செய்தி


குடுகுடுப்பைகாரனின்
கையினில் இருக்கும் கைப்பேசி
யாருக்கு செய்தி சொல்ல?

Loading

சமூக ஊடகங்கள்

தலை நிமிர்ந்த மிருகங்கள்


உற்ற பொருள் தேடி
உரெல்லாம் பயணம்
விதை துளிர்க்க துவங்குகையில்
உறுமாறும் வெறுமை
துளிர்தல் தாண்டி துளைத்தல் நிகழும்
ம்ண்ணின் கீழ் வேர்களாய்
துளிர்தவை பரவுதலில்
பரவசம் ஏற்படுத்தும்
அதையும் தாண்டி அனைத்தும் மாறும்
பூக்களாய் கனிகளாய்
காலத்தின் மாற்றத்தால்
நிலைப்புகள் நீக்கம் கொள்ளும்
விழ்ந்து கிடக்கும் பொருள் தேடி
விரையும் காகங்கள்
கவிதையும் கவிதை சார்ந்த இடமும்
பசியோடு ஆயினும்
கவிஞன் என்னும் கர்வத்தோடு
தலை நிமிர்ந்து நிற்கும் மிருகங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

இருக்கும் இடம்


குப்பை பொறுக்குபவள்
கூந்தல் நிறைய
மல்லிகைப் பூக்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாசனைகள்


எப்போதாவது பூக்கின்றன
குறிஞ்சிப் பூக்கள்.
தாயின் மடியினில் இருந்து
தலையசைக்கின்றன சில பூக்கள்.
கைகளை அகல விரித்து
கண்களைக் காட்டி
பயமுறுத்துகின்றன சில பூக்கள்.
முடிவில்லா பயணத்தில்
முழுநீள புன்னகையோடு சில பூக்கள்.
பூக்களின் சிந்தனையில்
பூரணமான வலி வயிற்றினில்
கருமை நிறைந்த இரவுப் பொழுதினில்
எங்கு சென்று தேடுவது
மளிகைக் கடையையும் மருந்துக் கடையையும்
எப்பொதும் பூக்கின்றன
காட்டுச் சாமந்திகள்

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு மாதிரி


சூழ்ந்து செல்லும் ஆறு,
சுழன்று வீசும் காற்று,
கண்களுக்கு இனிய பசுமை,
காதுகளுக்கு இனிய ஒலிகள்,
மனதுக்கு இனிய வாசம்
சந்தோஷத்தின் சாயலில் ஏற்றுக் கொண்ட போது
ஒரு மாதிரி என்றார்கள்.
கால சுழற்சியில் மாறின காட்சிகள்
மூடின கண்கள், சாயல் அற்ற நினைவுகள்
சதா சர்வ காலமும் ஏகாந்ததில் திளைப்பு
இப்பொழுதும் கூறுகிறார்கள் ஒரு மாதிரி
எப்படிதான் வாழ்வது என்ற கேள்விக்கு
எவருமே விடையளிக்கவில்லை.

Loading

சமூக ஊடகங்கள்

கவிஞன்

ஏதோ ஒரு கணத்தில்
நிகழ்த்து விடுகிறது கவிதைக்கான நிகழ்வு
கவிஞனுக்கான் முகவரியில்
காணக் கிடைக்கின்றன
நீண்ட தாடியும், நீளமான முடியும்
உலர்ந்த தேகமும், உறுதியான மனமும்
மானம் மிகுந்த கவிஞன்
விளிக்கிறது வெளி உலகம்
மானம் கெட்ட உனக்கு என்ன வாழ்வு
விளிக்கிறது உள் உலகம்
வலிகளற்ற கவிஞன் யார்?

Loading

சமூக ஊடகங்கள்

கலைஞன்


ஏதோ ஒரு கணத்தில்
வந்து விடுகிறது
வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி
மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான்
மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன
வயிற்றுக்கான வலிகளில்
கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில்
எதிர்படுகின்றன வார்த்தைகள்
அவன் பிறவிக் கலைஞன்
பிழைப்புக்காக கை ஏந்துவானா?
அடை மழை வந்து நனைக்கிறது
வயிற்று நெருப்பின் வலிகளை.

Loading

சமூக ஊடகங்கள்

ஐயனார்


யாருமற்ற இடத்தில் ஐயனார்
கைவிடப்பட்ட வயதான மனிதர்களின்
வலியும், வலி சார்ந்த நினைவுகளுடன்

Loading

சமூக ஊடகங்கள்

பொம்மைகள்


அறை நிறைய பொம்மைகள் கொட்டிகிடந்தன
குழந்தை சொன்னது
எனக்கு விளையாட பொம்மைகளே இல்லை என்று

Loading

சமூக ஊடகங்கள்

குழந்தைப் பருவங்கள்


திரை மறைவில்
மறைந்து கொண்டு
என்னை கண்டுபிடியுங்கள் பார்கலாம்
என்று மகள் அழைக்கையில் தெரிகிறது
நான் தொலைத்து விட்ட
எனது குழந்தை பருவங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

கடவுளை விற்றல்

கடவுள் பொம்மைகளை விற்றால் தான் காசு
தெரு ஒர விற்பனை கலைஞன்

Loading

சமூக ஊடகங்கள்

மழை

மழை தூறலுக்கு முன்பே
தொடங்கி விடுகின்றன்
மழைக்கான நினைவுகள்
ஒரு முறை நான் நடந்து
கொண்டிருந்தபோது தொடங்கும் குரல்
எனக்கு மழை பிடிக்காது
மற்றொரு குரல் ஒலிக்கும்
இன்னைக்கு எல்லா பாடலும்
மழை பாடல்கள்
குரல் மீண்டும் ஒலிக்கும்
மழைக்கான புரிதல்
தொடங்கும் முன்
மழை நிற்கும்
மழை நின் பின்னும்
நிற்கிறது மனதின் வாசனை

Loading

சமூக ஊடகங்கள்

பட்டாம் பூச்சி


விற்பனை சிறுமியின்
கைகளில்
படபடத்து நிற்கின்றன
பலூன்களும் பட்டாம் பூச்சிகளும்

Loading

சமூக ஊடகங்கள்

வலிகள்


என்றாவது உற்று
கவனித்து இருக்கிறீர்களா
எனது மகன்
அமெரிக்காவில் வேலை பார்கிறான்
எனது மகள்
சிங்கப்பூரில் இருக்கிறாள்
என்று கூறுபவர்களின்
தனிமையையும்
தனிமை சார்ந்த வலிகளையும்

Loading

சமூக ஊடகங்கள்

சுயம் இழத்தல்


வாழ்வினில் என்ன
சுவாரசியம் இருக்கிறது
சுயம் இழத்தல் தவிர

Loading

சமூக ஊடகங்கள்

தேனிர்


வெயிலில் ஐஸ்
வண்டிக்காரன்
கையில் தேனிர்

Loading

சமூக ஊடகங்கள்

வேஷம்


கடவுள் வேஷம் போட்டுக்
கொண்டு தெருவில் நடந்தாலும்
குரைக்கின்றன நாய்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மனசு


தரும ராசா
உதவி பண்ணுங்கள்
சொன்னவனிடம் மறுதலித்து
சட்டை பையை தொட்டு பார்க்கின்றது கைகள்
உள்ளுகுள் மனைவியிடம்
வாங்கிய ஒற்றை நாணயம்

Loading

சமூக ஊடகங்கள்

இடமாற்றம்


கலைத்த குருவி கூட்டின் இடத்தில்
கத்தும் குருவி பொம்மை

Loading

சமூக ஊடகங்கள்

அழுகை ஓலி


வெட்டுகையில் கவனித்து பாருங்கள்
மரங்களின் அழுகை ஓலி

Loading

சமூக ஊடகங்கள்