Category: பசி
நகர மறுக்கும் நினைவுகள் – 11 – பற்றுக் கணக்கு
சொந்த ஊர் பற்றி நினைத்தாலே சுகம் எனில் அதைப்பற்றி எழுத வேண்டும் எனில்…
மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு பெருமை மாயூரத்திற்கு உண்டு. அது ‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா‘ என்பதே. இது மாயூர மனிதர்களுக்கே உண்டான கர்வம். காவேரி தண்ணீர், கும்ப கோணம் வெத்திலை, புகையிலை மற்றும் மிகச் சிறந்த அக்கப்போர்கள்
அப்போதுஎனக்கு சிறுவயது.(இப்போது மட்டும் என்ன. இப்போதும் அப்படித்தான்)
தாத்தா ஸ்ரீராம் சைக்கிள் கம்பெனியில் கணக்குபிள்ளையாக வேலை பார்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு மாலை டிபன் உண்ணும் பழக்கம் உண்டு.
தாத்தாவுக்கு மயூரா லாட்ஜில் கணக்கு உண்டு. தினமும் சாப்பிட்டு விட்டு அவரே தனது நோட்டில் எழுதி விடுவார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு செட்டில் ஆகி விடும்.
அப்போதுமணிகூண்டுபக்கத்தில் வரும் போது சாம்பார் வாசனை வரும்.(சுமார் 200 மீட்டர் தூரம்). ‘பெரும் வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது‘ என்று பலகை வேறு
இன்னைக்குசாயங்காலம் பூரி சாப்பிட்டேன். நல்லா இருந்துது. நாளைக்கு உன்னையும் அழச்சிகிட்டு போரேன். இதழ்கள் புன்னகைக்கும். தும்பைப்பூவினைப்போன்ற ஒரு புன் சிரிப்பு. அப்பா எத்தனை பளீர்
ஆயி (தற்போது வழக்கு ஒழிந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான சொல் – அம்மா என்ற பதத்தில் வரும் பாட்டி)
ஆயி : உங்களுக்கு இதே வேல, புள்ளைகள் கிட்ட இத வந்து சொல்லிகிட்டு.
யாரும் அற்ற ஒரு மதிய வேளையில் தாத்தா இறந்து போனார்கள்.
அவருக்குப் பின் அவருடைய பெட்டியினை(எத்தனை பொக்கிஷம்) திறந்தோம். ஒரு சில பேப்பர்கள், சில பேனாக்கள் இத்யாதிகள். கூடவே மயூரா லாட்ஜ் கணக்கு பேப்பர்.
அன்றைய தேதியில் ரூ 80 பாக்கி இருந்தது.
ஒரு மாலைப் பொழுதின் பின் பொழுதினில் நானும் எனது தந்தையும் மயூரா லாட்ஜ் சென்றோம்.
கல்லாவில்ஒரு அழகாக ஒரு மனிதர். வெள்ளை சட்டை, விபூதி மற்றும் குங்குமம்.( அப்பா எத்தனை அழகு)
முதலாளி: என்ன வேணும்?
அப்பா: நான் தங்கவேல் பையன். அப்பா தவறிட்டாங்க. அவங்க கணக்கு எழுதி வைத்திருந்தார்கள். ரூ 80 பாக்கி இருக்கிறது. அத குடுக்க வந்தோம்.
தீர்க்கமான ஒரு பார்வை. வினாடி மௌனம்.
முதலாளி: அவர் எனது நீண்ட கால வாடிக்கையாளர். அதோட மட்டும் இல்ல அவர் எனது நண்பரும் கூட. மீக நீண்ட நாள் பழக்கம் உண்டு. இன்னைக்கு வரைக்கும் அவர் கணக்கில் தவறே வந்தது இல்லை. அந்த நல்ல மனிதருக்காக நானே அந்த செலவை ஏத்துக்கிறேன். நீங்க கொடுக்க வேண்டாம்.
உண்ட பிறகு வீசி எறியும் உணவுப் பண்டங்களின் உறைகளில் சில உணவுத் துகள்கள் ஒட்டியிருக்கும். அப்படித்தான் காலம் வீசி எறிந்த நிகழ்வுகளில் இன்னும் நினைவுகள் ஒட்டி இருக்கின்றன.
புகைப்பட உதவி : Mahendiran Thiru
ஆற்றுப்படுதல்
கானல் காட்சிகள்
அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
‘வாடா சாப்ட‘ என்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.
Click by : R.s.s.K Clicks
வழிப்போக்கன்
உயிரின் மொழி
வான் விளிம்பு
கிலுப்தம்
எச்சங்கள்
என்னவெனில்
முன்னேற்றம்
காற்றில் ஆடும் சருகுகள் – 9
போராட்டங்களில் முடிவு மௌனத்தில் நிறைவு பெறுகிறது.
சந்நியாசிகள் உருவாவதில்லை. உருவாக்கப் படுகிறார்கள்.
———————————————————————————————-
இரு பெண் குழந்தையின் தகப்பனின் கண்களில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்கிறது. முன்று பெண் குழந்தைகளை கொண்டிருப்பவனின் கண்களில் கர்வமும், கவலையும் தெரிகிறது.
———————————————————————————————-
பேருந்து நிலையத்தில் மனைவியிடம் பணம் பெறும் கணவனின் கண்கள் எப்போதும் மண் நோக்கியே இருக்கின்றன. கண்கள் நீர் கோத்தே இருக்கின்றன.
நேசித்தல் இயல்பாகும் வரையினில் வலிகள் இருக்கும்.
—————————————————————————————————————————————————————-
யாரும் அற்ற பேருந்து நிழற் குடையில் உறங்கும் மனிதனின் சந்தோஷங்கள் நிலையானவையா?
—————————————————————————————————————————————————————-
தனது மகனை முத்தமிடும் தாயின் கண்கள் எப்போதும் பனித்திருக்கின்றன.
—————————————————————————————————————————————————————-
பெண்ணைத் துறக்கும் எந்த ஆணிற்கும், தன் பெண்ணைத் துறத்தல் அரிதாகவே இருக்கிறது.
—————————————————————————————————————————————————————-
காரினில் முன்னிருக்கையில் தாயில் மடியில் அமர்ந்து வாயில் விரல் வைத்து செல்லும் குழந்தையின் கனவுகளும் ஏக்கங்களும் என்று நிஜமாகும்?
—————————————————————————————————————————————————————-திருமண கோலத்தில் இருப்பவர்களைப் பார்த்து மற்றவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்று இப்போழுது
தான் தெரிகிறது. (டேய், போடா, போடா)
புன்னகைக் பூக்கள்
காயம் படிந்த காயங்கள்
கரையில் நீந்தும் மீன்கள்
காற்றில் ஆடும் சருகுகள் – 8
நம் குழந்தைகள் நம் முன்னே வளர்தல் தான் உலகின் மிகப் பெரிய அதிசயம்.
——————————————————————————————————————————————————————-
மறுத்தலில் மகிழ்வுறுபவன் மயானம்அடையான்.
——————————————————————————————————————————————————————-
மிகக் குறைந்த தூரம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் மிக வயதானவனில் அருகில் அமரும் இளம் பெண்கள், யாரும் அறியாமல் ஒரு இதழ் வழி புன்னகையை வயதானவனிடம் ஏற்படுத்துகிறார்கள்.
——————————————————————————————————————————————————————-
விளக்கில் இருந்து எடுத்த பின்னும் நூல் திரியில் இருக்கும் எண்ணை தீரும் வரை அது எரியும். அதுபோல் ஆன்மாக்கள் பக்குவம் பெறாமல் ஆசைகள் இருக்கும் வரை பழைய வாசனையின் காரணமாக பிறப்பு தொடர்ந்து கொண்டிருக்கும்.
——————————————————————————————————————————————————————-
சிறு மழையில், தாயின் குடையில் வராமல் தலையை குடைக்குள் வைத்து கைகளை மழையில் நனைந்து செல்லும் சிறார்களில் சந்தோஷங்கள் வலிமையானவை.
——————————————————————————————————————————————————————-
மனைவி : இன்னைக்கு லீவு. இன்னைக்கு முக்கியமா…. என்னங்க பேசாம இருக்கீங்க.
கணவன் : கையால் சைகை காட்டி – மௌனம் (எப்புடி)
மனைவி : எல்லா நாளும் அப்படித் தான் பேசாம இருக்கீங்க. இது என்ன புதுசா (எப்புடி)
——————————————————————————————————————————————————————-வாசிப்புக்கு உரிய கைகள் யாசித்தலே வாழ்வின் மகத்தான வலிகளில் ஒன்று.
——————————————————————————————————————————————————————-புகைவண்டியில் பயணிக்கும் போது பொருள் வேண்டி பாடும் கண்கள் அற்றவனின் ‘முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்‘ என்ற பாடல் அதிக வலி உண்டாக்குகிறது.
——————————————————————————————————————————————————————-
தனது முதல் நரையைகாணும்ஆணின்மனவலிகள் அதிகமானவை. பெண்ணின் மனவலிகள் அதைவிடஅதிகமானவை.
——————————————————————————————————————————————————————-மனைவியின் ‘பயண்பாட்டிற்கு‘ ஏற்றவாறு கணவன் நேசிக்கப்படுகிறான்.
நாற்றம்
மீதமிருக்கும் பிரபஞ்சம்
ஆதி நிகழ்வுகள்
விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று
மௌனத்தின் பாஷைகள் மட்டும்.
Click by : Bragadeesh Prasanna.