தனித்த எச்சங்கள்

நீண்ட நெடும் பயணத்தில்
பாதங்களைப் பதித்து
நம் இருவரின் பயணமும்
தொடர்கிறது.
என் பாத சுவடுகள் மட்டும்
தனித்திருக்கிறது.
காரணம் கேட்கிறேன்.
எச்சங்களை விட்டுச் செல்வதால்
நீ பிம்பம்,
தனித்திருப்பதால் நான் மூலம் என்று கூறி
விழி வழியே வரும்
வினாக்களைப் பரிசளிக்கிறாய்.
அங்கீகாரமாக கண்ணீர் முத்துக்கள் என்னில்.

Loading

சமூக ஊடகங்கள்

ஜன்னல் வெளிச்சங்கள்

காற்றின் தடமன்றி
வேறு என்ன அறிந்திருக்கும்
ஜன்னல்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

சுடலை

பட்ட மரத்தில்
குருவிக் கூடு
எதைச் சொல்ல முற்படுகிறது?

*சுடலை – மயானம்

Loading

சமூக ஊடகங்கள்

சொல் பிறந்த கதை

சொற்களின் வேர் தேடி புறப்பட்டன
சிந்தனைகள்.
உன்னிடம் இருந்தா பிறக்கிறது என்று
ஆகாயத்திடம் வினவினேன்.
காற்று என்னுள் இருப்பதால் காற்றினை
கேட்கச் சொன்னது.
பற்றி எரிவதாலும், படர்ந்து எரிவதாகும்
நெருப்பு பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது காற்று.
கடந்து செல்ல துணைசெய்வது நீராவதால்
நீர் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நெருப்பு.
இயக்கம் அனைத்தும் பூமியில் என்பதால்
நிலம் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நீர்.
பிரபஞ்சங்களின் சேர்க்கையால் ஆனது
மனிதக் கூடு என்பதால்
மனிதனிடம் கேட்கச்சொன்னது நிலம்.
நாபிச் சுழியில் இருந்து சூல் கொள் வார்தைகள்
தொண்டைதாண்டி,
வாயினின் வழி வரத்துவங்குகையில்
சொற்களின் முடிவுகள் பூரணத்துவத்துடன்.

Loading

சமூக ஊடகங்கள்

மகராப் பிரியை

எல்லா அப்பாக்களுக்கும்
தெரிந்துவிடுகிறது
எவரும் அறியாமல்
மகளைக்  மட்டும்
ரகசியமாய் காதலிக்க.

மகராப் பிரியை * – அம்பாள் நாமாவளி 

Loading

சமூக ஊடகங்கள்

நடைவண்டி நாட்கள்

வாழ்வினில் என்ன இருக்கிறது
கனவுகளைத் தாங்கி
நடத்தல் தவிர.

Loading

சமூக ஊடகங்கள்

ஜகத்பதி

அன்று ஒரு நாள்
ஏரியில் நீராவி மண்டபத்தின் அருகில்
கால்களை அலைத்தபடி நான்.
நினைவுகளில்
தும்பைப் பூவின் தேன் துளி,
வட்டங்கள் பெரிதாகவும்
மிகப் பெரிதாகவும் மாறி மாறி.
கரையினில் சலனமற்று நீ.
கைகளில் இருந்து வீசிய
கற்களும் நீருக்குள் மூழ்கி அலைகளுடன்.
சைகைகளைக் காட்டி
காரணம் கேட்கிறேன்.
முற்றுப் பெறா புன்னகையை உதிர்க்கிறாய்.
அப்போது
கற்கள் மூழ்கி இருந்தன
அலைகள் அற்றதாய் ஏரி.
அப்போதும் சலனமற்று நீ.

ஜகத்பதி* – கால பைரவர் அஷ்டத்தில் வரும் பெயர்.

Loading

சமூக ஊடகங்கள்

நினைவிருத்தல்

நகரப் பேருந்தில் இருந்து
கைகாட்டிச் சென்ற
குழந்தைகளை
நினைவு வைத்திருக்குமா
நெடுஞ்சாலை மரங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

தடயங்கள் அற்ற தடம்

காற்றில் கரைந்து செல்லும்
வண்ணத்துப் பூச்சிக்கு
தடம் அமைத்து யார்?

Loading

சமூக ஊடகங்கள்

முடிவற்ற தேடல்கள்

பெருங்கூட்டமொன்று
கூடிக் கலந்து தேடிக் கொண்டிருந்தது.
ஒருவன் தான் தொலைத்த பணத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த புகழைத்
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த குடும்பத்தை
தேடுவதாகச் சொன்னான்.
மற்றொருவன் தொலைத்த சந்தோஷங்களை
தேடுவதாகச் சொன்னான்.
கிடைத்த காலவெளியில்
அவரவர் தொலைந்தது கிடைத்ததாக உரைத்தார்கள்.
ஊழி ஓட்டத்தில் ஒருவன் வந்து
உரை பகன்றான் எதைத் தேடுகிறாய் என்று.
என்னைத் தேடுவதாக உரைத்தேன்.
கண நேரத்தில் கூட்டம் கலைந்திருந்தது
‘அவன் கிறுக்கு பயல் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

மண் வாசனை

எல்லா மழைக் காலமும்
எழுப்பி விடுகிறது
உறங்கி இருக்கும் நினைவுகளை

Loading

சமூக ஊடகங்கள்

நான் தொலைதல்

நீ, கிளி பொம்மையை வாங்கி
அதை பறக்க விட முற்பட்ட தருணங்களில்
தொலைந்திருந்தது
எனது இளமைக் காலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

நித்ய கன்னி

ஒரு ஒளிநாளில்
எனக்கான காதலைச் சொல்கிறேன்.
மோனப் புன்னகைக் கொண்டு
புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறாய்.
வயோதிகனாக நானும்
நித்திய கன்னியாக நீயும்.
எப்படி என்கிறேன்.
ஒளிவேக சுழற்சி*
உண்மையை உணர்தியது என்கிறாய்.
கரைகிறது கனவுகள்.

*As per the Einstein’s relativity theory, when you travel with the speed of light, your age will be reduced. 

Loading

சமூக ஊடகங்கள்

மனதின் வலிகள்

எல்லா வெற்றிகளுக்குப்
பின்னும் இருக்கின்றன
மறுக்க முடியா
மனதின் வலிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

மரங்கள் ஊமையான கதை

ஆதியில் அவன் பெயர்                                     ‘அவன்’ என்று இருந்தது.
அவனுக்கு மரங்களின் மொழிகளும்,
செடிகளின் மொழிகளும் தெரிந்திருந்தன.
நேசித்த இயற்கையை அவன் நேசித்தான்.
சில மரங்கள் அவனிடம்                             அன்பைச் செலுத்தின.
சில செடிகள் அவனிடம்                         துன்பங்களைப் பகிர்ந்தன.
சில மரங்கள் அவனிடம் கதை கேட்டன.
சில செடிகள் அவனிடம் தூங்கின.
சில குறுங் கொடிகளும் அவனிடம்                  நட்பு கொண்டன.
மரங்களின் நட்பு மற்றவர்களுக்கு               புதிராக இருந்தது.
மிகுந்த விலை கொடுத்து
மரங்களையும் செடிகளையும் வாங்குவதாக ஒருவன் தெரிவித்தான்.
செய்தியின் அடுத்த நாளில்
அவன் சென்ற போது மரங்கள் ஊமையாக இருந்தன.

Loading

சமூக ஊடகங்கள்

மூடுவிழா

எல்லா மௌனங்களுக்குப் பின்னும்
இருக்கின்றன
உணர்த்த முடியா ஓசைகளும் வலிகளும்.

Loading

சமூக ஊடகங்கள்

மோனத்துவம்

இருத்தலுக்காக வந்த பிறகு
எல்லாம் இழந்தப் பின்
இயல்பாய் கிடைக்கிறது இளைபாறுதல்.

மோனம் – Silence

Loading

சமூக ஊடகங்கள்

நிகழ்விருத்தல்

இருத்தலுக்கான இடத்தில்
இயலாமைகள்.
ஆனால்
எல்லா இயலாமைகளிலும்
இருத்தல் இயல்பாய்.

Loading

சமூக ஊடகங்கள்

காற்று தனித்திருந்தது

காற்று தனித்திருந்தது
அவ்வேளையில் ஆதியில்
சில பறவைகள்
பறந்து கொண்டிருந்தன.
மாயையின் சாரம் கொண்டிருந்த
இரு பறவைகள் தரையிரங்கின.
உதிர்ந்த ஒற்றை கிளை கொண்டு
கூடு எழுப்பின.
உறவுகளுடன் தாளமிட்டன,
சப்தமிட்டன, நீர் அருந்தின,
மாயப் பிரபஞ்சம் தனக்கானது
என்றும் கொண்டாடின.
வானில் பறந்த பிறிதொரு நாளில்
மரித்துப் போயின.
நகர விரிவாக்கத்தில்
கூடுகளும் கரைந்தன.
காற்று தனித்திருந்தது
எவ்வித தடயங்களும் இன்றி.

Loading

சமூக ஊடகங்கள்

துலாக் கட்டம்

ஆற்றின் ஒரு கரையினில் நானும்
மறு கரையினில் நீயும்.
மொழிகள் அற்ற நாட்களில்
சைகைகளில் பாஷைகள்.
விளைவுகளில் நகரும் நாட்கள்.
பாஷைகள் பழகிய பொழுதுகளில்
உன் கரை நோக்கி வர என்னை பணிக்கிறாய்.
என் கரை நோக்கி வர உன்னை பணிக்கிறேன்.
அவரவர் இடம் விட்டு
எதிர் கரை நோக்கி பயணித்த பொழுதுகளில்
நதி கடந்திருந்தது.

துலாக் கட்டம் – மயிலாடுதுறையில், ஐப்பசி மாதத்தில், காவிரியில்  நடை பெறும் ஒரு விழா

Loading

சமூக ஊடகங்கள்