சொல்லின் வழி மௌனம்

யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

சாதக விளைவு

இழப்பதற்கு என்று வந்து
எல்லாவற்றையும்
ஏற்றப்பின் வருகிறது
ஞானத்தின் அடையாளங்கள்.
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

மௌனவாடை

மனிதர்கள் வீசிச் சென்ற
அத்தனை வார்த்தைகளையும்
உள்வாங்கி
அமைதியாக இருக்கிறது
கடற்கரை மணல்கள்.


புகைப்படம் :  Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

கடந்து போதல்

வழிந்தோடும் நீரில்
விளையாடுகின்றன மீன்கள்.
இரை குறித்த இலக்கோடு
பறந்துவந்து கொத்திச் செல்கிறது
மீன்கொத்தி ஒன்று.
உயிர் வாழ்தலும், உணவு குறித்த
எண்ணங்களோடும்
வாகனத்தில் விரைந்து விரைகிறது

மற்றொரு உயிர்.

புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

பிறவி வாடை

தன்னின் இருப்பை உறுதி செய்ய
இறகு ஒன்றினை
உதிர்த்துச் செல்கிறது
பறவை ஒன்று.
புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஏமாப்பு

செந்நிற சூரியனை
எதிர் கொண்டு செல்லும்
தனிப்பறவை
எப்பொழுது தன் கூடு அடையும்?


*ஏமாப்பு – பாதுகாப்பு,  ஆதாரம்
புகைப்படம் : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஸகுண உபாசனை

நேர் எதிரில் முழு நிலா
நம் இருவருக்கும் எதிரில்.
பெரியதும் சிறியதுமான
கடல் அலைகள்
ஒன்றைத் தழுவி ஒன்று.
மணலை கைகளில் எடுத்து
குவித்து மீண்டும்
மணலில் விடுகிறாய்.
மெல்லிய காற்று
நம் இருவரையும் தொட்டுச் செல்கிறது
பேச்சை தொடவும் தொடரவும்
விரும்புகிறேன்.
உன்னைத் தழுவிச் செல்லும் காற்று
இடமிருந்து வலமாக
என்னைத் தழுவிச் செல்கிறது என்கிறேன்.
‘காற்றுக்கு ஏது இடமும் வலமும்’ என்கிறாய்.
பிறிதொன்றான தருணங்களில்
நாபிச் சொற்கள்
ஒன்றுகின்றன நாதத்தில்.

ஸகுண உபாசனைஇறைவனுக்கு உகந்த குணங்களை அறிந்து, இறை நம்மை அறிந்த உடன் அந்த குணங்களால் இறைமையை உபாசனை செய்யும் முறை.

புகைப்படம் :  HarishKumar

Loading

சமூக ஊடகங்கள்

திருவடி சார்பு

வெண்நிற மேகங்களுக்கு இடையில்
பால் நிலா சென்று மறைகிறது.
யாருமற்ற கடல் பரப்பிற்கு அருகினில்
நம் விளையாட்டுகள் தொடர்கின்றன.
நீ நீராகிறாய்
நானும் நீராகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ நிலமாகிறாய்
நானும் நிலமாகி உன் பாதம் தொடுகிறேன்.
நீ காற்றாகிறாய்
நானும் காற்றாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ கனலாகிறாய்
நானும் கனலாகி உன்னைத் தொடர்கிறேன்.
நீ ஆகாயமாகிறாய்
நானும் ஆகாயமாகி உன்னைத் தொடர்கிறேன்.
பிறிதொரு காலங்களில்
மௌனத்தில் ஒன்றுகிறது
உன் கொலுசின் ஒலி
பிரபஞ்சத்தின் துடிப்புகள் 
அடங்
   கு
       கின்
            ற
                  ன.

ஓவியம் :  Sumitha Sundaram

Loading

சமூக ஊடகங்கள்

புறம் அறுத்தல்

விண் நோக்கி விழி வைத்து இருக்கும்
யாசகம் விரும்பா
யாசகன் ஒருவனை சந்தித்தேன்.
சிந்தனைகள் அற்று
நாணயம் ஒன்றை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில நாணயங்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
மதிப்பு மிக்க காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
வியப்பால் எனக்கான சிந்தனைகள் விரிகின்றன.
‘பொருள் வரின் மகிழ்வில்லையா’ என்கிறேன்.
‘யாசகனுக்கு எதிலும் எப்பொழும் மகிழ்வு தான்’ என்கிறான்.
உயிரின் ஒலி அடங்கும் காலம் உடலில்

புகைப்படம் : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஓய்வுறுதல்

தாயத்தில் தொடங்குகிறது
பரமபத வாழ்வு.
சில நேரம் ஏணிகள்
சில நேரம் பாம்புகள்
சில நேரம்  சலனங்கள் அற்று.
அடைந்தபின்
மறுபடியும் தாயம் ஒன்று.
விடியலுக்குப் பின்
ஒய்வு பெருகின்றன

தாயக் கட்டைகளும்.

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சேதித்தல்

அடர்ந்த பெருங்காடு ஒன்றில்
பயணப்பட முற்படுகிறேன்.
சில மரங்களும் கொடிகளும்
பேசத் துவங்கி பின் தொடர்கின்றன.
சில மரங்களின் இலைகள் துளிர் விட ஆரம்பித்து இருகின்றன.
சில மரங்கள் பூத்து இருக்கின்றன.
சில மரங்கள் காய்ந்து இருக்கின்றன.
சில மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.
காண இயலா பெரும்காடு
கடந்திடவும் வழியில்லை
திரும்பி செல்லவும் காலமில்லைஎன்கின்றன.
காலம் கடந்தவன்என்கிறேன்
பயணப்பட்டுஎதைக் காண விழைகிறாய்என்கின்றன.
பயணமே என் பணிஎன்கிறேன்.
எங்கள் வாக்கினை மறுதலித்தவர்கள்
எங்களில் ஒருவராகி விடுவார்என்கின்றன.
மௌனத்தில்வெற்றி கிட்டுவதில்லை
என்று கூறி பாதங்களை மாற்றி பதிய வைக்கிறேன்.
வெளிர் பச்சை நிற கொடி ஒன்று
என் கால்களை சுற்றத் துவங்குகிறது.
பின் தொடர்கின்றன கொடிகளும், மரங்களும்.
பிறிதொரு நாளில்
மற்றொருவன் பெரும் காட்டில்
பயணப்பட எத்தனிக்கிறான்.
அப்போது
மரங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகி இருந்தது.

*சேதித்தல்வெட்டுதல்திருவந்தியார்மெய்கண்ட சாத்திரம்

புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

மீதானப் பெருவெளி

மருத நில மொன்றில்
மனிதன் ஒருவன் எதிர்ப்படுகிறான்.
கருத்த மேனியுடன்
ஆடைகளும் கறுத்து காணப்படுகிறது.
பல ருத்ராட்ஷ  மாலைகளில்
ஒன்று மட்டும் மிகவும் கருமை நிறமுடையதாய்.
ஸ்னேகமாய் புன்னைக்கிறான்.
கைகளை யாசிப்பது போல்
குவிக்கச் சொல்கிறான்.
தன் கைகளில் இருக்கும் நீரை
என் கைகளில் இடுகிறான்.
வெண்நிற மேகங்கள்
நீரில் பிரதிபலிக்கின்றன.
கைகளில் இருப்பது ‘நீரா அல்லது ஆகாயமா’ என்கிறான்.
விடை பகர துவங்குகையில்
தூரத்தில் நாய்கள் விளையாடத்

துவங்கி இருக்கின்றன.

மீதானப் பெருவெளி  – ஞெயம் அளக்கப்படு பொருள்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

மேலாம் எழுத்து

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நெருப்பு

காலத்தின் சுழற்சியில்
நான் என்னில் இருந்து விலகுகிறேன்.
உடல் மட்டும் பிரகாசமாய் நெருப்பில்
எரிந்து கொண்டு இருக்கிறது.
தோழமையாய் ஒரு பேச்சினை
தொடங்குகிறது ஆதி நெருப்பு.
சுற்றிலும் மணி ஓசைகள் ஒலிக்கின்றன
‘உன் உருவாக்கத்திற்கு காரணம் நானே
என்னில் புனிதப்படாதவை எதுவும் இல்லை’ என்கிறது
சுற்றிலும்  தாள வாத்தியங்கள் ஒலிக்கின்றன.
‘ஆதி பசியினை நீ அறிவாயா,
நெற்றிக்குள் சுடர் கொண்டவன்
இன்னுமா நீ அறியவில்லை என்கிறது
சுற்றிலும்  வண்டுகள் ஒலிக்கின்றன.
பொருள்களை தூய்மை செய்வது என் பொருப்பு.
உலகப் பொருள்களில் நீ இருப்பதால் நீயும் என் பொருப்பு என்கிறது.
சுற்றிலும்  சங்க நாதம் தொடர்கிறது.
இடம் பெயர்தலில் என் பங்கு முக்கியமானது என்கிறது.
சுடர் அடங்க தொடங்குகிறது.
தொடர்கிறது பிரணவ கார ஒலி.
முற்றுப் பெறுகிறது நீண்ட நெடும் பயணம்.
தொடங்குகிறது புதிய விதிமுறைகளுடன்
ஆட்டம் ஒன்று.
  

* மேலாம் எழுத்துபரநாத ஒலிதிருமந்திரம் – 1212
புகைப்படம் :  Virtualcitizen India

Loading

சமூக ஊடகங்கள்

இறைச் சார்பு

தூக்கத்திலும், துக்கதிலும்
தொலைகிறது இளமைகள்.
கடன் வாங்கி கழித்த

இளமை நினைவுகள் பற்றி 
கழிகிறது முதுமைகள்.


இறைச் சார்பு – மரணம்

Loading

சமூக ஊடகங்கள்

வியோமம்

கைகளில் இருக்கும் குழந்தை ஒன்று
விழி உயர்த்தி ஆகாயம் காட்டுகிறது.
ஆகாயத்தின் கூறுகள்
என்னில் பிரதிபலிக்கின்றன
காற்று மண்டலம் தாண்டிய
அது பேசத் துவங்குகிறது.
ஒலிகளின்மூலப் பிரதி நானே,
ஒளிகளும்என்னுள் அடங்கும்என்கிறது.
வார்தைகள் மௌனத்தில் உறைகின்றன.
என்னில்கரையாதவை எவையும் இல்லைஎன்கிறது
‘நானே முதல் படைப்பு.
எல்லை கடந்த பொருள்’ என்றும் கூறுகிறது
உன் உலகம் என் உலகம்
உன் படைப்பு என் படைப்புஎன்கிறது.
‘எனில் எப்பொழுது உன் முழுமையை உணர முடியும்’ என்கிறேன்
‘ஓடு உடைத்தால் நீயே நான்’ என்கிறது.

தொடர்கிறது சங்க நாதம்.

வியோமம் – ஆகாயம், திருமந்திரம் – 1152

புகைப்படம் : Gayu

Loading

சமூக ஊடகங்கள்

பரப்பினன்

பஞ்ச பூத கவிதை வரிசையில்காற்று


கனத்த மௌனம் கொண்ட

நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
மற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
‘யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது’ என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்

கலந்திருக்கிறது பிண வாடைகள்.

பரப்பினன்பரப்பினள் என்பதன் ஆண்பால்ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாக விளங்குபவன், திருமந்திரம் – 1070

புகைப்படம்இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

ஆமம்

கணிப் பொறியில்
நீர் பற்றி கவிதை எழுத
துவங்குகையில்
திரைமேல் சலனங்கள் அற்று
விரைந்து செல்கிறது எறும்பொன்று.


* ஆமம் – உணவு – திருமந்திரம் – 1212
புகைப்படம் :  Mahendiran Thiru


Loading

சமூக ஊடகங்கள்

பரவாதனை

மிகவும் சிறியதான உணவகத்தில்
விலைப் பட்டியல் பார்த்து
ஒரு சிங்கில் பூரிஎன்கிறான் ஒருவன்.
அவனுக்குஒரு பூரி செட்டும் ஒரு தோசையும்என்கிறான்
அவன் நண்பன்.
இமை விலகா அவன் விழிநீரின் ஒசைகள்
என் காதுகளில் மட்டும்.
நிகழ்வு பற்றி எதுவும் அறியாமல்
விரைந்து செல்கிறது ஆடிகாரொன்று.

*பரவாதனைபரவாசனைஎல்லாம் சக்திமயமாக உணர்தல்திருமந்திரம் 1174


புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

புதிய தொடக்கம்

கங்கை நீரை
கைகளில் எடுத்து
கலத்தில் இட்ட போது
உடைந்திருந்தது கலமும்,


புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடர் ஊர்வலம்

பிணங்களோடு எறியப்படும்
அன்று பூத்த பூக்களின்  அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?


புகைப்படம்Ulaganathan Muthukumarasamy 

Loading

சமூக ஊடகங்கள்