
பாடல்
பாரென்று விந்துவிலே பாலாசத்தி
பரையினுட வம்மென்ன பகரப்போறேன்
சேரென்ற மொழியாட்கு வயதோ பத்து
சூரியனுஞ் சந்திரனு மகா திலதத் தோடு
கோரென்ற ஏவிகொடிகழேனிக்காந்தி
கூறியதா அத்தத்தில் குறிப்பைக்கேளு
ஆரென்ற அபயமொடு வரதமாகும்
அழகான திருமுறையுஞ் செபவடமுந்தானே
போகர் கருக்கிடை நிகண்டு 500
கருத்து – பாலாவின் திருவடிவம் பற்றி போகர் உரைத்தப்பாடல்
பதவுரை
சக்திதத்துவம் ஆனதும் புள்ளி வடிவில் உள்ளதும் ஆன பிந்துவில் உள்ள பாலா சத்தியை பற்றி கூறுகிறேன் கேள். சத்தி வடிவமான அவள் பத்து வயதை உடைய உருக்கொண்டவள், அவள் சூரிய சந்திரர்களை தோடாக அணிந்திருப்பவள்; அவளுடைய மேனி கோடி சூரிய ப்ராகசத்தினைக் கொண்டது; மனம்எனும் மாயைஜெயித்த கோதண்டம்ஏந்திய இராமனை போல் தூயநிலையில் அத்தன் சிவத்தை ஆராதாரத்தில் இருத்தி நேர்கொண்டநிலையில் ஆதியான நாயக நாயகி ஆனவளும் அழகான நெற்றிவகிட்டில் ஆன்மஜோதியான நெற்றிசுட்டியும் கொண்டு அனைத்து படைப்புக்கும் ஆதாரமானவளும் ஆதிமாதா எனப்படுபவளுமான அவள் கைகளில் திருமுறைகளும், செபமாலை ஆகியவற்றை கையில் ஏந்தியவளாகவும், அபய வரத முத்திரைக் கரங்களை உடையவளாகவும் இருப்பாள்; அவளை அவ்வண்ணமே சதா தியானிப்பவர்களுக்கு அவள் வடிவமே மந்திரமாய் காக்கும்.
விளக்க உரை
- கோதண்டம் போல் நீ நின்றால் மந்திரம் மறைந்து அவள் திருநாமமே முக்தியளிக்கும் என்பது பொருள்
பதவுரை எழுத உதவி செய்த பெயர் வெளிட விரும்பாத சக்தி உபாசகருக்கு என நமஸ்காரங்கள்