எதிர்பாராமல் குழந்தைகளால் பெறப்படும் முத்தங்களால் சில கனவுகள் கலைகின்றன. பல கனவுகள் உருவாகின்றன.
——————————————————————————————
கொடுக்கும் கைகளை விட அதிக வலிமை வாய்ந்தவை இரக்கும் கைகள் அதைவிட வலிமை வாய்ந்தது வயிறு.
——————————————————————————————
தன்கோபங்கள் உடைந்து மகிழ்வு பிறக்கும் நேரம்அலாதியானது.வாழ்வினில் என்னஇருக்கிறது தன்கோபம்உடைத்தல் தவிர.
——————————————————————————————
பேருந்தில் பயணம் செய்பவர்களை விட புகைவண்டியில் பயணம் செய்பவர்களின் கண்களில் வெறுமை மிக அதிகமாக தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
அடபிக்காளிப் பயலுகளா, மாட்டுப் பொங்கல்னா மாட்டுக்கு படைக்கிற பொங்கல்டா, மாட்டைவெட்டிபொங்கல் படைக்கறது இல்லடா.
——————————————————————————————————————————————————————-
கர்வம்கொள்வதில் பெண்கள் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் கர்வத்தை மறைக்கமுடியவில்லை. தனதுமகனிடம் முத்தம் பெறுவதில் தனிகர்வம்தெரிகிறது.
——————————————————————————————————————————————————————-
த்யானம் – தனதுமகளும்பேசிச்செல்லும் ஒவ்வொரு தகப்பனும் உணர்கிறான் இறைவனின் அருகாமையை.
——————————————————————————————————————————————————————-
எல்லாநாளும் SMS அனுப்புறவன் ஃப்ரெண்ட் இல்ல, வருஷபொறப்புக்கும் ஃப்ரெண்ட்ஷிப்டேக்கும் அனுப்புறவன் தான்ஃப்ரெண்ட்.
அப்பன்காசில் SMS அனுப்புவோர் சங்கம்
——————————————————————————————————————————————————————-
இன்னைக்கு புதுவருஷம்பொறந்திருக்கு. இன்னைக்கு எங்கயும் வெளியில போகவேண்டாம். இந்தவருஷத்தில் இருந்தாவது சொல்லாமலே எல்லாவேலையும் நீங்களே செய்ங்க.
Mr.X : எனக்கு மட்டும் தான்லீவேகிடையாது போல. அதுசரிஅடிமைகளுக்கு ஏதுசுயசிந்தைகளும்/சிந்தனைகளும்.
நிகழ்ச்சி இத்துடன் நிறைவுபெறுகிறது.
——————————————————————————————————————————————————————-
ஏங்கஇன்னைக்கு லீவுதானே,கொஞ்சம் கடைக்கு போய்காய்கறி வாங்கிகிட்டு வாங்க,பசங்கள டிராயிங் கிளாஸ்ல விட்டுட்டு வாங்க,பாட்டு கிளாஸ்லயும் விட்டுஅழைச்சிகிட்டு வாங்க, T.Vம்மிக்ஸியும் ரிப்பேரா இருக்கு அதசரிபண்ணனும், காஸ்அடுப்பு ஒரேஅழுக்கா இருக்கு, அதகொஞ்சம் தொடச்சி தாங்க.
ஏங்கஇந்தவெண்டைக்காய வாங்கிட்டு வந்தீங்க, நல்லாவே இல்ல, அப்புறம் இன்னைக்கு இன்னும் வேலஇருக்கு, ப்ரெண்ட்ஸ் வராங்கன்னு ஊர்சுத்தபோயீடாதீங்க, இப்பஎன்னாசெஞ்சிகிழிச்சிட்டீங்க, பாட்டுவேண்டிகிடக்கு
மனைவி: என்னான்னே தெரிலங்க, ஒரேதலவலியா இருக்கு.