சொல்லுக்கும் சொல் பிறக்கும்
இடத்திற்கும் இடையில் போராட்டம்
முடிவில் வென்றது மௌனம் மட்டுமே.
![]()
உருவேறத் திருவேறும்
![]()
ஏரி சலனமற்று இருந்தது
காற்றில் ஆடி சில காகிதங்கள் அதன் அருகில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சில சிறுவர்கள் கல் எறிந்து தவளை கண்டார்கள்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
மரங்கள் இலைகளை உதிர்த்தன ஏரியில்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
உவகை பொங்க மழைத்துளி ஈன்றது வானம்
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
சிறு குழந்தைகள் கைகளை நனைத்தன.
அப்போதும்
ஏரி சலனமற்று இருந்தது.
பெரும் மாற்றங்களுக்குப் பின் பிணம் ஒன்று மிதந்தது
அப்போதும்
ஏரி நிரம்பி சலனமற்று இருந்தது.
![]()
உடைந்து கிடக்கும்
ஒவ்வொரு பொருளும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
எரியும் நெருப்புகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
அறைக்கும் அசையும் காற்றுகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன
நீரும், நீர்த் துடிப்பும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
கூடும் நீல மேகங்களும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
ஒன்றிலும் நிலைபெறாமலும்
ஒன்றாமலும் மனம் மட்டும்.
Click by : Ramaswamy Nallaperumal (Ramaswamy N)
![]()