
பாடல்
திங்கள்செஞ் சடையு மோர்பாற் றிருமுடி துலங்கக் கையிற்
கங்கண மிலங்கக் காலிற் கவின்சிலம் பலம்ப வன்பர்
சங்கரா வெனநின் றேத்தத் தாயெனக் கிருபை நல்கி
அங்கமொன் றான சோதி யணியணா மலையு ளானே
திருவண்ணாமலைப் பதிகம் – திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்
கருத்து – அண்ணாமலைத் தலத்து ஈசனை புகந்து கருணைக் கொண்டு தாயென அருள வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
தனது செஞ்சடையில் சந்திரனை சூடியும், கையில் ஒளி வீசக்கூடியதான கங்கணமும் அணிந்து, அழகு பொருந்தியதும் ஒலிக்கக்கூடியதுமான சிலம்பும் அணிந்து சோதி வடிவமாக திருஅண்ணாமலை திருத்தலத்தில் வீற்றிருப்பவனே! உனது அன்பர்கள் சங்கரா என நின்னை நினைந்து ஏத்தி புகழ் சொற்களை தாயேனக் கருதி உன்னுடைய கருணையினை அருள்வாய்.
விளக்க உரை
- இலங்குதல் – ஒளிசெய்தல், விளக்கமாகத் தெரிதல்
- கவின் – அழகு
- அலம்புதல் – ஒலித்தல், ததும்புதல், தவறுதல், அலைதல், கழுவுதல்