
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇரும்பைமாகாளம்
- காடுவெளி எனும் வெட்ட வெளியைக் குறிக்கும் கடுவெளிச்சித்தர் இத்தலத்தில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்ததால், தவத்தின் காரணமாக மழை இல்லை என்று எண்ணி மாது ஒருவளை அனுப்பினான். அவள் உப்பும் காரமும் சேர்த்தஅப்பளத்தை அரச இலை போல் செய்து தை உண்ணச் செய்து அவரின் தவத்தை கலைத்தாள். சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் அங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். பஞ்சம் நீங்கப் பெற்றப்பின் நடைபெற்ற திருவிழாவில் அம்மாதுவின் காற் சிலம்பு கீழே விழுந்தது. அந்த நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்ட செயலைக் கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் கோபம் கொண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. மன்னன் மன்னிப்பு கேட்டப்பின் சித்தர் மீண்டும் 1 பாடல் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது.மன்னன் சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி வழிபட்டான்
- மாகாளம் என்ற பெயருடன் விளங்கும் மூன்று சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மற்றவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம்
- கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்லியதால் அம்பாளின் நாமம் “குயில்மொழி நாயகி’
- சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டதால். அவர்களை மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்ற இடம்.
- வீர சைவ மரபில் வந்த மகாகாளர் எனும் மகரிஷி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவன் மகாகாளநாதர்
- கிரகங்கள் தம் மனைவியருடன் ஒன்றாக இருக்கும் நவக்கிரக சன்னதி
- நடராஜர், கால் சற்று கீழே மடங்கியபடி சந்தோஷ கோல அமைப்பு
- விமானம் ஏகதள விமானம்
| தலம் | திருஇரும்பைமாகாளம் |
| பிற பெயர்கள் | இரும்பை மாகாளம், திருவிரும்பை மாகாளம், இருஞ்சேரி , இலுப்பைவனம் |
| இறைவன் | மாகாளநாதர், மகாகாளேஸ்வரர் |
| இறைவி | மதுரசுந்தரநாயகி குயில் மொழியம்மை |
| தல விருட்சம் | புன்னை |
| தீர்த்தம் | மகாகாள தீர்த்தம் |
| விழாக்கள் | மகாசிவராத்திரி , மாசிமகம் , திருக்கார்த்திகை , பங்குனி உத்திரம் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 00 மணி முதல் இரவு 8 00மணி வரை
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில் இரும்பை அஞ்சல், வானூர் வட்டம் கடலூர் மாவட்டம், PIN 605010 +91- 413 – 268 8943, 98435-26601 , 94434-65502 |
| வழிபட்டவர்கள் | சுந்தரர் – ஊர்த்தொகை நூல் |
| பாடியவர்கள் | திருஞானசம்பந்தர், பட்டினத்தார் |
| நிர்வாகம் | |
| இருப்பிடம் | திண்டிவனம் – பாண்டி ( வழி : கிளியனூர் ) சாலை-> திருச்சிற்றம்பலம் கூட்ரோடு -> இரும்பை சாலையில் இருந்து சுமார் 2 கிமீ |
| இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 274 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 32 வது தலம். |
மாகாளநாதர்

குயில் மொழியம்மை

புகைப்படம் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 117
திருமுறை எண் 9
பாடல்
அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.
பொருள்
மார்க்கண்டேய முனிவரொடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவனும், இராவணன் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விருப்பமாக உறையும் இடம் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.
கருத்து
அட்ட – மார்க்கண்டேய முனிவரொடு போராடிய,
எட்டும் இருபத்திரண்டும்(8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
மட்டு – தேன்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 117
திருமுறை எண் 10
பாடல்
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
பொருள்
நாகத்தை தன் இடையில் அணிந்தவரும், தீயினை கையினில் ஏந்தியவரும், குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்ததும், பிரமன், மால் ஆகியோரால் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்றதும்,வானோரும் மறையோரும் தொழும் இடம் பெரியோனின் திருமாகாளமாகும்.
கருத்து
ஆர்த்து – கட்டி ((ஆர்த்த பிறவி துயர் கெட..), குரவம் – குராமரம் (மலைவசம்பு அல்லது குரவகம்)
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
![]()

















































