அமுதமொழி – ஸ்ரீ  பராபவ‌ – சித்திரை – 16 (2026)


பாடல்

வாழ்த்தவல்லார் மனத்துள் உறுசோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – பாயிரம் – திருமூலர்

கருத்து – ஈசனின் அருள் பெரும் உபாயங்கள் ஏத்துதலும், இறைஞ்சுதலும் ஆகும் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

பூர்வ புண்ணியத்தாலே ஈசனின் பெருமைகளை அறிந்து அவன் மனத்துள் விளங்கும் சோதிப்பொருள் என்றும், குற்றமற்ற ரூபமும் குணமும் உடையவன், அவன் எம் தலைவன் என்றும் நினைந்து தோத்திரம் செய்து அவனது எல்லையற்ற குணங்களை இயன்ற அளவு வாழ்த்தியும் வணங்கியும், அன்பு செய்தும் வந்தால் அவனருளைப் பெறலாம்.

விளக்கஉரை

  • ஆத்தம் – விருப்பம், குருவுக்குச்செய்யும்பணிவிடை, அன்பு

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #‍திருமந்திரம் #திருமூலர் #திருமுறை #பத்தாம்_திருமுறை #பாயிரம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!