இசைக்கருவிகள் அறிமுகம் : கொக்கரை
புகைப்படம் : முத்தமிழ் வலைக்காட்சி
பாடல்
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன் ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.
விளக்க உரை
- கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாத்தியங்கள்.
- ஒக்க ஆடல் உகந்து – ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி
- அக்கு – சங்குமணி