தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
· சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
· வாணன், ஒணன் எனும் அசுரர்களும் முனிவர்களிக்குமான மனக்கசப்புகள். முனிவர்களுக்காக தொண்டை மன்னன் போர். அதலால் தோல்வி. பட்டத்து யானை முல்லைக் கொடியில் மாட்டிக் கொள்ளுதல். அதன் பொருட்டு மன்னன் கொடிகளை நீக்குதல். அதனால் ரத்தம் வெளியேற்றம். தன் நிலை குறித்து வருந்தி மரணம் விரும்பி மரணிக்க எண்ணுதல். இறைவன் காட்சி
· தலையில் வெட்டுப்பட்ட காயங்களுடன் காட்சி. ஆதலால் வருட முழுவதும் சந்தனக் காப்பு. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருக்காப்பு நீக்கப் படும்
· நந்தி அசுரர்களை அழிக்க மன்னனுடன் சென்றதால் சுவாமிக்கு எதிர் திசையில் உள்ளது.
· அசுரர்கள் வைத்திருந்த வெள்ளெருக்கு மரங்கள் தூண்களாக
· ப்ரமன் வழிபட்ட தலம்
· கண்ணிழந்த சூரியன் நற்கதி அடைந்த இடம்
· சந்திரன் (ஷயரோகம்) சாபம் நீங்கப் பெற்ற இடம்
· 27 நட்சத்திரங்கள் நற்கதி அடைந்த இடம்
· வசிஷ்டர் காம தேனுவைப் பெற்ற இடம்
· பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற இடம்
· துர்வாசர் கோபம் நீங்கிய இடம்
· இந்திராணி பூசை செய்து இந்திரனை அடைந்த இடம்
· ஐராவதம் துயர் நீங்கப் பெற்றத் தலம்
· தேவமித்திரன் , சம்புதாசன் , சித்திரதன்மன் – இறைவனை அடைந்து முக்தி அடைந்த தலம்
· சுந்தரர் கண்பார்வை இழந்த பின் முதலில் தரிசனம் செய்த தலம்.
· நவக்கிர சன்னதி இல்லை
· பௌர்ணமி தின வலம் வருதல் – மூன்று தேவியர்களில் ஒரு தேவி
· லவ குசர்கள் வணங்கிய சிவன் – குசலபுரேஸ்வரர்
· கஜ பிருஷ்ட விமானம்
|
தலம்
|
வடதிருமுல்லைவாயில்
|
|
பிற பெயர்கள்
|
திருமுல்லைவாயில், மணிநகர்
|
|
இறைவன்
|
மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்,
|
|
இறைவி
|
கொடியிடை நாயகி
|
|
தல விருட்சம்
|
முல்லை
|
|
தீர்த்தம்
|
அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், மானத தீர்த்தம், குகனருந்தடம், அயிராவத தீர்த்தம், இஷ்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், அரதனத் தீர்தம், சிவஞான தீர்த்தம், பிரம தீர்த்தம் – தீர்த்தம் ஒன்று, பெயர்கள் பல.
|
|
விழாக்கள்
|
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மாசித்தெப்ப விழா,
ஆனியில் வசந்த உற்சவம்
|
|
மாவட்டம்
|
செங்கல்பட்டு
|
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லைவாயில், சென்னை – 609113.
+91-44- 2637 6151
|
|
பாடியவர்கள்
|
சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார், மாதவச் சிவஞானயோகிகள், இரட்டைப் புலவர்கள்
|
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து 26 கி.மீ தூரம்.
சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயிலில் ஆவடி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
|
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 255வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 22வது தலம்.
|
கொடியிடை நாயகி உடனாகிய மாசிலாமணீஸ்வரர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 69
திருமுறை எண் 1
பாடல்
“திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை–வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை–வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
பொருள்
தேன் பொருந்திய சோலைகளால் சூழப்படிருக்கும் திரு முல்லை வாயிலில் உறைபவனே, பாசுபதா அஸ்திரம் உடையவனே, பரம் சுடரே, வீடு பேறு, அதற்கு காரணமான மெய் பொருள், செல்வம் இவைகள் அனைத்தும் உனது திருவடியினால் அமையப் பெற்றவை என்று எண்னம் கொண்டு யாரையும் துணையாகக் கொள்ளாமல், அவர்களை விலக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு உன்னை வாயால் பாடும் அடிவனாகிய நான் படும் துயரத்தினை நீ களைவாயாக.
கருத்து
· அனைத்தும் இறைவனால் அமையப் பெற்றன என்பதில் முடிவான எண்ணம் உடையவர் .
· ஒருவரை மதியாது – மற்றவர்கள் இவற்றை ஒத்துக் கொள்ளாததால் அவர்களை மதியாது
· படு துயர் – வினைத் தொகை. (எல்லாக் காலங்களுக்கும் பொதுவானதால் – துயரம் எல்லாக் காலங்களுக்கும் பொதுவானது)
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7ம் திருமுறை
பதிக எண் 69
திருமுறை எண் 8
பாடல்
பாடல்
நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்–தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்–தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
பொருள்
ஆணில் சிறந்தவனே(சிவன்), சிறந்த பொன் போன்றவனே, அன்றைக்கு என்னை திருவெண்ணை நல்லூரில் நாய் போன்ற என்னை ஆட் கொண்ட சம்புவே, வானத்தில் உறைபவர் வணங்கி துதிக்கும் பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனே, செம் பொன்னால் ஆன மாளிகையால் சூழப்பட்டிருக்கும் திருமுல்லைவாயில் நான் தேடி திரிகின்றேன். இவ்வாறு திரிவதால் ஏற்படும் துன்பத்தைக் களைவாயாக.
கருத்து
நம்பன் – ஆணில் சிறந்தவன், சிவன்
பைம்பொன் – பண்புத் தொகை(பசுமை+பொன்)
Image courtesy: Internet
![]()


