அறிவியல் – அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.
பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.
‘என்ன வேண்டும்’ – கத்ரு
‘என் தாய் விடுதலை’ – கருடன்
‘அது இயலாது’ – கத்ரு
‘அது நிகழ என்ன செய்யவேண்டும்’ – கருடன்
‘தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்’ – கத்ரு
பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.
கத்ரு, ‘அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா’
கருடன், ‘ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், ‘
கத்ரு,’ வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு’
கருடன்,’அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல’ என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.
தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் – இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)
1.அனுபவம் 2.அனுமானம் 3.ஆப்தவாக்கியம்.
1.அனுபவம் – தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)
2.அனுமானம் – பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)
வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?
ஆன்மீகம் – போகும் காரியத்தில் தடங்கல் வரும்.
அறிவியல் – தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.
கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் – மூலம் – மகாபாரதம் – M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு – நாகங்களின் தாய்
வினதை – அருணன் மற்றும் கருடனின் தாய்.
ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.
அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.
அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் ‘வால் கருப்பாக தெரியும் ‘என்றும், ‘நான் ஜெயித்து விடுவேன்’ என்றும் உரைக்கிறாள். நாகங்கள் ‘நீ தவறு செய்கிறாய்’ என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.
வினதை அடிமையாகி விடுகிறாள்.
அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். ‘அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்’ என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் – என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், ‘பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் ‘பதி’ குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.
எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.
பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் – திருமந்திரம் – உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )
நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும். அவ்வாறு அல்லாது, 1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்) 2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று) 3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)
அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும். எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும். சித்து – அழியாதது. அ – சித்து – அழியக் கூடியது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம். (மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில் வைத்து உறங்குதல் கூடாது?
ஆன்மீகம்– கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.
அறிவியல் – உடல் முழுவதும், தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும். தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.
ஆன்மீகம் மஹாலக்ஷ்மி சம்மந்தப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும்.
அறிவியல்
1. The Density for Gold is – 19.3 g. The electrical conductivity of silver at 293°K is 62.9e6 (1/Ωcm); the conductivity of gold is only 48.7e6 (1/Ωcm) (in both cases, e is being used as the ten’s exponent). That means Silver is a better conductivity than Gold.
2. புவி ஈர்ப்பு ஆற்றலுக்கு எதிராக செயல்பட தங்கத்திற்கு ஆற்றல் குறைவு. அது உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.
பரிகாரங்களுக்காக கோயிலை வலம் வருதல் வழக்கமாக இருப்பது ஏன்?
ஆன்மீகம் – எல்லா கோவில்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும். அவைகள் நம்மீது படும் போது நம்மில் செயல் இழந்து இருக்கும் ஆற்றல் வலிமை பெறும்.
அறிவியல் – 1. பழமையான கோவில்களின் சுற்றளவுகள் மிகவும் பெரியவை. நடந்து செல்லுதல் அல்லது வலம் வருதல் என்பது இரத்த ஓட்டதை அதிகப்படுத்தும். 2. முழுமையான சுவாசம் நடைபெறும். அதனால் இதயத் துடிப்புகள் சீராகும்.
3.புதிய மனிதர்களை/பழைய நண்பர்களை சந்திப்பதால் மன நிலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழும்.
காதலில் பல வகைகள் உண்டு. பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன. தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன. தோழியினடத்தில் கேட்கிறாள்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் – முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள். மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.
இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’ என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு வேலையைச் செய்கின்றன். காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)
எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள். தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.
அவனது தாளை சரணடைந்தாள். வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.
சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.
சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.
த்வைதம் – இருமைப்பற்றி பேசும் அத்வைதம் – -ஒருமைப்பற்றி பேசும் விசிஷ்டாத்வதம் – இருமை ஒன்றாதல் பற்றி பேசும் சைவம் – மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்
பதி – இறைவன் பசு – உயிர்கள் பாசம் – இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.
ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும் (காணாபத்தியம் – கணபதி முதன்மை, கௌமாரம் – முருகன் முதன்மை, சௌரம் – சூரியன் சைவம் – சிவன் முதன்மை, வைஷ்ணவம் – விஷ்ணு முதன்மை, சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.
இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் – என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி – பதி.
விபூதி தயாரிக்கும் முறை.(சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி 2. அனுகற்ப விதி 3. உப கற்ப விதி
1. கற்ப விதி பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்ட வேண்டும். பின்னர் அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. அனுகற்ப விதி காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
3. உப கற்ப விதி காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
பலன்கள். தலையினில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும். அனுஷ்டானம் செய்பவர்கள் 16 இடங்களில் தரிப்பார்கள்.(12 எனக் கொள்வாரும் உண்டு)
பெரும்பாலான பெற்றோர்கள் பயம் கொள்ளும் விஷயம் செவ்வாய் தோஷம்.
அறிவியல் பூர்வமான உண்மைகள்.
செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் உடலில் சூடு அதிகம் இருக்கும். மற்றவர் செவ்வாய் தோஷம் அற்றவராக இருந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பு கடினமாகும். இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பின் குழந்தை பிறப்பினில் குறை இருக்காது.
அந்தக்கரணம் என்பதற்கு மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் இவற்றின் கலவை என்பது ஒரு பொருள். உள் முகமாக நோக்குதல் என்பது மற்றொரு பொருள். எனக்கு புகட்டப்பட்ட அனுபவங்களை பகிர்தல் மட்டுமே நோக்கம். குற்றம் இருப்பின் குறை உடைய மனிதப்பிறப்பின் நிகழ்வுகள் காரணமாகும். நிறை இருப்பின் அனைத்தும் குருவருளையே சாரும்.