அப்பா உனக்கு ஒரு திகில் கதை
சொல்லப் போகிறேன் என்கிறாய்.
திகைக்கும் எனது எண்ணம் தாண்டி
கதையை தொடங்குகிறாய்.
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்.
அம்மா ஊமச்சியாம்
அப்பா செவிடனாம்.
என் இதழ் வழி வழியும்
புன்னகைக்கான காரணம் தெரியாமல் விழிக்கிறாய்.
உருவேறத் திருவேறும்
விருந்து ஒன்றில்
உன்னை விலகி நின்று
சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.
நீண்ட நெடும் கூந்தல்.
வில்லினை ஒத்த புருவம்.
தெறிக்கும் கண்ணின் பார்வைகள்.
மோனப் புன்னகைக்கு
முத்தாய்ப்பாய் மூக்குத்தி
பரவசம் ஏற்படுத்தும் பச்சை ஆடை.
என்னடா இப்படி பார்க்கிறாய்
என்றான் நண்பன்.
வாவி எல்லாம் தீர்த்தம்,
பூசுவது வெண்ணீரு எனும்
அவனுக்கான காலமும் வரும்.
மெட்டி ஒலி என் நெஞ்சை காதொடு தாலாட்ட ..
மூன்று பெண்கள் பேசிக் கொண்டே நடக்க துவங்குகிறார்கள். மெல்லியதாய் humming ஆரம்பிக்கிறது. இந்த humming விஷயங்கள் தற்கால படங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. (உ.ம் – திருமலை – அழகூரில் )
மிக சாதரண நடுத்தர வர்க்கத்தின் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைவீசி நடத்தல், குடத்தில் முகம் பார்த்தல், விரும்பி சுவைக்கும் கடலையில் வீணானதை துப்புதல்.
சொல்ல முடியா சுகம் கொண்டிருக்கும் இறந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
மறந்து போன பழைய தலைமுறையின் சந்தோஷங்களை மீட்டுக் கொண்டுவருகிறது.
காலம் எல்லா காயங்களையும் ஆற்றி விடும் ஆற்றல் உடையது. இசை அதனினும் ஆற்றல் உடையதாய் இருக்கிறது.
மருத்துவர்களின் குறியீடு இது.
பழங்கால குறியீடு இது. இது சூரிய கலை, சந்திர கலை மற்றும் சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த சூரிய கலை, சந்திர கலை இரண்டும் 6 இடங்களில் சேரும். அதுவே ஆறு ஆதாரங்கள்.
மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞா
எல்லா இடங்களுக்கும் தனித்தனி ஆற்றல் உண்டு. குரு முகமாக மேலும் விவரங்களை அறியவும்.
உடல் நீங்கிய உயிர்.
வேடிக்கைகள் எளிதாக்கி
காட்சிகள் என்னுள்ளே.
பகுப்பாய்வுகள் பலவிதமாய்.
பாத அழுக்குகள்
பலதூரம் நடந்திருபதை காட்டுகின்றன
என்றான் ஒரு மாணவன்.
கைகள் அழுக்கானவைகள்.
அதனால் அவன் உழைப்பாளி
என்றான் மற்றொருவன்.
குடித்திருப்பதை குடல் காட்டுகிறது
என்றான் மற்றொருவன்.
இதயத்திலிருந்து வரும் வேர்கள்
கவிஞனாய் காட்டுகின்றன
என்றான் மற்றொருவன்.
எனக்கு உறவானவன் அவன் என்கிறாய் நீ.
உதிர்த்துவிட்ட சொல்லின் முடிவில்
உயிர் பெறுகிறது
உறைந்துவிட்ட ஒரு இதயம்.
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
விஷம் தடவி
வாளினால் தாக்கும்
பெரும் போரளியியை விட
வார்த்தைகளில் லாவகம் உனக்கு.
இரவினில் பாதி உறக்கத்திலிக்கும்
புல்லினமாய் நான்.
போரின் முடிவினில்,
மரணத்திற்குப் பின்வரும்
மற்றொரு வாழ்வினைப் பற்றி
பேசுகிறாய்.
நான் அற்ற இடத்தில்
எனக்கான எச்சங்கள்
இருந்தால் என்ன, இறந்தாலென்ன என்றேன்.
அப்பொழுதும்
அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
பெரும்பாலான பெற்றோர்கள் பயம் கொள்ளும் விஷயம் செவ்வாய் தோஷம்.
அறிவியல் பூர்வமான உண்மைகள்.
செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் உடலில் சூடு அதிகம் இருக்கும். மற்றவர் செவ்வாய் தோஷம் அற்றவராக இருந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பு கடினமாகும். இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பின் குழந்தை பிறப்பினில் குறை இருக்காது.
இது என் வரையினில் உணரப்பட்ட விஷயம்.
மிகப் பெரிய குளிர் பான நிறுவனத்தின் விளம்பரம்.
வயலின் கற்றுக் கொண்டிருக்கிறான் ஒருவன். இருவர் வருகிறார்கள். நன்றாக வாசிக்கிறார்கள். ஆசிரியை வருகிறார். இருவரையும் நன்றாக வாசிப்பதாக கூறி இருவரையும் அனுப்பி விடுகிறார். வயலின் கற்றுக் கொண்டிருப்பனை தன்னுடன் இருக்குமாறு கூறுகிறார்.
அவன் சந்தோஷமாக தலையட்டுகிறான்.
அருவெறுப்பின் உச்ச கட்டம்.
இதற்கு யாரும் மாற்று கருத்து தெரிவித்தார்களா என்று தெரியவில்லை.
மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆச்சார்ய தேவோ பவ;
காலம் நம்மைக் காக்கட்டும்.
சமீபத்தில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். வாசலில் நுழையும் போது இசைக் கச்சேரி. வேண்டாம் மச்சான் வேண்டாம் இந்த .. என்ற பாடல். மிகப் பெரும்பாலான மனிதர்கள் ரசித்தார்கள். (வேறு என்ன சொல்ல)
திருமண தம்பதியருக்கு அன்பளிப்பு அளிக்க காத்திருக்கும் ஒரு கூட்டம். ஒரு புறம் ஏறி, மற்றொரு புறம் இறங்க வேண்டும். தீடிரென இரண்டு பேர் எதிர் முனையில் ஏறி, அன்பளிப்பு கொடுத்து விட்டு இறங்கி விட்டனர்.சினிமா அரங்கமா என சந்தேகம் வந்து விட்டது.
உணவு அரங்கத்தில் மீண்டும் கூட்டம். பந்தி ஆரம்பித்து சாம்பார் தான் சாப்பிடுகிறார்கள். அதற்கும் சரவண பவனில் சீட்டு வைத்து காத்திருப்பது போல். சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் காத்திருக்கும் கூட்டம்.
இந்த அக்கினி நம்மை காக்கட்டும் என்று தொடரும் மந்திரங்கள் எங்கே போயின.
திருமணங்கள் சந்தோஷ தருணங்கள். ஆனால் எது சந்தோஷ தருணங்கள் என்பதில் சந்தேகம்.
விழியில் விழுந்து – இந்த பாடலை பல ஆயிரம் முறை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுமையாகத்தான் இருக்கிறது. காட்சியா, இசையா, பாடலை பாடிய சசிரேகாவா அல்லது வரிகளா தெரியவில்லை. என் சிறு பிராயத்தின் வரிகள் என்பதாலா. எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்… என்ற வார்தைகளின் தொகுப்பா. கோடையில் குளிரினையும், குளிரினில் ஒரு வெம்மையையும் தரும் இந்த பாடலை உங்களுக்கு பிடிக்குமா?