
பாடல்
அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் – துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து
திருஅருப்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்
கருத்து – சிவபெருமான் தன்னிடத்தில் விருப்பமுடன் வந்ததை கூறும் பாடல்.
பதவுரை
செம்பவளம் போன்ற செம்மை கொண்டவரான சடையை உடையவனும், முக்கண் எனும் சிற்றம்பத்தினை உடையவனான சிவபெருமான் அவனுடைய தன்மைகள் கொண்டு அவனை உள்ளத்தில் உடையவனாகிய (என்) உள்ளத்தில் அப்பா என்று ஏதோ ஒரு காலத்தில் அழைக்கும் போது எனக்கு அன்பு செய்தலின் பொருட்டு அந்த கணத்திலே அப்பா மகனே என்று என்னிடத்தில் விருப்பமுடன் வந்தான்.
விளக்க உரை
- துப்பார் – பயனர், உண்பவர், செம்பவளம் போன்ற செம்மை கொண்டவர்
- உவத்தல் – மகிழ்தல், விரும்புதல், பிரியமாதல், அன்புசெய்தல்