
பாடல்
புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவனுக்கு வரும் பயன்களை விவரித்துக் கூறும் பாடல்.
பதவுரை
சத்தியைப் பக்குவ முதிர்ச்சியால் வழிபடுபவன் தான் பெற்ற தவத்தின் காரணமாக உலக முழுவதாலும் போற்றப்படும் பெருமையுடையவானகவும், மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுபவனாகவும், அருளுடைமையால் இனியவனாகவும், அனைவருக்கும் பக்கத்தில் இருக்கும் நெருங்கிய உறவினன் போல் உரியவனாய் விளங்குவான்.
விளக்க உரை
- அமர்தல் – அமைதல். அமர்ந்திருத்தல்
- அண்ணியன் – பக்கத்தில் இருப்பவன், நெருங்கிய உறவினன்
- பெருமை, தவத்தினாலும், இனிமை அருளால் தோன்றும் பெறப்படும்