காற்றில் ஆடும் சருகுகள் – 5

எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
——————————————————————————————
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
——————————————————————————————
தன்கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம்அலாதியானது.வாழ்வினில் என்னஇருக்கிறது தன்கோபம்உடைத்தல் தவிர.
——————————————————————————————
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
அடபிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டைவெட்டிபொங்கல் படைக்கறது இல்லடா
——————————————————————————————————————————————————————-
கர்வம்கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்கமுடியவில்லை. தனதுமகனிடம் முத்தம் பெறுவதில் தனிகர்வம்தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
த்யானம்தனதுமகளும்பேசிச்செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
——————————————————————————————————————————————————————-
எல்லாநாளும்  SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷபொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும்  அனுப்புறவன் தான்ஃப்ரெண்ட்.
அப்பன்காசில்  SMS அனுப்புவோர் சங்கம்
——————————————————————————————————————————————————————-
இன்னைக்கு புதுவருஷம்பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போகவேண்டாம். இந்தவருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லாவேலையும் நீங்களே செய்ங்க.
Mr.X : எனக்கு மட்டும் தான்லீவேகிடையாது போல. அதுசரிஅடிமைகளுக்கு ஏதுசுயசிந்தைகளும்/சிந்தனைகளும்.
நிகழ்ச்சி இத்துடன் நிறைவுபெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
ஏங்கஇன்னைக்கு லீவுதானே,கொஞ்சம் கடைக்கு போய்காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டுஅழைச்சிகிட்டு வாங்க, T.Vம்மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அதசரிபண்ணனும், காஸ்அடுப்பு ஒரேஅழுக்கா இருக்கு, அதகொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்கஇந்தவெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேலஇருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர்சுத்தபோயீடாதீங்க, இப்பஎன்னாசெஞ்சிகிழிச்சிட்டீங்க, பாட்டுவேண்டிகிடக்கு
மனைவி: என்னான்னே தெரிலங்க, ஒரேதலவலியா இருக்கு.

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் விடுதலை

சொல்லுக்கும் சொல் பிறக்கும்
இடத்திற்கும் இடையில் போராட்டம்
முடிவில் வென்றது மௌனம் மட்டுமே.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

நாடக முடிவு

வினாக்கள் பல திசைகளில்
விடைகள் மட்டும்
சூன்யத்தில்

Click by : Karthik Pasupathiy

Loading

சமூக ஊடகங்கள்

அக்லிஷ்டா

வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்














அக்லிஷ்டாஉலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.

பதஞ்சலி யோக சூத்திரம் – 5


Click by Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்

சுழியம்

வெறுமையாய் இருக்கிறது
உண்டியல்
செய்பவன் வாழ்வும்
விற்பவன் வாழ்வும்

*சுழியம்-Zero



Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

காலப் பயணம்

குளிர் பேருந்தில்
கண்ணாடி அருகே
உட்புறத்தில் பயணிக்கும்
ஈக்களின்
சேருமிடம் எதுவாக இருக்கக் கூடும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

வீடுபேறு

வெட்டப் படுவதற்காக
செல்லும் போதும்
இலைகளைத் தின்கின்றன ஆடுகள்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

வளியும் வலியும்

வெடிக்கும் பலூன் சப்தம்
கைக் கொட்டிச் சிரிக்கும் குழந்தைகள்,
கலைகின்றன கனவுகள்.


Click by Ram (a) Ramaswamy Nallaperumal

Loading

சமூக ஊடகங்கள்

தேடல் விதி

இறந்த உடல் மீது
எதைத் தேட முற்படுகின்றன
ஈக்கள்?



Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

சலனம்

எல்லா இரவிற்குள்ளும் இருக்கின்றன
பல அழுகை ஒலிகள்.

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

தினம் தினம் தீபாவளி

வெடிக்கும் பட்டாசில் தெரிகிறது
அதைச் செய்பவர்களில்
வேதனைகள்.

















Photo by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

காசுக் கடவுள்

காசுக் கடவுளை
பொம்மைகளாக்கி
விற்ற பின்னும்
கனவாகவும்
கனமாகவும் இருக்கிறது
விற்பவர்களின் வாழ்வு.

Loading

சமூக ஊடகங்கள்

கொண்டாடுதல்

வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

பகுபடுதல்

ஒவ்வொரு நரையும்
உணர்த்துகின்றன
பகுக்கபட்ட வைராக்கியங்கள்
வீழ்ச்சி அடைவதை.











Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

காலத் தத்துவம்

தேடித்தான் வருகிறோம்,
தேடலில் மாற்றம் கொள்கின்றன தேவைகள்;
மாற்றத்தில் மறைகிறது தேடல்,
தேடல் கொள்ளும்
ஆட்டம் மட்டும் தொடர்கின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

மறுதளித்தல்

எவர் அறியக்கூடும்
மறுதளித்தல் தாண்டி
மறுக்கப்பட்ட காரணங்களையும்,
அதன் பொருட்டான வலிகளையும்.









Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கனவுகளில் தேடல்

இலக்கு நோக்கிய தேடல்கள்,
அடைந்தபின் மீண்டும் தேடல்.
நித்திய தேடல்களில் தொலைகிறது
நிச்சயமற்ற வாழ்வு.














Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

பகல் கனவுகள்

கந்தலாடைக்காரனிடம் கனவுகள்;
கனவான்களிடம் கடன் அட்டைகள்.
வாழ்வு எதைச் சொல்ல முற்படுகிறது?

Photo : Devadhai Thozhan(a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

மரணத்தின் நிழல்

எல்லா மறுதலித்தலும்
உருவாக்கிச் செல்கின்றன்
ஒவ்வொரு முறையும்
ஒரு மரணத்தை.

Loading

சமூக ஊடகங்கள்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

பொருளற்றவனை
எளிதில் புரிந்து கொண்டு
குரைக்க துவங்கி விடுகின்றன
மிருகங்களும்.

*இல்லானை இல்லாளும் வேண்டாள் – ஔவை

Loading

சமூக ஊடகங்கள்