
பாடல்
தேகநாம் என்றென்றூ செப்புவீர் ஈதில்வரும்
போகநாம் என்று புலம்புவீர் – நோக
வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம்
பொருந்துவீர் எப்படிநீர் போய்
சிவபோகசாரம்
கருத்து – இன்ப துன்பங்களின் காரணம் முந்தைய வினைகள் என்பதை அறியாமல் மாயை கொண்டு மயங்கி இருத்தலை கூறி அதில் இருந்து விலகாமல் இருப்பதைப் பழித்துக் கூறும் பாடல்.
பதவுரை
தூலமும் சூட்சமும் ஆகிய இந்த உடலை முன்வைத்து தேகம் நாம் எனும் ஆணவம் கொண்டு உரைப்பீர்; இதனால் வரக்கூடியதும் மகிழ்வினைத் தருவதுமான இன்பமும் செல்வமும் என்னுடையது என்று அகங்காரம் கொண்டு புலம்புவீர்; இவ்வாறு முன்னர் செய்ய வினையின் காரணமாக வரும் தீவினையின் காரணமாக இவ்வாறான துன்பம் வாய்க்கப்பெற்றது என்று எண்ணாமல் இதை இன்பம் என்று எண்ணி அதில் பொருந்துவீர்; எப்படி நீர் (மாயை விலக்கி – மறை பொருள்) முக்தி அடையப்போகிறீர்?
விளக்க உரை
- போகம் – இன்பம், செல்வம், விளைவு