பாலை திரிந்து?

பட்டுப்போய் இருக்கிறது
பட்டு நெய்பவர்களின் வாழ்வு.

Image : internet

Loading

சமூக ஊடகங்கள்

அழகியல்

என் உதடுகள் உச்சரிக்கும் வரை
அறியவில்லை
உன் பெயர் இத்தனை அழகாய் இருக்கும் என்று.

Loading

சமூக ஊடகங்கள்

விலை

எல்லா விலை உயர்ந்த
உணவிற்கு பின்னாலும் இருக்கின்றன,
பல மனிதர்களின் வறுமையும் பசியும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஜீ(வ)வீத நதி

பனிபூத்த பவழமல்லி,
கரை புரளும் காவிரி,
நதியினில் ஒரு ஒட்டம்,
நிலாச் சோறு,
காற்றினில் கரையும் கீதங்கள்,
ஆசிரியர்களின் அரவணைப்புகள்,
தோளில் கை போட்டுக்கொள்ளும் தோழமை;
பரிகாச சிரிப்புகள்
மறுநாளின் தொடக்கம் வரை நீளும்,
அனைத்தும் தாண்டி குரல் ஒலிக்கும்
‘கோட் எரர் அடிக்குது,
கிளையன்ட் கத்ரான்
என்னான்னு பாருங்க’.

Loading

சமூக ஊடகங்கள்

கலைடாஸ்கோப்

களைப்போடு வீட்டிற்குள் நான்.
இரண்டு முறை சுற்றி வந்து
காற்றில் கைகளை மூடி
‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று
என் கைகளை விரிக்க சொல்கிறாய்.
வினாக்களோடு விடுபடுகின்றன கைகள்.
பெரிய வண்ணத்துப் பூச்சியும்,
சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய்.
வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது,
நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரேமரூபா

யாருமற்ற இரவில்
வெற்றுப் புள்ளியாய் நீ.
மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய்.
உன் கண்ணசைப்பில்
கைக்குழந்தையாகிறேன்.
என் காதலைச் சொல்ல துணிகிறேன்.
‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய்.
விழி அருவி மடைதாண்டி
பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது.
இராவணன் இராமனான பொழுதினை ஒத்து
தன்னை இழத்தல் நிகழ்கிறது.
ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில்.
“கிழத்துக்கு இழுக்குது,
இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான்
செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன்,
போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.

Loading

சமூக ஊடகங்கள்

வைராக்கியம்

எல்லா வைராக்கியங்களுக்கு பின்னும்
இருக்கின்றன,
வலி மிகுந்த வறுமைகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மழை பெய்யும் காலம்

மழையினின் நனைந்து
வீட்டிற்குள் நுழைகிறேன்.
‘குடை எடுத்து போகமாட்டாயா’
என்று  கூறி
எனக்கே எனக்காக
வீட்டிற்குள் குடை பிடிக்கிறாய்.
மழை இடம் மாறி கண்ணுக்குள்.

Loading

சமூக ஊடகங்கள்

வாடிவாசல்

தொலைதூர மனிதர்களிடம் நட்பு,
தொட்டுவிடும் தூர மனிதர்களிடம் விரோதம்
வாழ்தல் தாண்டி
வசதிகளை கொடுத்த வாழ்வு,
வரப்புக்களை உயர்த்தி இருக்கிறது.
ஓட்டம் கொண்ட குதிரை
ஓர் இடத்தில் நிலைபெறாமாலா செல்லும்?

Loading

சமூக ஊடகங்கள்

ஆவாஹனம்

நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
‘எனக்கான..’ எனத்துவங்குயில்
‘அனைத்தும் அறிவோம்’ என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.

Loading

சமூக ஊடகங்கள்

அமிர்தம்

நட்சத்திர ஹோட்டலின் வருமானம்
முதல் பக்கங்களில்
பட்டினியின் சாவு குறித்த விவரங்கள்
எவரும் அணுகமுடியா பக்கங்களில்.

Loading

சமூக ஊடகங்கள்

மயானச் சாலை

பாதையினில்
எழுதப் பட்டிருந்தது
மயானச் சாலை

Loading

சமூக ஊடகங்கள்

பிராப்தம்

காகிதத்தின் பக்கங்களை
கவிதைகளால் நிரப்ப துவங்குகையில்,
முன் பக்கங்களை,
முன் எப்போதும் சந்தித்திராத
கரையான்கள்
அறிக்……——
……..க………….
…துவ………..
ங்கி………
…….இரு…….
ந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

மஹா பலி

தான் புதைத்த
தலைகளின் மேல் கட்டிடம் எழுப்பி
தலையாட்டி களிப்போடிருந்து
‘தானே எல்லாம்’ எனும் பொழுதுகளில்
சாய்ந்தது தன் தலை.

Loading

சமூக ஊடகங்கள்

உபாதி

நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

லோபாமுத்ரா

எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்துவிடுகிறது
மனைவியின் வார்த்தைகளை மறுதலித்தாலும்
மகளின் வார்த்தைகளை மறுக்க முடியாமல்
திணறுவதையும் அதன் பொருட்டான
சந்தோஷ தோல்விகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

மரம் அழிந்த கதை

ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில்
ஒரு மரம் இருந்தது.
வளரத்துவங்குகையில்
அது பேசத்தொடங்கியது.
அதன் பாஷைகள்
புரியாதனவாக இருந்தன.
ஒரு குழந்தையை அழைத்து
தன் மேல் கல் எறியச் சொன்னது.
புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது.
‘அங்க ஒரு மரம் இருக்குடா,
கல் எறிந்தால் பேசும்டா’ என்றது தனது நண்பர்களிடம்.
குழந்தைகளின் வருகையினால்
தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில்.
கால மாற்றத்தில்
பயணத்திற்கு இடையூராக இருப்பதாக
பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான்.
விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன.
பல காலம் கடந்த பிறகு
சில குழந்தைகள் பேசிக்கொண்டன.
‘எங்க முப்பாட்டன் காலத்துல
அங்க ஒரு மரம் இருந்தது.
எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா ‘

Loading

சமூக ஊடகங்கள்

துறவு

உணவு பரிமாற்றத்தில்
தனக்கான பங்கு குறைகையில்,
ஒற்றை வார்த்தைகள்
உயிர் பெறுகின்றன
எல்லா அம்மாக்களிடமும்
“பசிக்கலடா”.

Loading

சமூக ஊடகங்கள்

விடுமுறை

உனக்கான பள்ளி                    விடுமுறை நாட்களில்
முத்தங்கள் இன்றி
காய்ந்து கிடக்கின்றன                     எனது கன்னங்கள்,
காயாமல் கிடக்கின்றன                  எனது நினைவுகள்.

Loading

சமூக ஊடகங்கள்

லயம்

எனக்கான கடை நாள் வலிகளை
கண்ணீருடன் விவரிக்கிறேன்.
நித்தியமானவனுக்கு
நித்தம் வலி ஏனோ
என்று விரல் பிடித்து
தலையினைக் கோதி
முத்தம் பதிக்கிறாய்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
கிழம் பாயில படுத்து
அழுது அழுது
உயிரை எடுக்குது.

போய் சேர்ந்தாலும் நிம்மதியா இருப்பேன்.
தூரத்தில் நாய்களின் அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்