காற்றில் ஆடும் சருகுகள் – 11

பள்ளி விடுமுறைக் காலங்களில் மகள்களை விட தந்தைகளே அதிகம் மகிழ்வுறுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னாலே தான் தன் பிறப்பு என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நேசிப்பையும் நிரந்தரமின்மையையும் ஒன்றாகக் காட்டும் இடங்களே இரயில் பயணங்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அருந்து காப்பியின் கடைசித் துளிகள் நினைவுபடுத்துகின்றன அது எத்தனை மயக்கம் தரும் என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எரியும் விளக்கிறகு ஏது கர்மம்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடு அழுகையாகத் தான் இருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனிதர்களின் மூடப்படா கதவுகளின் வழியே கனவுகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லறையில் காவளாளி யாருக்காக?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
காலை நேரங்களில்  மிக அழகாக கத்திக்கொண்டு இரு கால்களால் மரத்தில் அமர்ந்து, தன் முன் கால்களால் தென்னம் குரும்பைகளை உண்ணும் அணில்கள் அழகானவையாக இருக்கின்றன. அதனால் விடியல்கள் வெளிச்சம் பெறுகின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனம் பயிற்று விக்க கூடியது என்பது தாண்டி அறியக்கூடியது என்று உணர்பவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்கள்

காற்றில் ஆடும்
குமிழிகளை உடைத்து
விளையாடுகிறது குழந்தை
தன் தோழமையும்
தன்னைப் போல் இருப்பதாய்
மகிழ்வுறுகிறார் கடவுள்.

புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

சொர்க்கம் – வீடும் வீடு சார்ந்த இடமும்

அலை கழிக்கப்படும் வாழ்வின் படகுகளில் அனுதினமும் நாம் சார்ந்திருக்கும் மனிதர்கள் நம்மைக் கொண்டாடினால்….
யட்ஷன் : உலகின் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த நண்பன் யார்?
தருமன் : அவனது மனைவி.
மகாபாரதம் : யட்ச பர்வம்
எனக்கான கனவுகளையும், கவிதைகளையும் கொண்டாடியவள் நீ.

நீ நிஜம்
நீ காற்று
நீ ஆகாயம்
நீ ஆதார ஸ்ருதி.
அபஸ்வரத்திற்கு முன்பாகவே என்னை மாற்றியவள் நீ.
உன்னை அன்றி என்னை யார் முழுமையாக மாற்றி இருக்க முடியும்.
12 வருட காலம், காதல், தனிமை, வலிமை, அழுகை, வரம். சந்தோஷம், விருப்பங்கள், வலிகள், மாற்பட்ட கருத்துக்கள், மாறாத ஒற்றுமைகள், ஒற்றுமை, அன்பு. தமிழின் அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கிறது நம் வாழ்வு.
உன் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
என் பாடல் நம் பாடலாகி இருக்கிறது.
காலம் இன்னமும் பாடலகளை எழுதிக் கொண்டிருக்கிறது.
தேர்தெடுக்கப்பட்டவைகள் உரிமையாளருக்கு சொந்தம் எனில், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் உன் உரிமையாக.
உனக்கான கோபங்கள் குழந்தை தன்மை உடையவை என்பதை எப்போதோ உணர்ந்தவன். அதுவே உன் கோபங்களை ரசிக்கச் செய்கிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆம் எனக்கு வரம் கிடைத்து விட்டது.
எனக்கான அனைத்து தருணங்களிலும் நீ இருக்கிறாய் என் ஆச்சாரியனைப் போல், ஆச்சாரியனாகவும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ

ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே 
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ * – லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 10

தனது மகளை கல்லூரி அனுப்ப காத்திருக்கும் வேளையில் மகளை வாகனத்தில் இருத்தி தான் தரையில்நின்று   பேசும் தந்தையில் கண்களில்  மாறுதல் இல்லா ஒரு சந்தோஷம் தெரிகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேகத்தின் பணி தேகம் நீக்குதல் என்று உணர்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அம்மா என்று அழைத்தால் எவ்வாறு தாய் மகிழ்வாளோ, அவ்வாறே நாம் குருவினை அழைக்க அவர்கள்         பிரியப்பட்டு நம்மிடம் வந்து உறைகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மகா)சந்தோஷம்
மனைவி :  ஏங்க, நான் மௌன விரதம் இருக்கலாம்ன்னு இருக்கேன்.
கணவன் : நான் இப்ப பூமியிலே இல்லையே. வானத்துல இருக்கேன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மௌனத்திருப்பவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வினைகளை அறுப்பவனையே பெரு வலிகள் வந்து சேர்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்கள் தங்கத்தை நேசிப்பதை விட தந்தைகள் மகள்களை நேசிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கர்வம் அழித்தலில் மருத்துவ மனைகளின் பங்கு மகத்தானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கற்றல் தாண்டி அறிதலை கொள்பவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மூச்சுக்காற்றில் சிக்கனம் காட்டுபவன் மயானம் அடையான்.

Loading

சமூக ஊடகங்கள்

இரட்சித்தல்

பல பறவைகள்
காற்றை கிழித்து
சென்ற பின்னும்
தடயங்கள் அற்று இருக்கிறது வானம்.

நிழற்படம் – சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

கரை ஏற்றம்

குளித்துக் கரை ஏறிய
பின்னும் இருக்கின்றன
நீரும் சில நினைவுகளும்.

புகைப்படம் : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

இற(ர)த்தல்

கடைக்காரனிடம்
கடன் சொல்லி வாங்கிவந்த
காகிதத்தில் கர்ணன்.
புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

பூக்கள் முளைத்த பாதைகள்

மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நீயும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏதுஎன்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின்பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து

புகைப்படம் & Model : Stri

Loading

சமூக ஊடகங்கள்

ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்

பாதம் தொடும்
எல்லா அலைகளும்
இழுத்து வருகின்றன
பழைய நினைவுகளை.

புகைப்பட உதவி: Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

புனிதத்துவம்

சிறகுகள் அற்று 
வானில் பறக்கும் போதே
அறிய முடிகிறது
பூமியின் புனிதத்துவம்.

Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

மௌன நாதம்

வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
எனில் உன்னை அறிவது எப்படிஎன்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.

புகைப்பட உதவி :  R.s.s.K. Clicks

Loading

சமூக ஊடகங்கள்

என்றைக்குமான குளம்

குளத்தின் அழகு
தொடங்குகின்றது
அதன் அலை அடங்குதலில்.

புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

2038 – DNA

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
DNA library

உங்க library-ல  எவ்வளவு samples இருக்கு
20000
அடச்சே, என்னவோ 1000000 இருக்குற மாதிரி பேசறயே.

* * * *  
* * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * 

You really can change your DNA
மச்சான் கவலப் படாத இதெல்லாம் ஒரு பொண்ணா, விடு. என் ஃப்ரண்டு ஒரு டாக்டர், அவன்ட போவோம். ஒரே ஒரு DNA change தான். அப்புறம் அந்த பொண்ண மறந்துடலாம்.

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
DNA doesn’t lie
டேய் ஏண்டா, டென்சனா இருக்கே,
என் பொண்டாட்டி ஊருக்கு போய்டான்னு சந்தோஷமா இருந்தேன். அவ வந்த உடனே DNA டெஸ்ட் பண்ணுணுமாம். நான் சந்தோஷமா இருந்து தெரிஞ்சுடுமா?

 * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *
மச்சான், நீ உண்மையான டாக்டர் தானே?
அதுல உனக்கு என்னடா சந்தேகம்.
நீ சொன்னேன் தானே அந்த 23க்கும் 24க்கும் இடையில இருக்கிறDNA- மாத்தி வச்சேன். அதுக்கு அப்புறம் கோவப்பட மாட்டேன்னு சொன்ன. ஆன அப்படி நடக்லயே.
எதுக்கும் எண்கணித மேதைக்கிட ஒரு வார்த்தை கேட்டுடுவோமா?

* * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * * * * * *  * * * *

யோவ், சொன்னா கேளுயா, நீ வேல இல்லாதவன். உனக்கு 20 வயது வேற ஆயிடுத்து.  உனக்கு எப்படி DNA insurance பண்ணமுடியும்.

Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

குப்பாச வாழ்க்கை

அவசர அவசரமாக பொத்தேரி புகை வண்டி நிலையத்தில் இருந்து கிண்டிக்கு பயணச் சீட்டுப் பெற்றேன். அடுத்த வண்டி 12.36 என்று எழுதி இருந்தது. கடிகாரத்தில் மணி பார்த்தேன்.
12.53. அப்பாடா புகைவண்டி சீக்கிரம் வந்துவிடும்  என்று அவசர அவசரமாக ஒடினேன்.
1.23க்கு புகைவண்டி வந்தது.
ஒரு நிகழ்வினை எதிர்பார்ப்புகள் இல்லாமல் பதிவு செய்ய எண்ணம் உண்டானது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பயணம் செய்பவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
குழந்தைகள்பெரும்பாலும் பெரியவர்கள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என்று பயத்துடன் பயணிக்கிறார்கள்.
கல்லூரிமாணவர்கள்அவர்கள்உலகத்தில்அவர்கள்
வயதானவர்கள்கவலைகளோடுபயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலானவர்கள் இரண்டு  mobile  வைத்திருக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கல்லூரிவயதுக்காரர்கள்  பெரும்பாலும் Temple run  விளையாடுகிறார்கள் அல்லது FB பார்க்கிறார்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வயது உடையவர்கள் ‘நீ என்ன அப்பா டக்கரா’ வகையரா பாட்டுக்களைக் கேட்கிறார்கள். புகைவண்டி இரைச்சலை தாண்டி பாட்டு வெளியே கேட்கிறது.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்னைக்கு புதன் கிழகை வேற பார்ட்டி இல்ல. 12.5 லட்சத்துக்கு கேக்கிறான். திங்க கிழமை ரிஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம்.பார்ட்டிய முடிச்சிடு.எனது பக்கத்து இருக்கைக் காரர். (நேரே போய் சொல்லி வந்திருக்கலாம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
திருநங்கைகளின் கைத்தட்டல் ஓசை ஒரே விதமாக இருக்கிறது. பணம் கொடுப்பவர்களை மனமாற வாழ்த்துக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெரும்பாலான பொருள் ஏற்பவர்கள்(பிச்சைக்காரகள் என்று அழைக்க மனம் விழையவில்லை) பாத்திரம் ஒற்றை நாணயம் மட்டும் கொண்டிருக்கிறது. சிலர் பாடி பொருள் கேட்கிறார்கள். சிலர் ஏதுவும் பேசாமல் கேட்கிறார்கள். அவர்களின் பாத்திரம் நிரம்புவதே இல்லை. அதுவே மிகப் பெரிய வலி உண்டாக்குகிறது
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பெண்மணிகளே வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். மாதம் Rs.30000 என்ற விளம்பரம் பெரும்பாலான இடங்களில் தென்படுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மிக அதிகமாக கசங்கிய ஆடைகளை உடையவர்கள் நுழைவு வாயில் அருகிலே அமர்ந்து விடுகிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பூர்விகா மொபைல் விளம்பரத்தில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவை சிலர் ஓரக் கண்ணால் பார்க்கிறார்கள். சிலர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இரண்டு பேர் இருக்கையில் மற்றும் ஒருவர் நகர்ந்து கொள்ளச் சொல்லி இடம் கேட்டால் தி. நகரில் இருக்கும் பத்து க்ரௌண்ட் இடம் கேட்டது போல் முறைக்கிறார்கள்.
* * * * *
சில குழுக்கள் புகைவண்டியில் கதவருகே நின்று selfie எடுத்துக் கொண்டிருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மச்சான் அந்த மஞ்ச கலர் மைனாவ பார்தா த்ரிஷா மாதிரி இல்ல.
போடா டேய், த்ரிஷா எல்லாம் பாட்டி அவள போய் கம்பேர் பண்ரியே. சொல்லுவது ஆசை அஜித்(ஹா ஹா)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தாய்மை உடையவர்கள் மிக அதிக கனமான இதயத்துடன் பயணிக்கிறார்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனத்த மௌனத்துடனே பெரும்பாலான பயணம் தொடர்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இலக்கை அடைந்த பின் வேறொரு பயணத்திகு தயாராகி விடுகிறார்கள்.
குப்பாசவாழ்க்கைநிலைஅற்றவாழ்வு
நன்றி : கந்தர் அலங்காரம்
புகைப்படஉதவி : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

கசியும் நினைவுகள்

மழை நீரில் கரைகிறதோ
இல்லையோ நினைவுகள்;
வலி கொண்ட தனிமையில் மட்டும்.

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சொற்கள் அற்ற இரவு

விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
நான் உன்னுடன் பேசப் போவதில்லை
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில்  கைகளால்
எதையோ தேடுகிறாய்.
என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.

புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்

Loading

சமூக ஊடகங்கள்

உள் ஒலி

காகிதத்தில் வண்ணத்துப் பூச்சி
தாவும் குழந்தை
புன்னகைக்கும் இறை.

புகைப்பட உதவி:  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஜகத்பதி

நேற்று காலை
நகரின் பிரதான இடம் அது. தொகுப்பு வீடுகளும் தனி வீடுகளும் அமைந்திருக்கும் பகுதி.
பிளாட்பாரம் வழியாக பயணம்
பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.
மனுஷனா இல்ல மாடா இவனுக, இப்படி இருந்தா எப்படி  நடக்கறவன் நடப்பான்‘.
நேற்று மாலை
அந்தி சாயும் பொழுதுவாகனத்தில் பயணம்
கண் அற்றவன் ஒருவன் குச்சியை வைத்து நடந்து கொண்டிருந்தான்.
சார், சார்பார்த்து போங்க, இடிச்சிக்காதிங்க
ரொம்ப நன்றி சார்
உங்க பேரு என்னாங்க?
ஜகத்பதி
அது என்னாங்க அப்படி ஒரு பேரு
வடக்குத்தி சாமிங்க. நான் காசி போயிருந்தப்ப அங்க இருந்தவங்க எல்லாம் சொன்னாங்க. அதாலெ எம் பேர அப்படி மாத்திக்கிட்டேன். அதாவது உலகத்திற்கு அதிபதியாம்.
உட்காருங்க சார், நீங்க எங்க போவணும்ணு சொல்லுங்க இறக்கி விடறேன்‘,
தனக்கான நாளின் முடிவில் ஜகத்பதி.அப்போது மணி மாலை 6.30
எங்கியாவது இறக்கி விடுங்க சார், நான் தூங்கனும்‘, ஜகத்பதி
எத்தனை நாளா இந்த பென்சில் பேனா, ரேஷன் காடு விக்கிறீங்க‘,
எனக்கு கண்ணு தெரியாம போனதில் இருந்து‘, ஜகத்பதி
என்ன ஆச்சு உங்களுக்கு‘, அவன்
உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட போனேன். அவரு ஊசி போட்டார். அப்புறமா கொஞ்ச நால்ல ருந்து கண்ணு தெரியல‘, ஜகத்பதி
உங்களுக்கு சொந்த ஊர் எது‘,
குன்னூர் பக்கங்க‘, ஜகத்பதி
இங்க எப்படி வந்தீங்க‘,
ரயில்ல தான். நான் எம். இங்கிலிஷ் லிட்ரச்சர் படிச்சிருக்கிறேங்க‘, ஜகத்பதி. வார்த்தைகளில் நிதானமான கத்தி சொருகல்.
ஏன் நீங்க வேலைக்கு போகலையா‘, அவன்
சர்டிபிகேட் எல்லாம் பஸ்ல தொலைஞ்சு போச்சுங்க‘, ஜகத்பதி. கத்தி இன்னும் எடுக்கப்படாமல் ரத்தம்.
சாப்பிடீங்களா
டீயும் பன்னும் சாப்டேன்‘ – ஜகத்பதி.
சார் ராத்திரி சாப்பாடு பத்தி கேட்டேன்
அதெல்லாம் சாப்டா ராத்திரி வயத்தை கலக்கும் சார்‘- ஜகத்பதி. மெல்லிய இளம் சூடான மைசூர் பாகினை தட்டினில் கொட்டி, கத்தியால் நறுவிசாக நறுக்கப்பட்டதைப் போல் வார்த்தைகள்.
காலையும் மதியமும்?’
ஒரு நாளைக்கு 80ரூ வருமானம் வரும் சார். காலைக் கடனுக்கு 5ரூ சார். குளியலும் காலைக்கடனும் அப்படீன்னா 10ரூ சார். அதுல எப்படி எல்லா வேளையும் சாப்பிட முடியும்‘  – ஜகத்பதி. வார்த்தைகளில் துப்பாக்கி சூடு குறிபார்த்து.
இங்க எறங்கிங்க
ரொம்ப நன்றி சார்‘, ஜகத்பதி
இன்று காலை.
ஜகத்பதியை இறக்கி விட்ட இடத்தின் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது பிளாட்பாரத்தில் மலம் கழிக்கப் பட்டிருந்தது.

புகைப்பட உதவி :  R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

ஜன்னல் பிடித்த படி

பெரும் காற்றும் உடனான மழையும்
எழுதிச் செல்கிறது
சில நீர் வடிவங்களையும்
பல நினைவுகளையும்.

புகைப்பட உதவி :  R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்