அமுதமொழி – விளம்பி – தை – 12 (2019)

பாடல்

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

நெல்லிக்காத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், ஒளி வீசும் வெண்மையான திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய நெருப்பினைப் போன்ற போலும் வண்ணனாய் விளங்குபவன்; தருமத்தை நிலை நிறுத்தவேண்டி, உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டு அருளுபவன்; அந்த அறநெறிக்கு மாறாக நடந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களின் முன்று மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் எல்லோராலும் அறியப்பட்டவன்.

விளக்க உரை

  • அறத்தால் – தருமத்தை நிலை நிறுத்தவேண்டி
  • உயிர் காவல் – உயிர்களைக் காத்தல்
  • மறம் – அதர்மம்
  • மாண்பு – மாட்சி
  • தெரிவு – விளக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *