தூக்கத்திலும், துக்கதிலும்
தொலைகிறது இளமைகள்.
கடன் வாங்கி கழித்த

இளமை நினைவுகள் பற்றி 
கழிகிறது முதுமைகள்.


இறைச் சார்பு – மரணம்

Loading

சமூக ஊடகங்கள்

உவாதி

பிஞ்சுக் கைகளால்
ரோஜாப் பூ ஒன்றினை
வரைந்து முடிக்கிறாய்.
பின் வரும் நிமிடங்களில்
அழத் தொடங்குகிறாய்.
காரணம் வினவுகிறேன்.
பூக்கள் வாசனை அற்று இருக்கின்றன என்கிறாய்.
மகளின் வார்த்தைகளின் முடிவில்
தொட்டுத் திரும்புகிறது

எனது இளமைக் காலங்கள்.


*உவாதி – த்யானிப்பவன். திருமந்திரம் – 1202
வடிவ அமைப்பு : சம்யுக்தா செந்தில்

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 17

ஃப்ஸ்ட் செமஸ்டர் மேக்ஸ் அரியரையே இன்னும் முடிக்கல. இந்த புரபசர் எல்லாம் எப்படி ‘Post Dr.’ பண்றாங்க?. இப்படிக்கு மேக்ஸ் புக்கை பரிச்சைக்கு முன் தினம் எந்திரன் ஸ்டைலில் ஸ்கேன் செய்வோர் சங்கம்.
***************************************************************************** 
வாகனத்தில் போகும் போது ‘Horn’ அடித்துவிட்டு, நாமே ஒதுங்கி செல்வது இந்த தாய் திரு தமிழ் நாட்டில் மட்டும் தான். இப்படிக்கு புதுப்பேட்டை போய் வாகனம் வாங்கலாமா என்று 30 மாதங்களாக யோசிப்போர் சங்கம்.
 *****************************************************************************
நாம ஜெராக்ஸ் எடுக்க இவ்வளவு கஷ்ட பட வேண்டியதாக இருக்கு. இவிங்க எப்படி இந்த 750 பக்கம் புத்தகம் எழுதி இருப்பாங்க? இப்படிக்கு எக்ஸாம் முதல் நாள் ஜெராக்ஸ் எடுக்க காத்திருக்கையில் கரண்ட் போனபின் புத்தகம் படிப்பது பற்றி யோசிப்போர் சங்கம்.
***************************************************************************** 
Pre-paid sim card வச்சிகிட்டு rate cutter முடிச்சி 7.01, 9.01 ன்னு முடிற காலுக்கு 1 ரூ இழக்கறவனுக்குத் தான் தெரியும் 1 ரூ வலி. இவன் Rate cutter முடிஞ்து  நண்பனிடன் வாங்கிய பத்து ரூபாய்க்கு recharge செய்து.Call  பேசி. அதில் ஒன்பது ரூபாயை இழந்தவர்கள் சங்கம்.
***************************************************************************** 
நண்பரின் குமுறல்.
பொண்டாட்டிகிட்ட நல்ல பேர எடுக்க முடியாது போலடா.
ஏண்டா?
‘நேத்து ராத்ரி மாடியில காய்ர துணிய எடுத்துகிட்டு வர சொன்னா. ராத்ரி எடுத்துகிட்டு வரல. திட்டுவான்னு காலைல எடுத்துகிட்டு வந்தேன். குளிர்ல எல்லா துணியும் நனைஞ்சி போய் இருக்கு. இத போய் எடுத்துகிட்டு வந்து ஒட்டிக்கி ரெட்டி வேல வக்கிறீங்களே’ அப்படீங்கறா. நான் என்னடா செய்ய?
செத்தாண்டா சேகரு.
***************************************************************************** 
Printer ink எவ்வளவு கெடுதல்ன்னு பேசுறோம். ஆனா, அது பிரிண்ட் ஆன பேப்பரை, பேப்பர் ப்ளேட்டாக பயன் படுத்துகிறோம். இதுல எதாவது கெடுதல் இருக்குமா? இவன் பிரிண்ட் ஆன பேப்பரில் சமோசா சாப்பிட்டு விட்டு, அதில் உள்ள கெமிக்கல் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற துடிப்போர் சங்கம்.
***************************************************************************** 
ஊட்டச்சத்து மிகுந்த குடிநீர். ஒரு வேளை ஏதாவது அரசியல்வாதி இந்த ‘Ad’ ready செய்திருப்பானோ?
11ரூ டிக்கெட்டுக்கு 10 ரூ குடுத்தா 1ரூ சில்லறைய கரிட்டா கேக்கிறான் கண்டக்டர். ஆனா 11ரூ டிக்கெட்டுக்கு 12 ரூ குடுத்தா மீதி சில்லறை இல்லேங்கிறான். அதோட கூடவே நம்மை பிச்சைக்காரனை விட மோசமா பாக்கிறான். இது தான் வாழ்க்கை. இவன் மனைவியிடம் வாங்கிய காசில் தண்ணி அடித்து விட்டு மீதி சில்லறை வாங்காமல் தத்துவவாதி ஆக முயற்சிப்போர் சங்கம்
***************************************************************************** 
சாதாரண பிரசவ செலவில் cesarean டெலிவரி செய்யப்படும். உங்க வியாபார ஆர்வத்திற்கு ஒரு அளவே இல்லையாடா?
***************************************************************************** 
Srusti Montessori School – Drawing, Painting, Music, spoken English/Hindi, abacus etc., உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லயாடா. விட்டா வயத்துல வளர்ர குழந்தைக்கு கூட IIT class க்கு training குடுப்பீங்க போல இருக்குடா.

Loading

சமூக ஊடகங்கள்

வியோமம்

கைகளில் இருக்கும் குழந்தை ஒன்று
விழி உயர்த்தி ஆகாயம் காட்டுகிறது.
ஆகாயத்தின் கூறுகள்
என்னில் பிரதிபலிக்கின்றன
காற்று மண்டலம் தாண்டிய
அது பேசத் துவங்குகிறது.
ஒலிகளின்மூலப் பிரதி நானே,
ஒளிகளும்என்னுள் அடங்கும்என்கிறது.
வார்தைகள் மௌனத்தில் உறைகின்றன.
என்னில்கரையாதவை எவையும் இல்லைஎன்கிறது
‘நானே முதல் படைப்பு.
எல்லை கடந்த பொருள்’ என்றும் கூறுகிறது
உன் உலகம் என் உலகம்
உன் படைப்பு என் படைப்புஎன்கிறது.
‘எனில் எப்பொழுது உன் முழுமையை உணர முடியும்’ என்கிறேன்
‘ஓடு உடைத்தால் நீயே நான்’ என்கிறது.

தொடர்கிறது சங்க நாதம்.

வியோமம் – ஆகாயம், திருமந்திரம் – 1152

புகைப்படம் : Gayu

Loading

சமூக ஊடகங்கள்