ஆமம்

கணிப் பொறியில்
நீர் பற்றி கவிதை எழுத
துவங்குகையில்
திரைமேல் சலனங்கள் அற்று
விரைந்து செல்கிறது எறும்பொன்று.


* ஆமம் – உணவு – திருமந்திரம் – 1212
புகைப்படம் :  Mahendiran Thiru


Loading

சமூக ஊடகங்கள்

அடையாளம்

அடையாளம் அற்ற
தனித்த இரவில்
தொலைகிறது தனிமைகளும்

சில கண்ணீர் துளிகளும்.


புகைப்படம் :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

பரவாதனை

மிகவும் சிறியதான உணவகத்தில்
விலைப் பட்டியல் பார்த்து
ஒரு சிங்கில் பூரிஎன்கிறான் ஒருவன்.
அவனுக்குஒரு பூரி செட்டும் ஒரு தோசையும்என்கிறான்
அவன் நண்பன்.
இமை விலகா அவன் விழிநீரின் ஒசைகள்
என் காதுகளில் மட்டும்.
நிகழ்வு பற்றி எதுவும் அறியாமல்
விரைந்து செல்கிறது ஆடிகாரொன்று.

*பரவாதனைபரவாசனைஎல்லாம் சக்திமயமாக உணர்தல்திருமந்திரம் 1174


புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

புதிய தொடக்கம்

கங்கை நீரை
கைகளில் எடுத்து
கலத்தில் இட்ட போது
உடைந்திருந்தது கலமும்,


புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

அரவான்

காலங்களை ஒத்து
ஈரமாக இருக்கிறது நினைவுகள்.
எப்போதோ எவராலோ
உரைக்கப்பட்ட வார்த்தைகளை
நீ உணராமல் உரைத்திருக்கலாம்.
அப்போது நான் மட்டுமே அறிந்த
மௌனத்தின் உப்பு சுவைவை
நீ அறியாமல் இருக்கலாம்.
பிறிதொரு நாளில்
மீன் விற்பவளின் கைகளில் இருக்கும்
விசிறி காகிதமாய் அலைகின்றன உன் நினைவுகள்.
காகித விசிறிக்கா கட்டுப்படும் ஈக்கள்?

* அரவான்மஹா பாரதப் போருக்கு முன் பலி கொடுக்கப்பட்ட மாபெரும் வீரன்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடர் ஊர்வலம்

பிணங்களோடு எறியப்படும்
அன்று பூத்த பூக்களின்  அடுத்த நிலை
என்னவாக இருக்கக் கூடும்?


புகைப்படம்Ulaganathan Muthukumarasamy 

Loading

சமூக ஊடகங்கள்

முகத்துவாரம்


பஞ்ச பூத கவிதை வரிசையில் – நீர்

வழிந்தோடும் ஆற்றில்
மூழ்குதலும் எழுதலும் முதல் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
காற்றுக் குமிழ்கள் பின் தொடர்ந்து பேசத் துவங்குகின்றன.
நாங்கள் உன்னைச் சார்ந்தவர்கள்
உன் நினைவுகள் என்கின்றன.
‘யவன பருவத்தில் நீ விளையாடிய
விளையாட்டுகள்’ என்று கூறி
உடைகிறது ஒரு குமிழ்
‘உனக்கான பள்ளி நாட்களே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘கொண்ட காதல் நினைவுகளே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘நண்டின் கால் உடைத்து
நறுமணம் கொண்டு உண்ட நினைவுகளே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்
‘பெற்ற பேரும் அதன் பொருட்டான பெரும் துயரமும் நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
மூழ்குதலும் எழுதலும் இரண்டாம் முறை நிகழ்கிறது
காற்று வேண்டி தலை மேல் எழுகிறது.
பணிவில் பெற்ற வெற்றிகளும்,
பணிந்து பெற்ற வெற்றிகளும் நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
‘தேவைகளின் பொருட்டு நீ கொண்ட வேஷங்களே நான்’
என்று கூறி உடைகிறது ஒரு குமிழ்.
‘நிறம் மாறிய குடும்ப அமைப்புகளே நான்’
என்று கூறி உடைகிறது பிறிதொரு குமிழ்.
‘உருண்டோடி உடையும் குமிழ்கள் எனக்கானவை எனில்
எது நான்’ என்கிறேன்.
சொற்கள் அழிந்து சூன்யம் தொடங்குகையில்
மூழ்குதல் மூன்றாம் முறை நிகழ்கிறது

பின் தொடர்கிறது பிரணவ ஒலி

*முகத்துவாரம் – ஆறு கடலில் சேரும் இடம்
புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மனோ மௌனம்

வாழ்வுக் கனவுகளில்
விழு திறக்க எத்தனிக்கிறேன்.
ஓடு, ஓடு, பூதம் வருகிறதுஎன்கிறாய்
உன் தேமதுரக் குரலால்.
வியப்பால் விழுகளை உருட்டி
‘எங்கே,எங்கே என்கிறேன்.
நான் தான் பூதம்
என்னைத் தெரியவில்லையா’
என்று கள்ளப் புன்னகை சிந்துகிறாய்
தேவதைகள் பூதங்களாய்
வேஷமிட்டு வரும் காலமிது.

மனோ மௌனம்இறை தன்மையை கர்ப்பத்தில் அனுபவித்த நிலை

Loading

சமூக ஊடகங்கள்

பிராணத் தியாகம்

கைகளில் இருந்து நழுவும் நீரில்
எது எனது நீர்
எனும் நிமிடங்களில்
கரைகிறது காலம்.

புகைபடம் : சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

நித்ய யாசகன்

பஞ்ச பூத கவிதை வரிசையில் – நிலம்

ஒரு விடியலில்
பாதையினில் தனித்த பயணம் தொடர்கிறது.
பிரதிபலிப்பில் நிழல் விழுந்த நிலம்
என்னைத் தெரிகிறதா
எனப் பேசத் தொடங்குகிறது.
ஆமாம்நான் தான் நீ‘ என்கிறது.
வினாக்கள் விழி அசைவுகளை நிறுத்தி வைக்கின்றன..
முன்னொரு தினத்தில்
நீ எருவாக இருந்தாய்,
பின் விதையானாய்,
பின் மரம் ஆனானாய்,
பூவானாய்காயானாய்கனியானாய்,
பின் மாண்டு எருவானாய்’ என்கிறது.
படைப்பின் நோக்கம் குறித்து வினவுகிறேன்.
படைப்புகள் படைத்தவனுக்கு மட்டுமே சொந்தம்
எனும் பதில் வருகிறது.
படைப்புகளின் நேர்த்தியும், நேர்த்தியின்மை குறித்தும்
கேள்விகள் எழுகின்றன.
காலங்களுக்கு கட்டுப்பட்டது தானே
அனைத்து பிரபஞ்சங்களும் அதன் உட்பொருள்களும்
என்றாய் பதில் வருகிறது.
சுழற்சியின் காலம் பற்றி வினவுகிறேன்.
நீயும் நானும் ஒன்று எனில்
காலம் குறித்து என்ன சொல்லமுடியும்‘ என்கிறது.
முன்னே தவழ்ந்து செல்லும் குழந்தை ஒன்று
தன் கைகளால் நிலம் கீறி எழுதிச் செல்கிறது
ஓம் சிவோகம்‘.


புகைப்படம் : இணைய தளம்

Loading

சமூக ஊடகங்கள்

நண்பு

கண் முன்னே
எரியும் பிணங்கள்
குளிர் நீக்கி வெப்பம் தரும்.
சுழற்சி முறையில்
எனக்கான இடமும் மாறும்.
அப்போதும் இக்கவிதை
அரங்கேற்றம் கொள்ளும்.


நண்பு  நேசம்
*திருமந்திரம் – 992
புகைப்படம்இணையத் தளம்

Loading

சமூக ஊடகங்கள்

மாறும் நிலைகள்

மின்கம்பிகளின் வழியே
படர்ந்து செல்லும் கொடிகளின்
அடுத்த நிலை என்ன
என்ற வினாக்களில்
கரைகிறது வாழ்வு
புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

பரவும் மௌனம்

அலைகள் ஓய காத்திருக்கிறது மனம்
மனம் அடங்கக் காத்திருக்கிறது அலைகள்
பிறகான ஒருதருணங்களில்
ஒன்றில் ஒன்று ஒன்றி.


புகைப்படம் : வலைத்தளம்

Loading

சமூக ஊடகங்கள்

அட்சர அப்யாசம்

‘சவப்பெட்டி’ என்று எழுதத்துவங்கும்
குழந்தையின் முதல் மனநிலை
என்னவாக இருக்கும்?


புகைப்படம் :  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆன்மாவின் மறுதலித்தல்

குழந்தைகளின் விருப்பங்களை
மறுதலிக்கும் பெற்றோர்களின்
காயங்களுடன் மறைந்து இருக்கிறது
இயலாமைகள்.


புகைப்படம் :  Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

சொல் புதையல்

கோவிலுக்குள்
எங்க சாமியே காணும்
எனும்  குழந்தையின் சொல்லில்
ஒளிந்திருக்கிறது சூட்சமங்கள்.


புகைப்படம் : தேவதைத் தூதன்

Loading

சமூக ஊடகங்கள்

கவரிமான்

பெரியதாக ஏற்க ஓன்றும் இல்லை
சில பிச்சைகளையும்
சில நினைவுகளையும் தவிர.



புகைப்படம் : விவேக்

Loading

சமூக ஊடகங்கள்

நாற்றம்

காகித மலர்களுக்கு
வாசனை இல்லை
தன்னைத் தவிர.











* நாற்றம் – மணம்
புகைப்படம் : விவேக்

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்களின் பிம்பம்

ஒரு மழைக் காலத்தில்
வீட்டிற்கு வெளியே
பெய்யும் மழையினை கவனிக்கையில்
அது தாண்டி செல்லும் ரயில்
ஏதோ ஒரு பிம்பம் உண்டாக்கிச் செல்கிறது.










புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

மௌனத்தின் நிறம்

நீண்ட நாட்கள் ஆயிற்று சந்தித்து என்கிறேன்
பெரு நீர்ப்பரப்பில் சந்திக்கலாம் என்கிறாய்
முழு நிலவினை சாட்சி வைத்து
நினைவுகளும் நிதர்சனங்களும் தொடர்கின்றன.
இருப்பினை விடுத்து
இழப்பினை உறுதி செய்வதா வாழ்வு என்கிறேன்.
புன்னகை வலது மூக்கில் இருக்கும் 
வைர மூக்குத்தி வரை நீள்கின்றன.
சொற்களுக்கு நிறம் இருக்கின்றன என்கிறேன்.
அப்படி எனில் மௌனத்தின் நிறம் என்ன என்கிறாய்.
பிறிதொரு நாளில் இருக்கின்றன
மழையில் நனைந்த
நந்தியாவட்டை செடிகளாய் நினைவுகள்.


புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்