பரப்பினன்

பஞ்ச பூத கவிதை வரிசையில்காற்று

கனத்த மௌனம் கொண்ட

நிமிடம் ஒன்றில்
உடல் தழுவி சென்றது காற்று.
மெல்லிய குரலில் அவைகள்
பேசிக் கொள்ளத் துவங்கின.
‘நீ யார்’ என்கிறேன்.
‘நானே நீ. நான் அற்று நீ ஏது’ என்கிறது.
‘இது நாள் வரை அறியவில்லை உன்னை’ என்கிறேன்.
‘அறியப்படாததால் நான் அற்று நீயா’ என்கிறது.
‘உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள் கொடி உறவு’ என்கிறது
‘கமற்று இருப்பதால் உங்களை அறிய முடியவில்லையா’ என்கிறேன்.
மற்று இருப்பதால் தானே அறிகிறாய் என்கின்றன.
‘யாவரும் உங்களை அறிவார்களா,
அறியும் தருணம் எது’ என வினாக்கள் விரைகின்றன.
தொலை தூர மயான காற்றில்

கலந்திருக்கிறது பிண வாடைகள்.

பரப்பினன்பரப்பினள் என்பதன் ஆண்பால்ஞானிகளால் ஆராயப்பெற்ற பரந்த இடமாக விளங்குபவன், திருமந்திரம் – 1070

புகைப்படம்இணையம்

Loading

சமூக ஊடகங்கள்

ஆமம்

கணிப் பொறியில்
நீர் பற்றி கவிதை எழுத
துவங்குகையில்
திரைமேல் சலனங்கள் அற்று
விரைந்து செல்கிறது எறும்பொன்று.

* ஆமம் – உணவு – திருமந்திரம் – 1212
புகைப்படம் :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

அடையாளம்

அடையாளம் அற்ற
தனித்த இரவில்
தொலைகிறது தனிமைகளும்

சில கண்ணீர் துளிகளும்.

புகைப்படம் :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 16

ஒய்வெடுத்தலில் நினைவுகளை அசைபோடுதலை தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.
************************************************************************************************************************************** 
என் வாகனத்தில் பின்னே நீ.
உனக்கும் எனக்குமான இடைவெளி குறைகிறது.
தாடியினை பற்றி கழுத்தினை திருப்பிமுத்தம் தரவா என்கிறாய்.
மறுதலிக்கிறேன்.
பரவாஇல்லை வைத்துக்கொள் என்று இதழ் பதி….
சனியன் தூங்கறத பாரு அவங்க ஆத்தா மாதிரியே
போனா போகுதும்மா. இன்னைக்கு லீவுதானே தூங்கட்டும்.
உங்கள எல்லாம் வச்சிகிட்டு எப்படிடா Romance பண்றது…
************************************************************************************************************************************** 
ஆறும் ஐந்தும் இருப்பதானால் அது ஆரஞ்சா?. Associate law படி ஐந்தும் ஆறும் ஆரஞ்ச் தானே. பின்  ஏன் அப்படி அழைக்க வில்லை. இப்படிக்கு 3rd semester Discrete Maths பேப்பரை கடைசி  அரியரில் எழுதி பாஸ் செய்ய துடிப்போர் சங்கம்.
************************************************************************************************************************************** 
அடையாளம் அற்ற மரணத்தில் மறைந்திருக்கும் மனித வாழ்வு
************************************************************************************************************************************** 
குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதே பயத்தின் முதன்னைக் காரணமாக இருக்கிறது.
i am back-yogesh give friend request in FB
************************************************************************************************************************************** 
டூயம் சிம் மொபைல் இருக்கு. அதுல ஒரு நம்பர்ல இருந்து அதுல இருக்குற இன்னொரு நம்பருக்கு எப்படி பேசுவது. கால் வருமா, அதுல நாமளே எப்படி பேசறது; நாமளே எப்படி கேட்க்கிறது. இப்படிக்கு நோக்கியா 1100 வாங்க 24 EMI போடலாமா என்று யோசிப்போர் சங்கம்.
************************************************************************************************************************************** 
படிச்ச உடனே வேலைக்கு application போட்டா உங்களுக்கு Experience இல்லேங்கறாங்க. 55 வயசுக்கு அப்புறம் வேலைக்கு மனு போட்டா வயசான பயல்களுக்கு எதுக்கு வேலைங்கிறாங்க. அப்புறம் நாங்க எப்பதாண்டா வேலைக்கு போறது?. இப்படிக்கு வேலைக்கு application போட பேரனிடம் idea/ காசு கேட்போர் சங்கம்.
************************************************************************************************************************************** 
நாம போட்ட Post -அ  அப்படியே காப்பி பண்ணி போட்டு Sundar Gopalakrishnan FOLLOW Me and you will lots of Updates அழகு ஆங்கிலத்தில் நமக்கு மெசேஜ் போடரவன என்ன செய்யறது.
************************************************************************************************************************************** 
லா.சா.ரா கதைகள் – 2 வாசித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஆகையால் எல்லாமே ஒன்றைக் குறிப்பதுதான்.
“சிலர் ?’
“சிலர்  என்றாலும் அதேதான் “
“பலர் ?’
“பலர்  என்றாலும் அதேதான் “
“அப்போ ஒன்று ?”
” ஒன்று என்றால் ஒன்றேதான். அன்று இன்று, என்றுமே ஒன்று.”
“எது ?”
“அது இது எல்லாம்-“
பல பத்தாண்டுகள் கடந்த பின்னும் சொற்களின் வாசனை இன்னும் மாறாமல் இருக்கிறது. இதுவே அவரது உருவேற்றதின் முழுமை.

Loading

சமூக ஊடகங்கள்

பரவாதனை

மிகவும் சிறியதான உணவகத்தில்
விலைப் பட்டியல் பார்த்து
ஒரு சிங்கில் பூரிஎன்கிறான் ஒருவன்.
அவனுக்குஒரு பூரி செட்டும் ஒரு தோசையும்என்கிறான்
அவன் நண்பன்.
இமை விலகா அவன் விழிநீரின் ஒசைகள்
என் காதுகளில் மட்டும்.
நிகழ்வு பற்றி எதுவும் அறியாமல்
விரைந்து செல்கிறது ஆடிகாரொன்று.

*பரவாதனைபரவாசனைஎல்லாம் சக்திமயமாக உணர்தல்திருமந்திரம் 1174

புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 15

தூரத்தில் இருக்கும் மரத்தில் அமர்ந்து காலையில் இருந்து ‘க்கூகூகூகூகூகூ’  என்று  அலைவரிசை மாறாமல்  கொண்டிருக்கும் அக்கூ குருவி(ஏன்டா, சரியாதானே பேசறேன்) சுதந்திர நாளினை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறது, 
**************************************************************************************************************************************
உருளைக் கிழங்கு போண்டாவிலும் உ.கிழங்கு உண்டு. மசால் தோசையிலும் உண்டு. ஆனா ஏன் சாதா தோசையை விட மசால் தோசைக்கு  ரூ.10 அதிகமா வாங்குறான். இப்படிக்கு மனைவியிடம் கடன் வாங்கி உ..கிழங்கு போண்டா சாப்பிடுபவர்களிடம் பிடுங்கி தின்று யோசிப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
குழந்தைகளில் ‘ப்ளீஸ்’ என்று கண்களை சாய்த்து தலையை ஆட்டி கேட்கும் குரலில் ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கின்றன.
**************************************************************************************************************************************
ஒரு பொண்ணு ‘wow’  ன்னு status போட்டா 72 லைக் வருது. மனசு ஒடஞ்சி feeling sad ன்னு status போட்டா 1 லைக் வருது,  இப்படிக்கு பத்து லைக் வாங்க ப்ரம ப்ரயத்தனம் செய்வோர் சங்கம்.
Google translation.
A girl ‘wow’ nnu status Bota gets like 72. Otanci heart feeling sad status nnu Bota 1 Like coming up, so you can buy ten Like those prama prayattanam Association.
**************************************************************************************************************************************
‘ஒரு கதை சொல்லுங்கள்’ என்பது மாறி ‘போதும்பா, நிறுத்துங்க,
போரடிக்காதீங்க ‘ என்னும் பொழுதுகளில் வாலிபத்தின் தொடக்கம் நிகழ்கிறது.
**************************************************************************************************************************************
சில தினங்களுக்கு முன்
கல்லூரிப் பேருந்தில் பாட்டு கேட்டுக் கொண்டே செல்கிறேன். வெளியே சிறு தூறல்களாய் மழை. காற்று என் மேனியை தழுவிச் செல்கிறது. பாடல் மாறுகிறது. ‘ எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’. 
பாடலும் அதனோடு இசையும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகிறது. வாழ்வில் இன்னும் வாழவேண்டிய சந்தர்ப்பங்கள் இருப்பதை உணர்கிறேன்.
**************************************************************************************************************************************
ஏன் இந்த பெண்கள் இப்படி கொல கொலன்னு பேசிகிட்டே இருக்கிறார்கன்னு ஆண்களும், ஏன் இந்த ஆண்கள் எதுவுமே இப்படி எதுவுமே கண்டுக்காக இருக்கிறார்கள்ன்னு பெண்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இது அனைவரையும் பார்த்து எதுவுமே பேசாமல் வேடிக்கை பார்ப்போர் சங்கம்.
**************************************************************************************************************************************
 என்னடா நூடுல்ஸ், மைதா மாவ இடியாப்பம் மாதிரி புழிஞ்சி கொஞ்சம் மசாலா போட்டா அது நூடுல்ஸ், அதையும் பித்தளை பாத்திரத்தில் வச்சி கொடுத்தா அது ஸ்டார் ஹோட்டல். போங்கடா, போங்க. இப்படிக்கு பீடி வாங்க காசில்லாமல் பிரியாணிக்கும், நூடுல்ஸ்க்கும் ஆசைப்படுவோர் சங்கம். 
**************************************************************************************************************************************
இன்னைக்கு தேதி 14-10-14 . வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும்.
இப்படிக்கு தேதி பார்த்துக் கொண்டே தன்னையும் குழந்தையாக நினைத்து குழந்தைகள் தினம் கொண்டாட மாத சம்பளம் எதிர் பார்போர் சங்கம்.
(எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை)
**************************************************************************************************************************************
என் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்படது. புற மாறுதல்கள் என்னை சுடுவதில்லை.
**************************************************************************************************************************************
கல்லூரிப் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன்.
வெளியே மழை.
‘முதல் மழை எனை நனைத்ததே’ பாடல் ஒலிக்கிறது.
சுற்றுப்புறமும், பாடலும் தனியே ஒரு தள்ளாட்டத்தில் விடுகின்றன.
நினைவுகளை விட கொடுமையான விஷயம் வேறு எதுவும் இல்லை என்றுபடுகிறது.
மனது மயங்கிக்கிடக்கிறது.
ஏங்க மணி ஆறு  ஆவுது. எழுந்திரீங்க.சீக்கிரம் காலேஜீக்கு கிளம்புங்க. அப்புறம் பஸ்சை விட்டுடுவீங்க.(யார் இது)
‘அப்பா உங்களுக்கு தெரியாதா. ஸ்கூல் மட்டும் தான் லீவு. உங்க காலேஜூக்கு லீவு இல்ல. கிளம்புங்க சீக்கிரம். நானும் அம்மாவும் நெட்ல படம் பாக்கணும்’  ( இது யாரு)
மனிதர்களின் துக்கங்களில் சந்தோஷம் கொண்டாட ஒரு கூட்டமே அலையுது அப்பா

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 14

இழப்புகள் ஏற்படுத்தும் காயங்களை விட நினைவுகள் ஏற்படுத்தும் காயம் அதிகமானது.
***************************************************************************************************************************************
வேலைக்கு செல்லத் துவங்குகையில், தாய் கோழி வேகமாக மண்ணைக் கிளறுகிறது. சிறு குஞ்சுகள் உணவை கொத்தி உண்ணத் துவங்குகின்றன. இரை தேடலை எனக்கு முன்பே யாரோ தொடங்கிவிட்டார்கள்.
***************************************************************************************************************************************
விதியின் மீது நம்பிக்கை அற்றவர்கள் திருமணம் செய்து பார்க்கவும்.
***************************************************************************************************************************************
வெளியில் மழை. வீட்டில் கொஞ்சம் நொறுக்குத் தீனி. பில்டர் காபி. நிறைய ராஜா சார் பாடல்கள். கையில் கணையாழியின் கடைசி பக்கங்கள்.
இன்னும் வாழ்வில் சுவாரசியங்கள் இருக்கத்தான் செய்கிறது
***************************************************************************************************************************************
மௌனத்தில் கழியும் நிமிடங்கள் உன்னதமானவை
***************************************************************************************************************************************
சிறகசைப்பின் முற்றுப் பெறுதலில் சூரியன் உதயம் ஆகிறது.
***************************************************************************************************************************************
என்னங்க உங்க வீட்டுக்காரர் எதுவுமே பேசமாட்டேங்கிறார்.
அது எப்பவுமே அப்படித்தான்.
சில நிமிடங்களுக்கு பின்.
அதெல்லாம் என்ன அவாட்ஸ்?
அதுவா அது காலேஜ் படிக்கிறப்போ பேச்சுப் போட்டில வாங்கின பல பரிசுகளாம். அதெல்லாம் தூக்கி போடணும். வேலயத்துப் போய் அடுக்கி வச்சி இருக்கு.
***************************************************************************************************************************************
மரிக்கும் தேகத்தில் மறையாதிருக்கும் நினைவுகள் 
***************************************************************************************************************************************
நோக்கம் பாலினை சூடாக்குவது என்றாலும் அதனை நேரிடையாக செய்யமுடிவதில்லை. அதற்கு ஒரு பாத்திரம் தேவைப்படுகிறது. பாத்திரமும் வெப்பத்தை உள் வாங்குகிறது. அது போல் ஆன்மாக்கள் அடைய வேண்டிய அனுபவ பதிவுகளை இவ்வுடல் மூலமாக வாங்குகிறது.
***************************************************************************************************************************************
கல்லறையில் கட்சிக் கொடிகள். யாருக்காக?

Loading

சமூக ஊடகங்கள்

புதிய தொடக்கம்

கங்கை நீரை
கைகளில் எடுத்து
கலத்தில் இட்ட போது
உடைந்திருந்தது கலமும்,

புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

அரவான்

காலங்களை ஒத்து
ஈரமாக இருக்கிறது நினைவுகள்.
எப்போதோ எவராலோ
உரைக்கப்பட்ட வார்த்தைகளை
நீ உணராமல் உரைத்திருக்கலாம்.
அப்போது நான் மட்டுமே அறிந்த
மௌனத்தின் உப்பு சுவைவை
நீ அறியாமல் இருக்கலாம்.
பிறிதொரு நாளில்
மீன் விற்பவளின் கைகளில் இருக்கும்
விசிறி காகிதமாய் அலைகின்றன உன் நினைவுகள்.
காகித விசிறிக்கா கட்டுப்படும் ஈக்கள்?

* அரவான்மஹா பாரதப் போருக்கு முன் பலி கொடுக்கப்பட்ட மாபெரும் வீரன்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடர் ஊர்வலம்

பிணங்களோடு எறியப்படும்
அன்று பூத்த பூக்களின்  அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?

புகைப்படம்Ulaganathan Muthukumarasamy 

Loading

சமூக ஊடகங்கள்

முகத்துவாரம்

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நீர்

வழிந்தோடும் ஆற்றில்
மூழ்குதலும் எழுதலும் முதல் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
காற்றுக் குமிழ்கள் பின் தொடர்ந்து பேசத் துவங்குகின்றன.
நாங்கள் உன்னைச் சார்ந்தவர்கள்
உன் நினைவுகள் என்கின்றன.
‘யவன பருவத்தில் நீ விளையாடிய
விளையாட்டுகள்’ என்று கூறி
உடைகிறது ஒரு குமிழ்
‘உனக்கான பள்ளி நாட்களே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘கொண்ட காதல் நினைவுகளே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘நண்டின் கால் உடைத்து
நறுமணம் கொண்டு உண்ட நினைவுகளே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘பெற்ற பேரும் அதன் பொருட்டான பெரும் துயரமும் நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
மூழ்குதலும் எழுதலும் இரண்டாம் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
பணிவில் பெற்ற வெற்றிகளும்,
பணிந்து பெற்ற வெற்றிகளும் நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
‘தேவைகளின் பொருட்டு நீ கொண்ட வேஷங்களே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
‘நிறம் மாறிய குடும்ப அமைப்புகளே நான்’
என்று கூறி உடைகிறது பிறிதொரு குமிழ்.
‘உருண்டோடி உடையும் குமிழ்கள் எனக்கானவை எனில்
எது நான்’ என்கிறேன்.
சொற்கள் அழிந்து சூன்யம் தொடங்குகையில்
மூழ்குதல் மூன்றாம் முறை நிகழ்கிறது

பின் தொடர்கிறது பிரணவ ஒலி

*முகத்துவாரம் – ஆறு கடலில் சேரும் இடம்
புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மனோ மௌனம்

வாழ்வுக் கனவுகளில்
விழு திறக்க எத்தனிக்கிறேன்.
ஓடு, ஓடு, பூதம் வருகிறதுஎன்கிறாய்
உன் தேமதுரக் குரலால்.
வியப்பால் விழுகளை உருட்டி
‘எங்கே,எங்கே என்கிறேன்.
நான் தான் பூதம்
என்னைத் தெரியவில்லையா’
என்று கள்ளப் புன்னகை சிந்துகிறாய்
தேவதைகள் பூதங்களாய்
வேஷமிட்டு வரும் காலமிது.

மனோ மௌனம்இறை தன்மையை கர்ப்பத்தில் அனுபவித்த நிலை

Loading

சமூக ஊடகங்கள்

பிராணத் தியாகம்

கைகளில் இருந்து நழுவும் நீரில்
எது எனது நீர்
எனும் நிமிடங்களில்
கரைகிறது காலம்.

புகைபடம் : சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

நித்ய யாசகன்

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நிலம்

ஒரு விடியலில்
பாதையினில் தனித்த பயணம் தொடர்கிறது.
பிரதிபலிப்பில் நிழல் விழுந்த நிலம்
என்னைத் தெரிகிறதா
எனப் பேசத் தொடங்குகிறது.
ஆமாம்நான் தான் நீ‘ என்கிறது.
வினாக்கள் விழி அசைவுகளை நிறுத்தி வைக்கின்றன..
முன்னொரு தினத்தில்
நீ எருவாக இருந்தாய்,
பின் விதையானாய்,
பின் மரம் ஆனானாய்,
பூவானாய்காயானாய்கனியானாய்,
பின் மாண்டு எருவானாய்’ என்கிறது.
படைப்பின் நோக்கம் குறித்து வினவுகிறேன்.
படைப்புகள் படைத்தவனுக்கு மட்டுமே சொந்தம்
எனும் பதில் வருகிறது.
படைப்புகளின் நேர்த்தியும், நேர்த்தியின்மை குறித்தும்
கேள்விகள் எழுகின்றன.
காலங்களுக்கு கட்டுப்பட்டது தானே
அனைத்து பிரபஞ்சங்களும் அதன் உட்பொருள்களும்
என்றாய் பதில் வருகிறது.
சுழற்சியின் காலம் பற்றி வினவுகிறேன்.
நீயும் நானும் ஒன்று எனில்
காலம் குறித்து என்ன சொல்லமுடியும்‘ என்கிறது.
முன்னே தவழ்ந்து செல்லும் குழந்தை ஒன்று
தன் கைகளால் நிலம் கீறி எழுதிச் செல்கிறது
ஓம் சிவோகம்‘.

புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்

நண்பு

கண் முன்னே
எரியும் பிணங்கள்
குளிர் நீக்கி வெப்பம் தரும்.
சுழற்சி முறையில்
எனக்கான இடமும் மாறும்.
அப்போதும் இக்கவிதை
அரங்கேற்றம் கொள்ளும்.

நண்பு  நேசம்
*திருமந்திரம் – 992
புகைப்படம்இணையத் தளம்

Loading

சமூக ஊடகங்கள்

மாறும் நிலைகள்

மின்கம்பிகளின் வழியே
படர்ந்து செல்லும் கொடிகளின்
அடுத்த நிலை என்ன
என்ற வினாக்களில்
கரைகிறது வாழ்வு
புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

பரவும் மௌனம்

அலைகள் ஓய காத்திருக்கிறது மனம்
மனம் அடங்கக் காத்திருக்கிறது அலைகள்
பிறகான ஒருதருணங்களில்
ஒன்றில் ஒன்று ஒன்றி.

புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

அட்சர அப்யாசம்

‘சவப்பெட்டி’ என்று எழுதத்துவங்கும்
குழந்தையின் முதல் மனநிலை
என்னவாக இருக்கும்?

புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆன்மாவின் மறுதலித்தல்

குழந்தைகளின் விருப்பங்களை
மறுதலிக்கும் பெற்றோர்களின்
காயங்களுடன் மறைந்து இருக்கிறது
இயலாமைகள்.

புகைப்படம் :  Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

சொல் புதையல்

கோவிலுக்குள்
எங்க சாமியே காணும்
எனும்  குழந்தையின் சொல்லில்
ஒளிந்திருக்கிறது சூட்சமங்கள்.

புகைப்படம் : தேவதைத் தூதன்

Loading

சமூக ஊடகங்கள்