ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.