சொர்க்க வாசல்

மிகுந்த பசியோடு அறைக்குள் நான்.
பசிக்கிறதா என்கிறாய்.
ஆம் என தலை அசைக்கிறேன்.
கைகளில் இருக்கும் உணவினை
கிள்ளித் தந்துப் புன்னைக்கிறாய்.
உலகத்தில் உள்ள
உணவை எல்லாம் உண்டு
அறியப்படாத சொர்க்கத்தின் அருகினில் நான்.

Loading

சமூக ஊடகங்கள்

நிலாப் பார்த்தல்

நீண்ட இரவுப் பொழுதுகளில்
மகளுடன் கூடிய
நெடும் பயணத்தில்
தலையை திருப்பி நிலாவினை
காண்பித்த பொழுதுகளில்
உணர ஆரம்பித்தேன்
நான் தொலைத்துவிட்ட குழந்தைப் பருவங்களை.

Loading

சமூக ஊடகங்கள்

தேவதையின் அருகில்

நீண்ட நெடும் பயணத்தில்
மகளின் கதை துவங்கியது.
தலையினை மேலும் கீழும் ஆட்டி
எச்சில் விழுங்கி
தொடங்கியது கதை.
ஒரு ஊர்ல ஒரு தேவதையாம்.
துவக்கத்திலே உணர்ந்தேன்
அந்த தேவதையின் அருகாமையை.

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம்


நாத்திகம் பேசி
இருமையை மறுத்து வந்த
காலங்களில்
எங்கிருந்தோ ஓடி வந்து
கழுத்தினைக் கட்டிக் கொண்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சொர்க்கம் என்றால் என்ன அப்பா
என்ற எனது மகளின் கேள்விக்கு
பதில் அறிந்து புன்னகைத்தேன்.


Loading

சமூக ஊடகங்கள்

கடவுளைக் காணல்

மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

Loading

சமூக ஊடகங்கள்

கோபம்


கோபம் கொண்ட தருணங்களில்
கண்களை உருட்டி
கைகளை காட்டி
மிகப் பெரிய மிருகமொன்று
உன்னைக் கவ்விச்செல்லும்
எனும் தருணங்களில்
உங்களை விடவா அப்பா
எனும் மகளின் கேள்விக்கு
என்ன பதில் சொல்வது

Loading

சமூக ஊடகங்கள்

விழியருவி

தங்க சங்கிலி பட்டாசாய்
மகளின் சந்தோஷம்
மனைவியின் விழியருவி

Loading

சமூக ஊடகங்கள்

கடவுளின் பரிச்சயம்


என்ன வாங்கி வந்திருக்கிறாய்
மகள் கேட்கையில்
மறுதலித்து கைகளை
ஆட்டுகிறேன்
யேய் பொய் சொல்ற
என்று கைகளை ஆட்டி
எதிர்ப்படும் வார்தையில்
தென்படுகின்றன
என்றைக்குமான கடவுளின் பரிச்சயம்

Loading

சமூக ஊடகங்கள்

வலி


பள்ளிக் கட்டணம்
கட்ட கடைசி நாள்
மகள் சொல்கையில் வலித்தது
கவிஞனாய் இருப்பதின் வலி

Loading

சமூக ஊடகங்கள்

மகளின் விளையாட்டு


துப்பாக்கி காட்டி
துரத்தியபோது
வலிப்பதாய் நடித்து
கீழே விழுந்தேன்

துப்பாக்கியை என் கையில் கொடுத்து
உன்னை சுடச் சொன்னாய்
விழுந்தது என் உயிர்

Loading

சமூக ஊடகங்கள்

குழந்தைப் பருவங்கள்


திரை மறைவில்
மறைந்து கொண்டு
என்னை கண்டுபிடியுங்கள் பார்கலாம்
என்று மகள் அழைக்கையில் தெரிகிறது
நான் தொலைத்து விட்ட
எனது குழந்தை பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்