மழை தூறலுக்கு முன்பே தொடங்கி விடுகின்றன் மழைக்கான நினைவுகள் ஒரு முறை நான் நடந்து கொண்டிருந்தபோது தொடங்கும் குரல் எனக்கு மழை பிடிக்காது மற்றொரு குரல் ஒலிக்கும் இன்னைக்கு எல்லா பாடலும் மழை பாடல்கள் குரல் மீண்டும் ஒலிக்கும் மழைக்கான புரிதல் தொடங்கும் முன் மழை நிற்கும் மழை நின் பின்னும் நிற்கிறது மனதின் வாசனை
என்றாவது உற்று கவனித்து இருக்கிறீர்களா எனது மகன் அமெரிக்காவில் வேலை பார்கிறான் எனது மகள் சிங்கப்பூரில் இருக்கிறாள் என்று கூறுபவர்களின் தனிமையையும் தனிமை சார்ந்த வலிகளையும்
வாழ்வின் தொடக்கதில் வாழ்க்கைக்கான வண்ணம் எல்லாம். சமாதானதிற்கான நிறம் வெண்மை சக்திக்கான நிறம் சிகப்பு பசுமை நிறம் பச்சை உயிரின் மூலமறிதலில் உண்மையான நிறம் நீலம் என்றார்கள். நாளொடும் பொழுதொடும் நகர்ந்தன என் வண்ணம் எல்லாம். அழகாய் சமுகம் கொடுத்திருகிறது எனக்கு நிறம் நிறமற்றவன் என்று.