பாடல்
நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று
தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம்
தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே
பத்தாம் திருமுறை- திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.
விளக்க உரை
- நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
- நேயந்தனை – சிவத்தை.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
ஈசான மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
அருளல்