விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும், நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும், அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
விளக்கஉரை
பண் : யாழ்முறி
மடப்பிடி – பெண் யானை
புன்னை – நெய்தல் சார்புடையதல் பற்றி
திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.
அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும், பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.
மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
எறிபத்த நாயனார் பிறந்த தலம்
சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
கருங்கல்லால் ஆன கொடிமரம்
திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
வில்வமரம் , சீந்தில் கொடி, ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம்
பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள்
பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள்
வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.
கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே
பொருள்
கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன், பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.
விளக்கஉரை
கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
வெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
அர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு
ஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி
வெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது
கேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
ஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று
மேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.
மலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு
விறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்
திருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்
திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
பாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து திரும்பிப் போகும்படிச் செய்தார்
1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி
இத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
அலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 107
திருமுறை எண் 6
நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் பத்மகிரி மலையில் அமைந்துள்ள திருத்தலம்.
தேவர்களும், அசுரர்களும் திருமாலின் உதவியோடு பாற்கடலைக் கடைந்து இறுதியில் அமுதம் எடுத்தப் பின் பராசர முனிவர் நாராயணனிடமிருந்து சிறிது அமுதத்தைப் பெற்று வரும்போது, வழியில் அசுர்கள் அந்த அமுத்தை அவரிடமிருந்து பறிக்க முற்படுகையில் பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்த கட்டத்தில் அமுதம் கொண்ட கலசத்தைப் புதைத்து வைத்துவிட்டதால், அந்த அமுதமே பின்பு காயத்ரி லிங்கம் என்று லிங்க உருவாக மாறி இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இத் திருதலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றத் திருத்தலம்.
பள்ளியறையில் தந்தந்தினாலான ஊஞ்சலில் அம்மை
வேதங்களுக்கு தலைவியாக விளங்குவதாலும், நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்டதாலும் வேதவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள்
பவானி ஆறு, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி காவிரி இவைகள் சேருமிடத்தில் இத்தலம்அமைந்துள்ளதால் இத்தலம் தென்திரிவேணி சங்கமம்
விஸ்வாமித்திர முனிவரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர்
வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் காக்கும் (நண்ணுதல் – கிட்டுதல்) பதி என்பதால் நணா.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் ஆகியவற்றால் அழைக்கப்படும் திருத்தலம்.(பவானி)
குபேரன், பல திருத் தலங்களை தரிசித்தப்பின் இங்கு வந்த போது அனைத்து உயிர்களும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒன்றாக இருப்பது கண்டு தவம் செய்து சிவன், திருமால் ஆகியோரால் தரிசனம் கிடைக்கப்பெற்று ‘ பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள வேண்டும்’ என வேண்டிப் பெற்றத் திருத்தலம். (தட்சண அளகை)
இராவணன் வழிபாடு செய்தது சகஸ்ரலிங்கம்
வேணு கோபாலர் சன்னதிக்குப் பின் ஒரு உடல், இரு தலைகளுடன் பசுக் காட்சி
வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்த போது (1802ம் ஆண்டு) அம்பிகையை காணும் தீராத ஆவலால் அம்பிகை சந்நதிக்கு நேரே இருந்த மதிலில் மூன்று துவாரங்கள் செய்து அத்துவாரங்கள் வழியே அலங்கரிக்கப்பட்ட அம்பிகையை தரிசித்ததன் பலனாக தன் இருப்பிடத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கூரை இடிந்து விழும் முன் அவர் கனவில் அம்பிகை வேதநாயகியைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ஒரு பெண் தோன்றி, ‘பங்களாவைவிட்டு உடனே வெளியேறு’ என்று ஆணையிட்டு காப்பாற்றிய பெருமை கொண்ட தலம். ( நன்றி காணிக்கை – தந்தத்தினால் ஆன கட்டில்)
சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள்
மாசி மாதம் மூன்றாவது நாளில் சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகிய மூவருக்கும் சூரிய வழிபாடு நடைபெறும் திருத்தலம்.
ஆறு காலப் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்
நூல்கள்
கூடற்புறான வசனம் – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
பவானி வேதநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் – திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
காலை 6:00 மணி முதல் – 01:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் – 08:30 மணி வரைஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
பவானி, ஈரோடு மாவட்டம் – 638301
04256 – 230192, 09843248588.
வழிபட்டவர்கள்
திருமால், குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவு, ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 72
திருமுறை எண் 2
அழகிய கண்ணான நெற்றிக்கண் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், ஆகாமியகன்மம் முதல் சஞ்சிதம் பிராரப்தம் வரையிலான பழைய வினைத் தொகுப்பினைத் தீர்த்து அருள்பவரும் ஆகிய எம் இறைவன் உறையும் இடம், இலைகள் அடர்ந்த காட்டில் வேகமானதும், இசை போல் ஒலிப்பதுமான அருவிகளுடன் கூடியதும், மூங்கில்கள் உராய்ந்து ஓசை எழுப்புவதும், கரைபுரளும் அலைகள் வழியே சேர்க்கும் திருநணாவாகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 72
திருமுறை எண் 8
மன்நீர் எனப்படும் பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அவனை வருந்தச் செய்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், பகை கொண்டும், கோபம் கொண்டும் மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அதனோடு போரிட்டு முற்றத்தில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்
கேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1
சூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால் துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா
மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்
இராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்
நாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்
பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.
உலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்
‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)
‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத்தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.
‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.
கோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்
காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை
தென்னிலங்கை குலத்தலைவனாகவும் மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 80
திருமுறை எண் 8
அட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக நிற்பவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள, வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து உருவானது இத்திருத்தலம்.
கச்சியப்பரால் குறிப்பிடப்படும் ஆதி சிவனின் இருப்பிட திருத்தலங்களில் கயிலாயம், சிதம்பரம் இவற்றிற்கு பிறகானது இத்தலம்
திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயம் என்ப்படும் இத்தலத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம்
தாமரைத்தண்டு நூலினால் விளக்கேற்றி வழிபாடு செய்ததால் திரிதாய்
குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவை ஒன்று சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் திருக்குணமலை
வரலாற்றின்படி, 30௦௦ வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்; பழைய கோயில் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலும் என்று மூன்று பெருங்கோயில்கள் கொண்டது
தட்சண கயிலாய புராணப்படி, இராவணன் தன் தாயாரின் சிவ பூஜைக்காக தட்சண கயிலாயமான இம்மலையை பெயர்த்தது
சிறப்புடைய இக்கோயிலின் அழகினை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு திருஇராமேஸ்வரத்தில் இருந்து பதிகம் பாடிய தலம்
மனுநீதிகண்டசோழனால் பூசைகளும், விழாக்களும் நடத்தி, பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்து சிவகதி அடைந்தப் பின்,ஓர் அந்தணன் கனவில் பூதம் தோன்றி மனுநீதிகண்டசோழன், கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறி, பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறி, செய்தி அனைத்தையும் பெருமை மிக்க சோழ மன்னான குளக்கோட்டனிடம் கூறச் செய்து, மன்னன் அங்கு வந்த போது மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்த ஒரு செப்பேட்டை கொடுத்து அந்தப் பொருள் மூலம் திருப்பணிகள் செய்விக்கப்பட்டத் தலம்.
1624 ம் ஆண்டில் ஏற்பட்ட போர்த்துகீசிய படை எடுப்பால் தகர்க்கப்பட்டு, கோயில் சூரையாடப்பட்ட போது, சிவபக்தர்களால் தம்பல்காமம் எனும் இடத்தில் பூஜை செய்யப்பட்ட முக்கிய விக்ரகங்கள்; தற்போதைய பெயர் ஆதிகோணநாதர்
1952 பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிப்பிக்கப்பட்ட கோயில்
Temple of thousand pillars என்று அழைக்கப்பட்டத் தலம்.
திருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்கள் – பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள், கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி,
சோழர் காலச் சாசனங்கள் – கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு , மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவில் கல்வெட்டு
வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்குமாறு அவற்றை அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவராகவும், திருநீறு அணிந்த திருமேனி உடையவராகவும், மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், இடபக்கொடி உடையவராகவும், சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஆரவார ஒலி எழுப்பும் கடலின் அலைகளும், முத்துக்கள் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 123
திருமுறை எண் 8
பாடல்
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே
பொருள்
கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் ஏத்திப் போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவரும் உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருட்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும் சுயம்பு மூர்த்தி
ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
அகழி அமைப்பு கொண்ட கருவறை
பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
‘நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
‘…அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252
தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும் ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 5
பதிக எண் 44
திருமுறை எண் 1
காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே ஆவார்கள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
சிவபெருமானை விலக்கி தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயின பின்னர், அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்த போது, தண்டனை பெற்று ஒளி இழந்த சூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றத் தலம்
பனையைத் தல விருட்சமாக கொண்டு விளங்கும் பஞ்ச தலங்களில் இத்தலமும் ஒன்று.(மற்றவை வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), திருப்பனையூர், திருப்பனந்தாள், திருவோத்தூர்)
புறாவுக்காக உயிரைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி முக்தி பெற்ற தலம்
சூரியன் கண்ணொளி பெற்றதால் இறைவன் நேத்ர உத்ராரனேஸ்வரர் (கண்களை காத்து அருளியவர்)
ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சிவனாருக்கும் , பின்பு அம்மைக்கும் சூரிய வழிபாடு செய்யும் தலம்
திருநீலகண்டர் தம் மனைவியுடன் சேர்ந்து, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் சிலா ரூபங்கள் கொண்ட அமைப்பு
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 605603
94448-97861, 99420-56781
வழிபட்டவர்கள்
சூரியன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
விக்கிரவாண்டியில் (திண்டிவனம் – விழுப்புரம் சாலை) இருந்து 2 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து சுமார் 1௦ கிமீ தொலைவு. முண்டியம்பாக்கம் அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 210 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 20 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 53
திருமுறை எண் 1
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் நிறைந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெய்யும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக அமர்ந்தவனாய், இராவணனின் தோள்களை அடர்த்து, அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே எனப்போற்றும் அடியவர்களுக்கு அருள்புரிவாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இறைவனின் திருக்கண்ணை இறைவி மூடிய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை அரூபமாக பூசித்து, இடது கண், இடது தோளும் துடித்து சாபம் நீங்கப் பெற்றத் தலம்.
அம்மை பாதிரி மரத்தினடியில் தவம் செய்து சிவனாரை மணந்து கொண்ட தலம்.
நாள் தோறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பான சுவாமி கோயில்.
கடலில் இருந்து கரையேறிய திருநாவுக்கரசர் ‘ஈன்றாளுமாய்’ எனத் தொடங்கும் பதிகத்தில் ‘அதான்றாத்துணையார் இருந்தனன் தன் அடியோங்களுக்கே’, என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் ‘தோன்றாத்துணை நாதர்’
திருநாவுக்கரசரை திருஞானசம்பந்தர் முதன்முதலில் ‘அப்பர்’ என்று அழைத்த தலம்
திருநாவுக்கரசரை கல்லில் பூட்டிக் கடலில் இட்டபோது ‘சொற்றுனை வேதியன்’ என்ற பதிகம்பாடி அவர் கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் (தற்போது வண்டிப்பாளையம்) இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது.
திருநாவுக்கரசர் அமர்ந்தகோலத்தில் காட்சி.
வியாக்ரபாதர் வழிபட்டு அருள்பெற்ற பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், புலியின் பாதங்களை வேண்டிப்பெற்றதும் ஆனது இத் திருத்தலம்.
பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்).
வெளிப்பிரகாரத்தில், தல விருட்சமான இரண்டு பாதிரிமரங்கள்
பூத்து காய்க்காத தலவிருட்சமான பாதிரி (சித்திரை மாதம் முழுவதும்). கவசத்துடன் – தலவிருட்சமான ஆதிபாதிரிமரம்
மங்கண முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர் பறித்து, மகிழ்வுடன் திரும்பி வரும்போது தூமாப்ப முனிவரை கவனிக்காமல் அவரிடம் தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம். பின் நாளில் வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்)
கன்னி விநாயகர் வலம்புரிமூர்த்தி. அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் திருக்காட்சி
துர்க்கை சன்னதியில் அம்மை அருவவடிவில் தவஞ்செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதி. அதன் பொருட்டு உருவமில்லாமல் பீடம்.
திருக்கோயிலூர் ஆதீன சுவாமி அதிஷ்டானம் – வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு அம்மன் கோயிலுக்குப் அருகில் உள்ள சாமியார் தோட்டம் அருகில்.
‘கடை ஞாழலூர்’ என்பது மருவி ‘கடலூர்’
சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம்
மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை , தை அமாவாசை / மாசிமகம் கடலில் தீர்த்தவாரி, பௌர்ணமி பஞ்சபிரகார வலம், சித்திரையில் வசந்தோற்சவம், வைகாசி 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரை சதயத்தில் அப்பர் சதயவிழா,
வண்டிப்பாளையம் அப்பர்சாமி குளத்திற்கு ஒருநாள் தீர்த்தவாரி
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாதிரிப் புலியூர் – அஞ்சல்
கடலூர் – 607 002.
04142-236728, 98949-27573, 94428-32181
திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம், அருணகிரிநாதர், ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம் – திருவாடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் ,கலம்பக நூல்
நிர்வாகம்
திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 18 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 121
திருமுறை எண் 8
இறைவன்சுயம்புமூர்த்தி. லிங்கத் திருமேனியராக சிறிய ஆவுடையாருடன் கிழக்கு நோக்கிபடி, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிச் சன்னதியில் நின்ற கோலம் – கிழக்கு நோக்கி திருக்காட்சி
அகத்தியர் பூஜித்த ஆதிஜோதிர்லிங்கம் – இத்திருகோயிலின் எதிரே உள்ளமலையின் கீழ்பகுதியில் (மலை வேறு பெயர்கள் – ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி) (கங்கை, உபமன்யுமுனி, வியாக்ரபாதர், அக்னிவழிபட்டது.-2கிமீதூரம்).
கைகளில் தாமரையும் , நீலோத்பலமும் ஏந்தியுள்ள வடிவில் அம்பாள்
திரைக்குப்பின் சுவாமியும் அம்மனும் இருப்பதால் நந்தி நேர் எதிர்திசையில், நேரான தலையுடன் கூடிய அமைப்பு
திருமால், பிரம்மசாரியாக வந்து (மாணி – பிரம்மசாரி) மகாபலியிடம் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 1 ) – தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வகாலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதாலும், கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாலும் தனிபள்ளியறை இல்லாமல் – அவர்களுக்கு காவல்புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ”பீமருத்ரர்” திரைச்சீலை வடிவில்
சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 2 ) – மகாவிஷ்ணு மாணி எனப்படும் பிரம்மச்சாரியாக வழிபடுவதற்கு காவலாக பீமருத்ரர் திரையாகஇருப்பது
வழிபாட்டில் முதல்மரியாதை பீமருத்ரருக்கு.
வாமனாவதார வரலாறு சிற்பங்களுடன் கூடிய மூலவர் கருவறைவாயில்
பஞ்சாட்சரம்பொறிக்கப்பட்டுள்ள நடராஜர் திருமேனி
வடநாட்டு ருத்ராட்ச வணிகனாகிய அத்ரியிடம் திருடர்கள் கொள்ளையடிக்கமுற்பட, இறைவன், அத்ரியை திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தத் தலம். எனவே இத்தலம் ‘உதவி ‘, இறைவன் ‘உதவிநாயகர்’, இறைவி ‘உதவிநாயகி ‘
கோஷ்டதுர்க்கைமகிஷன்இல்லாமல்கதையுடன்திருக்காட்சி
நாகத்தை கையில் ஏந்திய தோற்றத்துடன் தட்சிணாமூர்த்தி
சூரியனால் உண்டாக்கப்பட்டு அவரே வழிபாடு செய்த கோயில்
சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்
தலம்
திருமாணிக்குழி
பிற பெயர்கள்
வாமனபுரி , இந்திரலோகம் , பீமசங்கர ஷேத்திரம்
இறைவன்
வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர், மாணிக்கவரதர்,
இறைவி
அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி
தல விருட்சம்
கொன்றை
தீர்த்தம்
ஸ்வேத தீர்த்தம் (சரஸ்வதியின் அம்சமாக) , கெடில நதி (லட்சுமிதேவியின் அம்சமாக), தென்பெண்ணை (பாகிரதி அம்சமாக )
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம். PIN – 60740104142-274485, 04142-224328, 99420-94516, 93626-38728, நடராஜன் : 8940730140
வழிபட்டவர்கள்
திரிசங்கு மகாராஜா , அரிச்சந்திரன்,
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
திருத்தலம்
1. கடலூர் – பண்ருட்டி சாலையில் திருவகீந்திரபுரம் – > சுந்தரர்பாடியை -> சாத்தாங்குப்பம் -> கெடிலநதிப்பாலத்தைக் கடந்து சென்று -> திருத்தலம்
2. கடலூர் – குமணங்குளம் சாலை வழியாக
3. கடலூர் – நடுவீரப்பட்டி சாலை வழியாக
கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 17 வது தலம்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 6
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக் கொண்டு வரும் கெடில நதியின் மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 77
திருமுறை எண் 9
திருமாணிகுழி எனும் திருத்தலமானது, பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குவதும், மகரந்தப்பொடிகள் நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்று மணம் கமழும் மலர்கள் நிறைந்த தலமும் ஆகும்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில்
திருவாண்டார் கோவில் அஞ்சல்
வழி கண்டமங்கலம், புதுச்சேரி – 605102
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், ,அருணகிரிநாதர், வள்ளலார்
நிர்வாகம்
தொல் பொருள் ஆய்வுத் துறை
இருப்பிடம்
விழுப்புரம் – பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 206 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 16 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 1
சுடும் தன்மை மிக அதிகமாக இருக்கும் தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினை உடையவரும், கொடிய மழு ஆயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், காளை மேல் ஊர்ந்து வருபவரும், மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும், நீர் வளம் மிக்க வடுகூர் எனும் தலத்தில் உறையும் இறைவர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 87
திருமுறை எண் 8
அதிர்வுகளைத் தரும் பறையும், வேய் குழல் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகளானவர், இளம்பிறை மற்றும் பெருகும் கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.
தலம்
திருஅறையணிநல்லூர்
பிற பெயர்கள்
அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர்
இறைவன்
அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர்
இறைவி
சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
தென்பெண்ணையாறு
விழாக்கள்
வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம்
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 605752
04153-224745, 93456-60711, 99651-44849
தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
சப்தமாதர்கள் அவதாரத்தலம்
ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.
தலம்
திருக்கோவிலூர்
பிற பெயர்கள்
அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.
கருத்து
கல்லார் வரை – கயிலையை கவின் – அழகு ஒல்லை – விரைவாக காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால். பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 17
திருமுறை எண் 10
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.
கருத்து
நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இறைவழிபாட்டை மறந்திருந்த மக்களை, ஈசன் மழையை பெய்வித்து, ஏரி குளம் ஆகியவற்றை உடைத்து நெல்லைப் பெற்றுக் கொண்டு மழையை நிறுத்தி அவர்களுக்கு பரிசாக தங்கம் நிரம்பிய குடங்களை பரிசாக அளித்தத் தலம்.
சிவன், நெல்லை அணையாக கட்டியத் தலம் ‘நெல் அணை’
திருஞான சம்பந்தர் திருத்தல யாத்திரை வரும் போது இருட்டியதால், ஈசன் அம்பாளிடம் சொல்லி அவருக்கு வழிகாட்டி அழைத்துவரப்பட்டத் தலம்.
அம்பாள் திருஞானசம்பந்தர் எதிரில் நின்று அழைத்ததால் ‘எதலவாடி’
ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சிவனாருக்கு சூரியவழிபாடு நடைபெறும் தலம்.
ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம், சுந்தரர், நடன சுந்தரரான வடிவம், அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம்
அதிகார நந்தி இரண்டு காலகளையும் இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பு.
தலம்
திருநெல்வெண்ணை
பிற பெயர்கள்
நெல்வெண்ணெய், ‘நெல் அணை, எதலவாடி
இறைவன்
சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர் , நெல்வெண்ணெய்நாதர்
இறைவி
பிருஹன்நாயகி, நீலமலர்க்கண்ணி
தல விருட்சம்
புன்னைமரம்
தீர்த்தம்
பெண்ணையாறு
விழாக்கள்
மகா சிவராத்திரி , சனிப்பெயர்ச்சி,கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழி திருவாதிரை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் – நெல்வெணெயப்பர் திருக்கோயில்
நெய்வெயைகிராமம் – கூவாடு அஞ்சல்
(வழி) எறையூர் – உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607 20104149-209097, 04149-291786, 94862-82952
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் 9047785914
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 10 வது தலம்.
நீலமலர்க்கண்ணி உடனாகிய சொர்ணகடேஸ்வரர்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 96
திருமுறை எண் 6
நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 96
திருமுறை எண் 8
நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்ருது அருள்பவரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவர் தானே ஒரு மலையாகத் தோன்றி அருள் செய்தார். எனவே பழமலை.
சுந்தரர் ஈசனிடம் பொன்பெற்று இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டு அதை திருவாரூர்க் கமலாலய தீர்த்தத்தில் எடுத்துக்கொண்டத் தலம்.
4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவர்கள், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவில்.
பாதாள விநாயகர் – முதல் வெளிப் பிரகாரத்தில் சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ள கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி.
மூன்றாம் பிரகாரத்தில் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்பு
சைவ சமயத்தில் உள்ள 28 ஆகமங்களை, 28 லிங்கங்களாக முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளத் தலம். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் எனவே இக்கோயில் ஆகமக்கோயில்.
ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுக்க அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறிய தலம்.
இத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம்
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமசிவாயர் என்னும் மகான் கிழத்தி என்று நாயகியைப்பாட, ‘கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர இயலும்’ எனக் கேட்க அடுத்த பாடலில் இளமை நாயகியாய் பாடியதால் இளமை நாயகியாய் வந்து உணவளித்த தலம்.
சக்கரதீர்த்தம் – ஆழத்துப்பிள்ளையார் சந்நிதி அருகில் திருமால் சக்கரம் கொண்டு உருவாக்கியது
அனைத்தும் ஐந்தாக கொண்டு விளங்கும் தலம்.
தலத்தின் ஐந்து பெயர்கள் – திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, விருத்தகிரி
சிவனாரின் பஞ்ச பெயர்கள் – விருத்தகிரீஸ்வரர், விருத்தகிரிநாதர், முதுகுன்றீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர்
ஐந்து கோபுரங்கள் – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்
விருத்தாம்பிகை, பெரிய நாயகி , பாலாம்பிகை இளைய நாயகி
தல விருட்சம்
வன்னிமரம்
தீர்த்தம்
மணிமுத்தாறு , நித்யானந்தகூபம் மற்றும் அக்னி , குபேர , சக்கர தீர்த்தங்கள்
விழாக்கள்
ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9..00 மணி வரைஅருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில்
விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல்
கடலூர் மாவட்டம் , PIN – 606001
உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 23 கிமீ, கடலூரில் இருந்து சுமார் 60 கிமீ, பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 83 கிமீ, சிதம்பரத்தில் இருந்து சுமார் 45 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 199 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 9 வது தலம்.
விருத்தகிரீஸ்வரர்
விருத்தாம்பிகை
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 12
திருமுறை எண் 8
பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே, புலியினது தோலை இடுப்பில் அணிந்தவரே, நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே, அடிகளே, மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும், `பரவை` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு!
கருத்து
இட்டளம் – துன்பம் . ` இட்டளங்கெட என்செய்தவாறு – , ` துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு , நீர் துன்பத்தை ஆக்கினீர் ` என்றபடி
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்டானத் தலங்களில் மூன்றாவது தலம். சிவனார் திரிபுர தகனம் செய்தருளிய தலம்
16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
திருஞானசம்பந்தருக்கு சிவனார் திருநடனக்காட்சி காட்டிய தலம்
திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியார் சிவத்தொண்டு செய்த தலம்
சூலை நோய் நீங்கப்பெற்று ‘திருநாவுக்கரசர்’ என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்
இத்தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில்(தற்போதைய பெயர் – சித்தாண்டிமடம், சித்தாத்த மடம், கோடாலம்பாக்கம் ) தங்கி, திருவடி தீட்சை பெற்ற தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலம்
உள் சுற்றின் தென்மேற்கே பல்லவர் காலத்தைச் சார்ந்த பஞ்சமுக லிங்கம். மூன்று திக்குகளை நோக்கி நான்கு முகங்கள் உள்ளன. ஒரு முகம் (அதோ முகம்) மேல் நோக்கியது.
வீரட்டேஸ்வரர் வீரட்டநாதர் , அதிகைநாதர், ஸ்ரீ சம்ஹார மூர்த்தி, திருக்கெடிலவாணர்
இறைவி
திரிபுரசுந்தரி
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
கெடிலநதி, சக்கரதீர்த்தம்
விழாக்கள்
வைகாசி விசாகம் – 10 நாள்கள் பிரம்மோற்சவம், சித்திரைச்சதயம் – 10 நாள்கள் அப்பர் திருவிழா, பங்குனி-சித்திரை மாதங்களில் நாள் வசந்தோற்சவம்,ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் ,மாணிக்கவாசகர் உற்சவம் , மார்கழி திருவாதிரை , மகா சிவராத்திரி , கார்த்திகை சோமவார சங்காபிஷேகங்கள் , பங்குனி உத்திரம் , திலகவதியார் குருபூஜை
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரைஅருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
திருவதிகை
பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN – 607106
அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றேன்,செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
உலகில் தம் தலைவனை உருவம் அறியாதவர் உளரோ? இல்லை. அப்படியிருக்க நீலகண்டனாகிய அப்பெருமான் தனது திருவடியை என் தலைமேல் வைத்து, சடைமேல் பிறையை உடையவனும், விடை ஏறுபவனும், யானைத் தோலைப் போர்ப்பவனும் கரிந்த காட்டில் ஆடுபவனும் எம் தலைவனும் ஆகிய, கெடில நதியின் வடகரையிலுள்ள திருவீரட்டானத்தில் விரும்பியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச் செய்வதையும் யான் அறியாமல் இகழ்வேன் ஆயினேன் போலும். என்னே என் அறியாமை ! இனி அவ்வாறு நேராது போலும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
அகத்திய மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம்(லிங்கம் அகத்தியர் அமைத்த கைத்தடத்துடன்). (அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சித்து, அமைக்க முடியாமல் பின் மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபட்ட ஈசன்)
மூலவர் சதுர ஆவுடையார். சற்று நீட்டுவாக்கில் அமைந்த சுற்றளவு குறைந்த பாணம்
ஈசனும் பார்வதியும் ஒன்றாக இருப்பதால் சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு
திரிபுவன சக்கரவர்த்தியின் மனைவி தியாகவல்லி திருப்பணி செய்த தலம்
ஒரு காலத்தில் மணல் மேடாக இருந்த இப்பகுதி, ‘மதுரை இராமலிங்க சிவயோகி’ யால் மணலில் புதைந்திருந்த விமான கலசமும் பின் கோயிலும் கண்டறியப்பட்ட தலம்.
ஸ்வர மூர்த்தி – தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி விக்ரகத்தைத் தட்டினால் சப்த ஸ்வரங்களின் ஓசைகள். வழக்கத்திற்கு மாறாக இடது கையில் நாகம், வலது கையில் அக்னியும் ஏந்தியவாறு திருக்காட்சி.
காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோவில்
திருச்சோபுரம்
தியாகவல்லி அஞ்சல், கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608801.
98436-70518 , 94425-85845, 94429-36922
வழிபட்டவர்கள்
அகத்தியர், காகபுஜண்டர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், சுந்தரர் *
நிர்வாகம்
இருப்பிடம்
கடலூர் – சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் அடைந்து, அங்கிருந்து திருச்சோபுரம் செல்லும் கிளைச்சாலையில் இருந்து சுமார் 2 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 195 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 6 வது தலம்.
*சுந்தரரின் ‘திருவிடையாறு’ தலப்பதிகத்தில் – ஊர்த்தொகையில் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சோபுரநாதர்
சத்யதாக்ஷி
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 51
திருமுறை எண் 8
இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.
கருத்து
விலங்கல் – மேருமலை.
அரக்கர் – திரிபுராதிகள்.
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல் என்றவாறு
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 51
திருமுறை எண் 9
மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
கருத்து
நாகம் – வாசுகி என்னும் பாம்பு.
மால் வரை – மந்தரமலை.
நஞ்சை உண்டு உகந்த – தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும்,
சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த.
இடந்து – தோண்டி
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
தனது தாயை மீனப் பெண்ணாக சபித்ததற்காக முருகன் வேதாக நூல்களை கடலில் வீசி எறிந்தார். இதனால் சாபம் பெற்ற முருகன் மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறந்து இத்தலம் வந்து வழிபாடு செய்து பேசும் திறன் பெற்றார்.
குமரன் வழிபட்டதால் சிவன் திருநாமம் திருக்குமாரசாமி
வியாக்ரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் (பெரும்பற்றப்புலியூர், திருப்பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர்) இத்தலமும் ஒன்று
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன்
தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்த போது ஏற்பட்ட வேடர்களின் தொந்தரவால் அவர்கள் வெள்ளெருக்காக மாறி வழிபாடு செய்யும் தலம்
அத்தம் = காடு, எருக்கத்தம் = எருக்கங்காடு. எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர்
இராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் இராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்
மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரியஒளி வழிபாடு செய்யும் தலம்
இவ்வூருக்குக் கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலத்தில் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடப் பெற்றது.
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608703
04143 – 243533, +91-94440 63806.+91-93606 37784
வழிபட்டவர்கள்
வியாக்ரபாதர், உருத்திரசன்மர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் முஷ்ணத்தை அடுத்து அமைந்துள்ளது இத் தலம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 194 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 4 வது தலம்.
திருக்குமாரசுவாமி
வீராமுலையம்மன்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 8
ஆ ஆ என்று தன்னைக் காப்பாற்றும்படி இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் தவறினை உணர்ந்து வேண்ட அருளோடு நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.
பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 9
வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட நீலகண்டனை அண்ணலை நினைந்தால், வினை கெடும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திருநாவுக்கரசர் – சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
சந்தான குரவர்கள் மெய்கண்ட தேவர், மறைஞான சம்பந்தர் ஆகியோர்பிறந்த தலம்.
ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்
மாகேஸ்வர பூசையில் தனது பணியாள் வந்த போது அவருக்கு பூஜை செய்ய மறுத்த மனைவியின் கரங்களை வெட்டிய கலிகம்ப நாயனார் (மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்-கைவழங்கீசர் ) முக்தி பெற்றத் தலம்.
கஜபிருஷ்ட விமான அமைப்பிலான விமானம்
இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப கட்டப்பட்டது சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி
தொலைபேசி : +91-9976995722, +91-98425-64768, 04143 – 222788.
வழிபட்டவர்கள்
ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
நிர்வாகம்
இருப்பிடம்
விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 192 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 2 வது தலம்.
சுடர்க்கொழுந்தீஸ்வரர்
விருத்தாம்பிகை
புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 59
திருமுறை எண் 9
பாடல்
நோயும் பிணியும் அருந்துயரமும்
நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத்
தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே
பொருள்
உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.
கருத்து
நோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.
பிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.
அருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 109
திருமுறை எண் 1
பாடல்
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே.
பொருள்
விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)