பாடல்
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்
தாயுமானவர்
பதவுரை
நிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய தோன்றி ஒடுங்கும் தொழிலுடையது. இந்த உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ? (எளியேன் அறிகின்றிலேன்)
விளக்க உரை
- திகபரம் – இகம் மற்றும் பரம்