பாடல்
ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையு முகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே
சிவவாக்கியர்
பதவுரை
தனவானகளாக காட்ட கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆடுகளையும், கணக்கற்ற எல்லைப்பகுதியாகிய நாடு என்பதை விரிவாக்கம் செய்தும், கணக்கற்றதான காட்டுப்பரப்பில் மான்களையும், சேனைப் படைகளையும் மிகுந்த முயற்சியுடன் செய்யப்படும் கணக்கற்றதான வாசி தேடினும் உடலை விட்டு உயிர் பிரிந்து போகும்போது உறுதுணையாக வந்து உதவுமோ? நிச்சயமாக உதவாது. தானே விரும்பிச் சென்று ஐந்து அறிவும் அதற்கு கீழான நிலையில் காணப்படும் உயிர்களுக்கு தரப்படுவதானான பிச்சையும், மனம் விரும்பி பிறர் உந்துதல் இல்லாமல் ஆறாம் அறிவுடைய உயிர்களுக்கு செய்யப்படுவதாகிய தர்மமும் மட்டுமே சவுக்குக்கு கட்டுப்படும் குதிரை போல் உறுதுணையாக வந்து நிற்கும்.
விளக்க உரை
- ‘பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே’ எனும் பட்டினத்தார் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.