Category: காதலாகி
2038 – செயற்கை கண்திரை – Artificial Retina
(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
Artificial Retina Brings Light to Blind – News
1.
அந்த தென்றல் சீரியல வர வர சரியாவே தெரியல. 1288 episode 14-11-14. அன்னைக்கு பாத்தேன். அப்புறம் சரியா தெரியல. இந்த ஆப்பரேஷன் பண்ணா ஒழுங்கா தெரியுமா டாக்டர்?
2.
சார், இதெல்லாம் ரொம்ப ஓவர் சார். பொண்டாட்டி பேச்ச ‘Blind ஆ‘ கேட்டுட்டு இந்த ஆப்பரேஷன் பின்னாடி கண்ணு தெரியுமான்னு கேட்டா எப்படி சார்?
3.
சரி சார். ஒத்துக்கிறேன்.. Argus II design consists of an external video camera. அதுக்காக வீடியோ வாடகைக்கு எல்லாம் விட முடியாது சார்.
4.
சார் இதெல்லாம் ரொம்ப ஒவர் சார். Artificial retina operation ஆன பிறகுதான் உங்க கம்பெனிக்கு ‘Vision’ என்னன்னு சொல்லுவேன் சொல்றது ரொம்ப ஓவர் சார்.
5.
இந்த ஆப்பரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு கண்ணு தெரியும் அம்மா. ஆனா உங்க புருசன் எங்க எங்க காசு வச்சி இருக்கார்னு கண்டுபிடிக்க முடியாது அம்மா.
நாற்றம்
பிம்பங்களின் பிம்பம்
மௌனத்தின் நிறம்
நீண்ட நாட்கள் ஆயிற்று சந்தித்து என்கிறேன்
பெரு நீர்ப்பரப்பில் சந்திக்கலாம் என்கிறாய்
முழு நிலவினை சாட்சி வைத்து
நினைவுகளும் நிதர்சனங்களும் தொடர்கின்றன.
இருப்பினை விடுத்து
இழப்பினை உறுதி செய்வதா வாழ்வு என்கிறேன்.
புன்னகை வலது மூக்கில் இருக்கும்
வைர மூக்குத்தி வரை நீள்கின்றன.
சொற்களுக்கு நிறம் இருக்கின்றன என்கிறேன்.
அப்படி எனில் மௌனத்தின் நிறம் என்ன என்கிறாய்.
பிறிதொரு நாளில் இருக்கின்றன
மழையில் நனைந்த
நந்தியாவட்டை செடிகளாய் நினைவுகள்.
புகைப்படம் : Karthik Pasupathi
குற்றி
வேதாளம் கட்டுப்பட்ட கதை
சற்றும் மனம் தளராமல் வேதாளத்தை மரத்தில் இருந்து கீழே தள்ளி தோளில் சாய்த்து நவீன விக்ரமாத்தியன் நடக்க ஆரம்பித்தான்.
நீ நல்லவன் தானே.
..
மௌனம் பதில் ஆகாது. எனக்கான பதில் அளிக்க முடியா வினாக்களில் மட்டுமே நான் உனக்கு கட்டுப்படுவேன்.
..
படைப்புகளின் தொடக்கதில் நீ இருக்கிறாய். உன்னை புகழின் ஏணியில் ஏற்றிவிட என்னால் முடியும். செய்யவா?
…
வாழ்வு மிகவும் ரசிக்கத் தக்கது என்பதை நீ அறிவாயா?
…
உணவில் பெரும் விருப்பம் கொண்டவன் நீ என்பதை நான் அறிவேன். விருப்பப்படி உணவினை வழங்கவா?
…
இசையினில் பெரும் ஆர்வம் கொண்டவன் நீ. இசையின் நுணுக்கங்களை கற்றுத் தரவா?
…
தனிமை உனக்கு பழக்கமானது. உன்னை தனிமைப்படுத்தி மகிழ்வினை உண்டாக்கவா?
…
உலக அனுவங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்.
…
இல்லற தர்மத்தில் இருக்கிறாய். உனக்கான கவலைகள் மற்றவர்களை விட மிக அதிகம் என்பதை நான் அறிவேன். உனக்கான விருப்பங்கள் இருப்பின் தெரிவிப்பாய். உனக்காக செய்து முடிப்பேன்.
ஞாயிறு அன்று என் மனைவி எந்த வேலையும் எனக்கு கொடுக்கக் கூடாது.
அடுத்த வினாடியில் வேதாளம் கட்டுப்பட்டது
புகைப்படம் : இணைய தளம்
நக்கன்
மீன் கொத்திகள்
I.T என்னும் பம்மாத்து
மனித வாழ்வின் காலத்தடம் படாத இடங்கள் கூட கணினியின் தடங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்பதே நிஜமான உண்மையாகும்.
தொழில் சார்ந்த துறைகளின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வளரும் போது, தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி வகை தொகை இல்லா வளர்ச்சியினை சந்தித்து இருக்கிறது. இதில் பெரும்பாலும் நிறுவனங்களின் வளர்ச்சி மலை அளவிற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களின் வளர்ச்சி மடு அளவிற்கும் இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இங்கு நான் குறிப்பிடும் அனுவபங்கள் எனக்கானவை மட்டும் அல்ல. பல அல்லல் பட்ட மனிதரிகளின் அனுபங்களும் கூட.
ஒரு நாட்டின் வளர்ச்சியினை வேறறுக்க அதன் அடிப்படை கலாச்சாரத்தை அறுத்துவிட்டால் போதும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வருடங்களாக இருந்த ஒரு கலாச்சாரம், சில தசாப்தத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.
இது குறித்து கீழ் கண்ட தலைப்புகளில் எழுத உள்ளேன்.
- வளர்ச்சிப் படிகள் – Stages
- மீட்டிங் கூத்துக்கள் – Meetings
- விடுமுறைகள் என்னும் நாடகங்கள் – Leave
- மதிப்பீடு(சுயம்/கம்பெனி) – appraisal
- குழுவுடன் சில நாட்கள் – Team outing
- மற்றவை
இவைகளின் நோக்கம் எவர் மனதையும் புண்படுத்துதல் அல்ல. நிதர்சனங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே இதன் நோக்கம்.
புகைப்படம் : R.s.s.K Clicks
காற்றில் ஆடும் சருகுகள் – 13
நினைவுகளை கலைத்தலை விட கனமான வேலை ஒன்றும் இல்லை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வறுமை உடையவன் மயானம் அடையான்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாலை ஒரங்களில் இருக்கும் மரங்களில் மிக மெல்லிய அடுக்குகளாக மணல் துகள்கள் படிந்திருப்பதைப் போல், 35+ கடக்கும் மனிதர்களிடம் மரணம் குறித்த சிந்தனை படிந்திருக்கிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பட்ட மரத்திலிந்து பறந்து செல்கின்றன பல பறவைக் கூட்டங்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உச்ச கட்ட வன்முறையின் மிகச் சிறந்த வடிவம் மௌனம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தண்டவாளங்களின் மேல் பறந்து செல்லும் பறவைகளின் சேரும் இடம் எதுவாக இருக்கக் கூடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வாழ்வின் தனிமைகள் கற்றித் தருவதை விட வேறு யார் அதிகம் கற்றுத் தரமுடியும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேடலைத் தொலைத்தவன் மயானம் அடையான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மனைவியின் முகத்தில் அதிக பிரகாசம் உண்டாக்க வேண்டுமா? ‘மணி 10 ஆயிடுத்து. ஒரே தடவையா மதியம் சாப்பிடலாமா?’ என்று சொல்லிப் பாருங்கள்.
அன்னைக்கு நிச்சயம் கறி மீன் குழம்பு வகையரா தான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறவுகள் அற்று இருப்பவர்களுக்கே உலகம் வசமாகிறது.
கரையும் இளமைகள்
பிரபஞ்சத்தின் சொற்கள்
சூன்யத் தேடல்கள்
சாரல் நினைவுகள்
அனுபவக் கூடுகள்
நீங்கா அலைகள்
ஆகாய அலைகள்
ஆற்று நீரின் வாசம்
மனதுக்குள்.
நேர் எதிரில் நிலா.
மெதுவாய் பாதம் பிடித்து விடுகிறேன்.
இதழ் வழி புன்னகைப் பூக்கிறாய்.
பேச்சுக்கள் தொடர்கின்றன.
நேர் மேலே நிலா.
‘தேகம் பொய்’ எனில்
‘நினைவுகளும் பொய்யா’ என்கிறேன்;
என்றைக்குமான புன்னகையை வீசுகிறாய்.
சுற்றிலும் கொட்டிக்கிடக்கின்றன
பூக்களும் நினைவுகளும்.
பதிலுக்காக மீண்டும்
கேள்வி தொடுக்க துவங்குகிறேன்.
அறை எங்கும் ஒலிக்கிறது ஒரு குரல்.
‘வேளா வேளைக்கு சோறு தின்னுட்டு
சாமி கும்பிடாம
என் உயிர எடுக்கிறான் உங்கப்பன்‘.
புகைப்படம் : R.s.s.KClicks
காற்றில் ஆடும் சருகுகள் – 12
விலக்கப்பட்ட மனிதர்களின் நேசிப்புகள் உண்மையானவைகள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருப்பு மிகவும் அழகான நிறம். ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, அந்த… (அட சே…) அதனால் கருப்பாக இருப்பதற்காக மகிழ்வு அடைவோம். இப்படிக்கு பெரிய fair and lovely வாங்குவோர் சங்கம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அஹோரிகள் அழுவதில்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கனவு காண்பது கண்கள், நிஜத்தில் வாழ்வது நெஞ்சம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
எதிரியை காயப்படுத்த மௌனத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கருணை அற்றுச் செல்லும் காலங்களில் கனவுகளுடன் வாழ்பவன் தானே மனிதன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உறக்கங்கள், மீளா உறக்கங்களை ஒத்து இருக்கின்றன.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒவ்வொரு தெருக் கூத்தாடியும் நினைவு படுத்துகிறான் வாழ்வினையும், பொருள் பெறுவதும் மட்டுமே வாழ்வு என்று.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கடக்கும் பொழுதுகளை விட கடந்த பிறகான ஒய்வுறுதல் மிக்க ஆயாசம் தருகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேசம் வென்றவரைவிட
தேகம் வென்றவரையே கொண்டாடுகின்றன
உலகங்கள்