
பாடல்
சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே
முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – திருமயிலாடுதுறை திருத்தலத்தின் பெருமைகளைக் கூறும் பாடல்.
பதவுரை
ஆணவம் கொண்ட பிரம்மனின் கர்வத்தினை அழிக்க அவன் தலையினைக் கொய்து அந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலருடைய இல்லங்களிலும் சென்று யாசித்து உண்ணும் மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனின் தோள்கள் நெரியுமாறு அடர்த்த நன்மை தருபவனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.
விளக்க உரை
- பரம்கொள் பரமேட்டி – மேன்மையைக் கொண்ட சிவன்
- வரையால் அரங்க – கைலையால் நசுங்க