
பாடல்
எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாண லாகுமே
அருளியச் சித்தர் : சிவவாக்கியர்
கருத்து – குரு உபதேசம் கொண்டு மாயையினை வென்று ஈசனை அடையலாம் எனக் கூறும் பாடல்.
பதவுரை
வினைகளை நீக்க வழி அறியாமல் மீண்டும் மீண்டும் இழிவான பிறப்பினை எடுத்து பிறந்து ஈசனை துதியாமல் மெய்யறிவால் இழிந்த ஏழைகளாக இருந்த போதிலும் பிறந்து பிறவியின் நோக்கம் அறியாமல் வெந்தநீறு பூசுகிறீர்; கடல் அளவு இருக்கும் மாயா மலங்களை அறுத்து அதன் மீதான ஆசைகளை நீக்க இயலாதவராக இருக்கிறீர்கள். குருவால் உபதேசம் செய்யக் கூடிய மந்திரம் கொண்டு அதை செபித்து இவைகளை விலக்கி அதன் மூலம் ஈசனைக் காணலாம்.
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #சித்த(ர்)த்_துளிப்பு, #சித்தர்_பாடல்கள் #சிவவாக்கியர்