Category: அனுபவம்
தேவைகள்
மனக் குறுக்கம்
சம்சயம்
மிலேச்ச தேசம்
ஒருபுள்ளியில் உருவம் அற்று
வெற்றிடத்தில் வேண்டுவன தந்து
தவித்து, தனித்து
நிழலாடி
கனவினை விதைக்கிறது
உன் வரைபடங்கள்.
எண்ணப் பகிர்தலுக்கு
எதிர் அணியில் நான்.
காட்சிகள் கவிதையாக்கம்
கொள்கின்றன.
எட்டும் தூரத்தில் ஒரு குரல்
‘கட்டைல போறவன்
தின்னுட்டு சாமி கும்பிட வேண்டியதுதானே’
*மிலேச்ச தேசம் – மரபுகளைக் கைவிட்ட தேசம்
முடிவற்றவைகள்
நனைதல்
நெருப்பினை சுமத்தல்
பெருங்குரலுடன் முழுவதுமான
கரு நெருப்பினை சுமந்து ஒருவன்.
என்னை அவனிடத்திலிருந்து விலகச் சொன்னான்.
‘பேசினால் மற்றவர்களையும்
அது பற்றும் என்றும்’ சொன்னான்
பிறந்தது முதல்
நெருப்பினை சுமந்திருப்படதாகச் சொன்னான்.
பிறந்த நாளில் அதன் நிறம் மஞ்சளாக
இருந்தாகவும் ,
நாள்களின் வளர்ச்சியில்
பல நெருப்புகள் சேர்ந்ததாகவும்
அது சிகப்புடன் கூடிய நீலமாகவும்
தற்போது ஒளி குறைந்து
கருமையானது என்றும் உரைத்தான்.
உரைத்த பொருள் உணர்வதற்குள்
பரவியது என்மேலும் என்னுள்ளும்.
நிரந்தரா
யாருமற்ற இரவு
ஓளி நிரம்பியதாகவும்,
புகை நிரம்பியதாகவும்,
இருக்கிறது.
எனக்கான பேச்சுகள்
தொடர் அருவியாக.
மௌனத்தின் சாட்சியாக நீ.
விடை பெறுதலுக்கான
ஆயத்தங்களைச் செய்கிறாய்.
கனத்துப் போகிறது இதயம்.
‘என்றைக்கு வருவாய்’ என்கிறேன்.
‘என்றும் எங்கும் இருப்பவள் நான்,
வருவதும் போவதும் உன் நினைவுகள் தான்’ என்கிறாய்.
இன்னும் கனத்துப் போகிறது.
யானை காடு திரும்பிய கதை
அடர்ந்த பெருங்காட்டிலிந்து
கனத்த சரீரத்துடன்
பெரும் யானை ஒன்று
பிளிரி ஓடிவந்தது.
ஓட்டத்திற்காண காரணம் கேட்டேன்.
‘காட்டில் உணவு இல்லை’ என்றும்
‘வற்றிய நீர் நிலைகளும்
தனக்கானவை அல்ல’ என்றும் கூறியது.
பெரு நிலத்தில்
வேளா வேளைக்கு உணவு என்றும்,
தன் குளியளுக்கு பிற ஆள் எனவும்,
வித விதமான மனிதர்கள் தினமும் எனவும்,
வாழ்க்கை வசீகரமானது எனவும்
பகன்றது.
காலத்தின் சுழற்சிதனில்
அதன் கடைநாளில்
சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.
மனிதத் தேவையில்
விலங்குகளின் தேவைகள்
வெகுதூரம் என்று கூறி
காட்டை நோக்கிப் புறப்பட்டது.
வார்த்தைகளின் ரசவாதம்
தாடகை
‘எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன
அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ *
எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
‘செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.
திருமணத்தின் விலை
தொடரும் தொடர்கதைகள்
வீட்டினை சுத்தம் செய்வதாக செயல்கள்,
என்றைக்கோ மறந்து போன பேனா,
இது அவனிடம் இருந்து பெறப்பட்டது
கூடவே நினைவுத் தொடர்கள்;
இந்த பேப்பரை தான் இத்தனை நாள் தேடினேன்,
கூடவே நினைவுத் தொடர்கள்;
நீண்ட நாட்களாக படிக்க இருந்த புத்தகம்
இன்று கிடைத்திருக்கிறது
கூடவே நினைவுத் தொடர்கள்;
என்றைக்கோ எடுத்த போட்டோ
இப்பொழுது இங்கு இருக்கிறது
கூடவே நினைவுத் தொடர்கள்;
பல நாட்களுக்கு முன் பார்த்த
சினிமா டிக்கட்
கூடவே நினைவுத் தொடர்கள்
சுத்ததின் முடிவில் எல்லா பொருள்களும்
அதனதன் இடத்தில் அப்படியே
சில நினைவுக் குறிப்புகளுடன்.
தகப்பனின் சூல்
லீலாவினோதினி
ஞானம் பிறந்த கதை
முழு நிலவில் குளுமையின்
அருகருகினில் நீயும் நானும்.
பேச்சுகள் திசைமாறி
கனவுகள் பற்றிச் செல்கிறது.
என் கனவு முழுவதும்
நாய்கள் என்று உரைக்கிறேன்.
விதவிதமான நாய்களும்
தோற்றங்களும் என்கிறேன்.
முழுவதுமாய் விளக்கச் சொல்கிறாய்.
சில நாட்களில்
அவைகள் என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
பற்கள் விரிய கோபம் கொள்கின்றன.
சில நாட்களில்
காலை நேரத்து நாய்களாக என்னிடம் விளையாடுகின்றன.
சில நாட்களில்
தேடிய முகம் கண்ட மகிழ்ச்சியோடு ஓடி வருகின்றன.
சில நாட்களில்
இருப்பினை தவிர்த்துவிடுகின்றன என்று உரைத்து.
இதைத் தவிர்க்க வழி கேட்கிறேன்.
‘விழித்திரு’ என்கிறாய்.
ஞானத்திறவு கோலாய் உன் வாக்கு.
சாயை
தபஸ்
வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
‘என்னைப் பிடிக்குமா’ என்கிறாய்.
‘மிகவும் பிடிக்கு’ம் என்கிறேன்.
‘எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா’யா என்கிறாய்.
‘மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்’ என்கிறேன்.
‘நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே’ என்கிறாய்.
‘உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்’ என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.