அமுதமொழி – விசுவாவசு – சித்திரை– 25 (2025)


பாடல்

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரன் தானே

திருமந்திரம் – திருமூலர் (திருவம்பலச் சக்கரம்)

கருத்து : சிவனின் போற்றுதலுக்கு உரிய திருப்பெயரின் பெருமைகளை உரைக்கும் பாடல்

பதவுரை

இருபத்தைந்து அறைகளிலும் நடுவாகத் தோன்றும் எழுத்தாகவும், சிறப்பென்னும் செம்பொருளாகியும் நிற்கும் சிவனுக்கு உரிய எழுத்து ‘சி’காரமாகும். மற்றைய ‘வ, ய, ந, ம’ என்னும் நான்கெழுத்துக்களும் சேர்ந்து சிவனின் போற்றுதலுக்கு உரிய புகழ்சேர்க்கும் திருப்பெயராகும். நான்கு பெருந்திசைகளிலும் சிவம் பொருந்தி உள்ள நாற்கோணம் திருவைந்தெழுத்தாகும். எங்கும் இருக்கும் பரசிவம் ஒரு மனையிலே ஒன்றி இருக்கும். இந்த நான்கு எழுத்திலும் சிகரம் எப்பொழுதும் உடனாய் நிற்கும்.

விளக்கஉரை

தன்னெழுத்து 

  • சி (எனும் எழுத்து)
  • நாயோட்டும் மந்திரம்

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #பத்தாம்_திருமுறை ‍ #திருமந்திரம்  #திருமூலர் #முதல்_தந்திரம் #திருவம்பலச் சக்கரம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!