தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வெண்ணை
- ஈசன் சுயம்பு மூர்த்தி
- 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தலம்
- இறைவழிபாட்டை மறந்திருந்த மக்களை, ஈசன் மழையை பெய்வித்து, ஏரி குளம் ஆகியவற்றை உடைத்து நெல்லைப் பெற்றுக் கொண்டு மழையை நிறுத்தி அவர்களுக்கு பரிசாக தங்கம் நிரம்பிய குடங்களை பரிசாக அளித்தத் தலம்.
- சிவன், நெல்லை அணையாக கட்டியத் தலம் ‘நெல் அணை’
- திருஞான சம்பந்தர் திருத்தல யாத்திரை வரும் போது இருட்டியதால், ஈசன் அம்பாளிடம் சொல்லி அவருக்கு வழிகாட்டி அழைத்துவரப்பட்டத் தலம்.
- அம்பாள் திருஞானசம்பந்தர் எதிரில் நின்று அழைத்ததால் ‘எதலவாடி’
- சனகாதி முனிவர்கள் ( சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற்குமாரர் ) வழிபட்ட தலம்
- ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சிவனாருக்கு சூரியவழிபாடு நடைபெறும் தலம்.
- ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம், சுந்தரர், நடன சுந்தரரான வடிவம், அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம்
- அதிகார நந்தி இரண்டு காலகளையும் இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பு.
தலம் | திருநெல்வெண்ணை |
பிற பெயர்கள் | நெல்வெண்ணெய், ‘நெல் அணை, எதலவாடி |
இறைவன் | சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர் , நெல்வெண்ணெய்நாதர் |
இறைவி | பிருஹன்நாயகி, நீலமலர்க்கண்ணி |
தல விருட்சம் | புன்னைமரம் |
தீர்த்தம் | பெண்ணையாறு |
விழாக்கள் | மகா சிவராத்திரி , சனிப்பெயர்ச்சி,கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழி திருவாதிரை |
மாவட்டம் | விழுப்புரம் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் – நெல்வெணெயப்பர் திருக்கோயில் நெய்வெயைகிராமம் – கூவாடு அஞ்சல் (வழி) எறையூர் – உளுந்தூர்ப்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம் – 607 20104149-209097, 04149-291786, 94862-82952 கிருஷ்ணமூர்த்தி குருக்கள் 9047785914 |
வழிபட்டவர்கள் | |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர் 1 பதிகம் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 200 வது தலம் நடு நாட்டுத் தலங்களில் 10 வது தலம். |
நீலமலர்க்கண்ணி உடனாகிய சொர்ணகடேஸ்வரர்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 96
திருமுறை எண் 6
பாடல்
நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே
பொருள்
நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 96
திருமுறை எண் 8
பாடல்
நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீர
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே
பொருள்
நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்ருது அருள்பவரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)