
ஏதோ ஒரு கணத்தில்
வந்து விடுகிறது
வயிற்றுக்கும் கைகளுக்குமான போட்டி
மயிர் நீப்பீன் உயிர் வாழா கவரிமான்
மானம் கெட்ட வயிற்றுக்கு தெரிகிறதா என்ன
வயிற்றுக்கான வலிகளில்
கைநீட்டி யாசகம் கேட்க எத்தனிக்கையில்
எதிர்படுகின்றன வார்த்தைகள்
அவன் பிறவிக் கலைஞன்
பிழைப்புக்காக கை ஏந்துவானா?
அடை மழை வந்து நனைக்கிறது
வயிற்று நெருப்பின் வலிகளை.