மெருகேறும் மௌனம்

செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.
பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக் வேண்டும்.
அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.
நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.
அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.

புகைப்படம் : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – மாக்கான்

 
 
இது சுமாராக 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக இருக்கலாம்.
மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் ஒருவ(ன்)ர் வருவார். எங்கிருந்து வருகிறார், எங்கு அவருக்கு வீடு, அவருடன் யார் யார் இருக்கிறார்கள என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
மேல் ஆடை தூய வெண்மையாக இருக்கும்.வேட்டி சற்றே வெளுத்த காவி. கைகளில் மிக சுத்தமான ஒரு பித்தளை பாத்திரம். (நிச்சயம் 5 கிலோ இருக்கும்.கிட்டத்தட்ட பாய்ஸ் படத்தில் செந்தில் வைத்திருக்கும் பாத்திரம் போல).
நாங்கள்( 3 பேர்) அவருக்கு வைத்த பெயர் ‘மாக்கான்’. அந்நாளில் அதன் அர்த்தம் தெரியாது.
எல்லா வீடுகளுக்கும் செல்ல மாட்டார். நிச்சயமாக 4 வீடு மட்டுமே. அதுவும் தினசரி அந்த 4 வீடுகளில் மட்டுமே வாங்குவார். அந்த 4 வீட்டிலும் மறுக்காமல் தினமும் உணவளிப்பார்கள்.
இரவில் மிக மெல்லியதாக ஒலிக்கும் வானொலியின் குரலை ஒத்திருக்கும் அவர் குரல்.’அம்மா சோறு போடுங்க‘  இதுவே அவரிடம் இருந்து வரும் அதிகப்படியான வார்த்தைகள்.
இரண்டு மூன்று அறைகள் இருக்கும் வீடுகளில் சில நண்பர்களுடன் ஒளிந்து கொள்வேன். யாருக்கும் கேட்காமல் எல்லோரும் சேர்ந்து கத்துவோம். ‘அம்மா சோறு போடுங்க‘. சத்தம் அதிகமானால் வீட்டு பெண்களிடம் இருந்து அடி விழும்.
சில நாட்களில் கைகளில் இருக்கும் குச்சியால் விரட்ட வருவார். பல நாள் எதுவும் செய்ய மாட்டார்.
 
மூன்று வருடங்கள் தொடர்ந்து அவரை பார்த்திருக்கிறேன்.
பிறகு
அவரைக் காணவில்லை.
இன்றைக்கும் யாராவது யாசித்தால் இந்த ஞாபகம் தவிர்க இயலாதாக இருக்கிறது. எவ்வித காரணும் இன்றி இன்று உங்கள் நினைவு.
நீங்கள் எவ்வடிவத்திலும் இருக்கலாம். என் செய்களுக்காக மானசீகமா மன்னிப்பு கோருகிறேன். 
ஏனெனில் நீங்கள் ‘ப்ரம்மம்’.
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சூன்யம் பயணக் குறிப்புகள்

என்னின் பிரதியாக
எனக்குள் என்னில் இருந்து,
மாயையின் சாயலாக நிழல்.
ஏற்றம் கொள்ளும்;
கண்ணில் பட்டு காலில் விழும்;
மாற்றம் கொண்டு இயல்பு மாறும்;
தருணம் ஒன்றும் தேவையில்லை
தானே தொடர.
தானும் சூன்யமாகும் தருணத்தில்
நேர் கோட்டில் பயணிக்கும்
சூன்யமும்.

நிழலும் புகைப்படமும் :  Sundar

Loading

சமூக ஊடகங்கள்

ஆர்த்த பிறவி

பொம்மைகளுக்கு ஏது தனி வாழ்வு?
ஆட்டுவிப்பவன் இருக்கும் வரையில்
அனு தினமும் ஆடும் பொம்மைகள்.
கயிறு அறுபட்ட பொம்மைகள்
தனித்து வீதி அடையும்.
நாளின் பிற்பகுதியினில்
களிமண்ணில் இருந்து உயிர் பெறும்.
கலைகின்றன பொம்மைகளின் வேஷங்கள்;
கலைகின்றன பொம்மைகளின் கனவுகள்.
நிஜம் தேடும் நித்திய வாழ்வு;
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
மீண்டும்
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
பிறிதொரு நாளில்
அனைத்திற்கும் பிறகும்
நிலைபெற்றிருக்கும் பிரணவாகார ஒலி.
மௌன நாதத்தில் ஒடுங்கும் மனமும்.

புகைப்படம் :  Karthik Pasupathi
*ஆர்த்த பிறவி துயர் கெட – திருவாசகம்

Loading

சமூக ஊடகங்கள்

மௌனச் சொற்கள்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நிலம்





விடியாத இரவொன்றில்
விழி வைத்து வீதி வழி நடக்கிறேன்.
பாதம் கொண்ட பாதைகள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
பாதைகள் மயானம் நோக்கி
பயணிக்கின்றன.
சன்னமாய் கொலுசின் ஒலிகள்
சலங்கைகள் ஆகின்றன.
மயானக் கொல்லை மாதேவியே
மனதில் உன்னைக் கொண்டேன்என்கிறேன்.
என்னைக்கண்டவரும் இல்லை
காலின் சிலம்பு சப்தமும் கொண்டவரில்லை
என் பெருங் கோபம் அறிவாயா என்கிறதுகாளி.
ஊழிப் பெரு முதல்வனுடன் நித்திய தாண்டவம்
உயிர் அறும் சேய்களின் முதலும் முடிவுமான வீடு நீஎன்கிறேன்.
பெரு மூச்சு  ஒன்றை விட்டு நகர்கிறது அக்காளி.
காற்றில் தேயாதிருக்கின்றன
சலங்கைகளின் ஒலிகள் மட்டும்.
புகைப்படம்  : காளியாட்டக்_கலைஞர்_சிவபால்

Loading

சமூக ஊடகங்கள்

புனைவுகளின் அரிதாரங்கள்


ஆதியின் நாள் ஒன்றில்

பிறப்பொன்று நிகழ்ந்தது உயிருக்கு.
நிர்வாணத்தின் தன்மை அறியாது
தினமும் வீதியினில் விளையாடிது அக்குழந்தை.
எவரும் அறியா இரவுப் பொழுதில்
வீதியினை நனைத்தது மழையொன்று.
நிகழ்வறியாது விளையாட்டினை
தொடர்ந்தது அக்குழந்தை.
தொலைவு செல்லும் வாகனமொன்று
வீதி வழி சேற்றை
வாரி இறைத்துச் சென்றது அக் குழந்தைமேல்.
பெருங்கோபமுடன் மழலையில் கோபச்
சொற்களை வீசியது.
பின் தொடரும் வாகனங்களும்
தொடர்ந்தன அந் நிகழ்வை.
பிறிதொரு நாளில்
சொற்கள் அற்று இருந்தது அக்குழந்தை

உடலெங்கும் சேற்றின் படிமங்களை வாங்கியபடி.

புகைப்படம் : சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

படைப்புகள் – அகம் புறம் – ஒரு சிறு பார்வை

(எவரையும் முன்வைத்து எழுதப்படவில்லை)
 
அகம்
 
·   நாம எல்லாம் எழுதினா போட மாட்டாங்க சார். அவங்களுக்குன்னு ஒரு குருப் வச்சிருக்கிறாங்க, அவன்க எழுதினாத்தான் போடுவாங்க.
·   நானும் 15 வருஷமா எழுதிகிட்டுத்தான் இருக்கேன் சார். ஒரு பயலும் மதிக்கிறதே இல்லை சார்.
·   சார், இவன்க எல்லாம் உள்ளுர் எழுத்தாளர்களை கொண்டா மாட்டாங்க, ரஷ்யா எழுத்துக்களை மட்டும் கொண்டாடுவாங்க.
·   முழு நேர படைப்பாளிகள்ன்னு யாரும் இல்ல சார். பொழுது போக்குக்காக படைக்கிறாங்க சார். அப்புறம் என்ன படைக்க முடியும்?
·   ஒரு வார பத்திரிக்கைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்சேன். நல்லா இருக்கு, நல்லா இல்ல அப்படீன்னு கூட பதில் அனுப்ப மாட்டேங்கறாங்க சார்.
·   எல்லாரும் ஈகோ புடிச்சவங்களா இருக்காங்க சார். அவன் தான், அவன் குருப்புதான் ஒஸ்தின்னு நினைக்கிறாங்க.
 
புறம்
 
·   படைப்பாளிகள் யாருமே படிக்கிறதே இல்ல சார். நினைச்சத எல்லாம் எழுதினா எப்படி சார் பத்திரிக்கையில போட முடியும்.
·   தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனோ இல்லையோ, பேனா புடிச்சவன் எல்லாம் கவித, கட்டுரைன்னு எழுத ஆரம்பிச்சா என்ன செய்ய முடியும்எல்லாருக்கும் சுஜாதான்னு நெனப்பு சார்.
·   இலக்கிய பத்திரிக்கைன்னு போட்டேன் சார். 1000 கவிதை வந்திருக்கிறது. என்னா செய்யறது சொல்லுங்க.
·   கதை, கவிதை கட்டுரைன்னு எழுதறாங்க சார், வல்லினிம் ஒற்று, மெய் எழுத்து மிகும் இடம், மிகா இடம் எதுவுமே தெரியல, அப்புறம் எப்டி நாங்க படிச்சி பப்ளிஷ் பண்ண முடியும்.
·   இருக்கும் ரோஜா தோப்பில் அழகான் ஒரு செடி நீ மட்டுமே – இப்படி கவிதை எழுதினா என்ன சார் செய்யறது? (காதுகளில் மெதுவாகஅழகான்அழகானன்னு கூட தெரியல. அதுல கூட தப்பு பார்த்தீங்களா )
·   ஒரு புஸ்தகம் போடறது எவ்வளவு கஷ்டம்ன்னு இவன்களுக்கு தெரிய மாட்டேங்குது. அதான் சார் ப்ராபளமே
·   லாசரா வோட ஜனனி படிச்சிருக்கிறியா, குபாரா வோட விடியுமா படிச்சிருக்கிறியா, 4 படைப்பாளிகள் பேரை சொல்லி கேட்டா இவங்கள் எல்லாம் யாரு அப்படீங்கறாங்க. என்ன செய்ய சொல்றீக.
·   புஸ்தகம் போட்டா Review பண்றேன்னு ஒரு குருப் எல்லாதையும் வாங்கிட்டு போயிடுது. இதுல என்னா மிஞ்சும்ன்னு நினைக்கிறீங்க?
TRB Rating கம்மியாக இருப்பதால் இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைகிறது.
 
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

உறு பொருள்


என்னை முழுவதுமாய் அறிந்தாலும்
விளையாட்டாய் ஆரம்பிக்கின்றன வார்த்தைகள்
சொல் ஒன்றில் விஷம் ஒன்றை ஏற்றி
இதயத்தில் நுழைக்கிறாய்.
கடக்கும் காலமொன்று
கட்டளை இடப்பெற்று கட்டப்படுகிறது.
உனக்கான நாள் ஒன்றில்
மீன்களால் உண்ணப்பட்டு
காத்திருக்கும் எச்சங்களை
கைகளில் எடுத்துக் கொள்.
தேவைகள் அற்று கடலால் வீசி எறியப்பட்ட
பொருள்களில் எனக்கான நினைகளும் இருக்கலாம்.
இரண்டும் இணையும் தருணங்களில்
உனக்கான கண்ணீரில்

முழுமை அற்ற மரணத்தில் முழுமை அடைவேன்.

* புகைப்படம் :  Karthik Pasupathy* உறு பொருள் – தியானிப்பவர்க்கு வந்து உறுவதாகிய பரம்பொருள். – திருமந்திரம் – 4ம் தந்திரம். 952 

Loading

சமூக ஊடகங்கள்

கூடு அடைதல்

தனித்து பறக்கும் பறவை ஒன்று
கானகத்தின் இருளில்
தன் குரலில் ஒலினை மீட்டு எழுப்பி
தன்னை விட்டுச் சென்றது.

புகைப்படம் : Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

சளம்

கடந்த காலங்களின்
கடைசி கட்டங்களில்
உயிர் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது.
தேகம் மாற்றம் கொள்ள ஆரம்பித்தது.
வசந்தங்களின் சாயல் அற்று
வயதானவள் ஒருவள் வருகிறாள்.
யார் நீஎன வினவுகிறான்.
உன்னின்சொல் அம்புகள் வாங்கியவள்
திருப்பித் தர வந்திருக்கிறேன்என்கிறாள்.
இத்தருணத்திலாஎன்கிறான் அவன்
இதுவே தருணம் என்கிறாள்அவள்.
யாரும் அறியா சொற்களை வீசி எறிகிறாள்
அவன் கண்கள் பனிக்க துவங்கின.
மீண்டும் தேகம் மாற்றம் கொள்ள ஆரம்பித்தது.
மீண்டு வந்த உயிர் ஒன்று
தன் சொற்களை திருப்பி தர யத்தனிக்கிறது.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விரைவாக பல மாற்றம் அவ்வுயிரில்.
வரிசை குறையாமல் வருகிறது பெருங் கூட்டமொன்று.
விலகிச்செல்லுங்கள்என்று கட்டளை இட்டு
தன் மடியினில் இருத்திக் கொள்கிறது மூத்த உயிரொன்று.
துடித்த உயிரின் கைகள் கூப்புகின்றன.
காசி பயணத்தின் மந்திரங்கள் உயிரின் காதுகளில்.
யாவற்றையும் கவனியாது
வெய்யில் பார்த்து உறங்கிகொண்டிருந்தது

கருமை நிற நாயொன்று.

சளம் – துன்பம், சளத்தில் பிணிபட்டு – கந்தர் அலங்காரம் பாடல் – 7
புகைப்படம் : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

பொன்னான மந்திரம்

எச்சில் பட்டு தெறிக்கும்
வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகிறதோ இல்லையோ மனம்
மகளின் மௌனங்களுக்கு மட்டும்.

*பொன்னான மந்திரம் – பொன் பொன் போன்றது. வாயால் ஓதக் கூடா மந்திரம். திருமந்திரம் – 4ம் திருமுறை – 906
புகைப்படம் : அபிதா சுந்தர்

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி ஆகுதி

தன் மீது அமரும்
வண்ணத்துப் பூச்சியின்
வலிஅறிந்து இருக்குமா அம்மலர்கள்

புகைப்படம் :  SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

மௌனக் கண்ணீர்

உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்குஎன்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மோன வசி

மழை வருவதாக கூறி
கண்ணாடிக் கதவுகளை சாத்துகிறான் தகப்பன்.
புன்னகைத்து காற்று வரவில்லை எனக் கூறி
கதவுகளைத் திறக்கிறது பெண் குழந்தை ஒன்று.
பாம்பின் வாய்ப்பட்ட தேரையாய்
காலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ரயிலின் சில நிகழ்வுகளை

புகைப்படம் :  Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

முதிர் ஞாபகங்கள்

தேகம் முழுவதும் பூச்சுக்கள் என்றாலும்
தன்னியல்பாய் வெளிப்பட்டு விடுகின்றன
பழைய வாசனைகள்.

புகைப்படம் :  Ravi Shankar

Loading

சமூக ஊடகங்கள்

சொல்லின் வழி மௌனம்

யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சாதக விளைவு

இழப்பதற்கு என்று வந்து
எல்லாவற்றையும்
ஏற்றப்பின் வருகிறது
ஞானத்தின் அடையாளங்கள்.
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 19

மனைவிஏங்கஇனிமே நான் உங்களோட சண்டையே போட மாட்டேன்.
கணவன் : ????
சற்று நேரத்திற்கு பிறகு
மனைவி : நீ எல்லாம் மனுஷனாகடலை பருப்பு வாங்கிகிட்டு வரசொன்னாதொவரம் பருப்பு வாங்கி கிட்டு வந்து இருக்கியேஎன்னாஉங்க ஆத்தா உன்னை பெத்து வச்சிருக்கிருகாளோ?
கணவன் : கொஞ்சம் நேரத்துக்கு முன்னால தானே சண்ட போட மாட்டேன்னு சொன்ன?
மனைவி : ஆமாசொன்னந்தான்இன்னைக்கு தேதிய பாரு. 01-Apr-2015
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
கன்னியாக்குமரி – 15 வது மொட்டை மாடியில் 2 நண்பர்கள்
வீட்ல ரொம்ப பிரச்சனடா
என்னடா ஆச்சு
மொத நாளு தண்ணி பிரச்சனைபக்கெட்ல தண்ணி புடிச்சி வைங்க அப்படீங்கறாஅடுத்த நாளு பக்கெட் தண்ணில கொசு முட்டை போடுதுபுடிக்காதீங்க அப்படீங்கறாஎன்னடா செய்யறது.
செத்தாண்டா சேகரு.
———————————————————————————————————————————————————
சார்உக்காருங்கஅந்த கம்பில உக்காரலம் வா சார் வா. 5 பேர் தான் —உள்ள உக்காந்து கீராங்கஇவன் ஆட்டோவில் மினி பேருந்து 
கூட்டத்தை ஏற்ற முயற்சிப்போர் சங்க தலைவன்.
———————————————————————————————————————————————————
உலகின் உன்னதமான நிமிடங்கள்
ATM ல் எல்லா details ம் enter செய்து மிஷினில் பணம் count செய்து வெளியே வரும் நிமிடங்கள்.
———————————————————————————————————————————————————
பூரி மசால்ல மசால் இருக்குமசால் தோசைல மசால் இருக்குஆனா மசால் வடைல மசால் இல்லையேஇவன் 10 மசால் வடையை ஒரே நேரத்தில் சாப்பிடுவோர் சங்கம்,
———————————————————————————————————————————————————
சந்தோஷத்த கொண்டாடுரத்துக்கும் காசு தேவையா இருக்கு., கஷ்டத்த கொண்டாடுரத்துக்கும்  காசு தேவையா இருக்கு.
.ம் – சரவணபவன் 2 காபி – 56 ரூ
Chandra park 2 பீர் – ரூ 450(Including tips).
என்னடா வாழ்க்கை இது?
———————————————————————————————————————————————————
எனக்கும் ஜூஸ் கடையில் இருக்கும் பெண்ணுக்கும் நடைபெற்ற உரையாடல்
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
புரிலங்க.
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
தெளிவா சொல்லுங்க
தர்பூசணி ஜீஸ் ஒன்னு கொடுங்க
….
Watermelon ஜீஸ் ஒன்னு கொடுங்க.
 Watermelon ஜீஸ்சாஅப்படி தெளிவா கேளுங்க சார்.
அட பிக்காளிப்பயலுகளா.
———————————————————————————————————————————————————
வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை எந்த வாகனமும் செல்ல இயலா நிலை. 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கிறேன்எரிச்சலாக திரும்பி வெளியே பார்க்கிறேன்.
வெளியே நிற்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கிறது ‘தனிக்காட்டு ராஜா‘.
என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கி போச்சு.
———————————————————————————————————————————————————
IT ல் வேலை பார்ப்பவர்களை எளிதாக கண்டறியும் வழி(General)
31st : Lets go to Saravanabhavan machi
1st : மச்சான் ஒரு டீ சொல்லுடாகைல காசு இல்ல
———————————————————————————————————————————————————
ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக  நடை மேடை மேல் நடந்து கொண்டிருக்கிறேன்.
முதலாவது பிளாட்ஃபாமில் இருந்து இன்னும் சில நிமிடங்களில்….ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டோய்ங்.,,, டோய்ங்.,,,  (Doppler effect )
ஓட்டமும் வேகமும் குறைகிறது.
யாருடைய தொலை பேசியிலோ Ring tone. அழகிய கண்ணேஉறவுகள் நீயே
வினாடிக்குள் உலகம் நிலைபெறுகிறது.
அந்த மனிதர் நகர்ந்து விட்டார்.
சுய நினைவு திரும்புவதற்குள் ரயில் சென்றிருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

மௌனவாடை

மனிதர்கள் வீசிச் சென்ற
அத்தனை வார்த்தைகளையும்
உள்வாங்கி
அமைதியாக இருக்கிறது
கடற்கரை மணல்கள்.


புகைப்படம் :  Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

கடந்து போதல்

வழிந்தோடும் நீரில்
விளையாடுகின்றன மீன்கள்.
இரை குறித்த இலக்கோடு
பறந்துவந்து கொத்திச் செல்கிறது
மீன்கொத்தி ஒன்று.
உயிர் வாழ்தலும், உணவு குறித்த
எண்ணங்களோடும்
வாகனத்தில் விரைந்து விரைகிறது

மற்றொரு உயிர்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்