பாடல்
நீலக்கயல்விழி மானார் கலவியின் நேசம் வைத்தே
ஆலைக்கரும்பது போலாய் விடாதுன்னருள்புரிவாய்
வாலைக் கலைமதி வேணியனே வடுகா அடியார்
சாலத் தொழும் ஐயனே காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
சுத்தமான அழகிய கலைகளை உடைய சந்திரனை தலையில் அணிந்தவனே! வடுகனே! அடியார்களால் மிகவும் தொழப்படுபவனே! காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! நீலமான மீன் போன்ற விழிகளை உடைய பெண்டிர் மேல் நேசம் வைத்து ஆலையில் அகப்பட்ட கரும்பு போல் ஆகிவிடாமல் நன்னருள் புரிவாய்.
விளக்க உரை
- மாயை அகற்றவேண்டி துதித்தல்.
- மானார் – பெண்டிர்
- வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்; சத்திபேதங்களுளொன்று; திராவகம் வடிக்கும் பாண்டம்; சுத்தம்; பாதரசம்; சித்திராநதி