நண்பு கண் முன்னே எரியும் பிணங்கள் குளிர் நீக்கி வெப்பம் தரும். சுழற்சி முறையில் எனக்கான இடமும் மாறும். அப்போதும் இக்கவிதை அரங்கேற்றம் கொள்ளும். நண்பு – நேசம் *திருமந்திரம் – 992 புகைப்படம் – இணையத் தளம் சமூக ஊடகங்கள் Share List
மாறும் நிலைகள் மின்கம்பிகளின் வழியே படர்ந்து செல்லும் கொடிகளின் அடுத்த நிலை என்ன என்ற வினாக்களில் கரைகிறது வாழ்வு புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List
அட்சர அப்யாசம் ‘சவப்பெட்டி’ என்று எழுதத்துவங்கும் குழந்தையின் முதல் மனநிலை என்னவாக இருக்கும்? புகைப்படம் : SL Kumar சமூக ஊடகங்கள் Share List
ஆன்மாவின் மறுதலித்தல் குழந்தைகளின் விருப்பங்களை மறுதலிக்கும் பெற்றோர்களின் காயங்களுடன் மறைந்து இருக்கிறது இயலாமைகள். புகைப்படம் : Gayu Venkat சமூக ஊடகங்கள் Share List
நாற்றம் காகித மலர்களுக்கு வாசனை இல்லை தன்னைத் தவிர. * நாற்றம் – மணம்புகைப்படம் : விவேக் சமூக ஊடகங்கள் Share List
பிம்பங்களின் பிம்பம் ஒரு மழைக் காலத்தில் வீட்டிற்கு வெளியே பெய்யும் மழையினை கவனிக்கையில் அது தாண்டி செல்லும் ரயில் ஏதோ ஒரு பிம்பம் உண்டாக்கிச் செல்கிறது. புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List
மௌனத்தின் நிறம் நீண்ட நாட்கள் ஆயிற்று சந்தித்து என்கிறேன் பெரு நீர்ப்பரப்பில் சந்திக்கலாம் என்கிறாய் முழு நிலவினை சாட்சி வைத்து நினைவுகளும் நிதர்சனங்களும் தொடர்கின்றன. இருப்பினை விடுத்து இழப்பினை உறுதி செய்வதா வாழ்வு என்கிறேன். புன்னகை வலது மூக்கில் இருக்கும் வைர மூக்குத்தி வரை நீள்கின்றன. சொற்களுக்கு நிறம் இருக்கின்றன என்கிறேன். அப்படி எனில் மௌனத்தின் நிறம் என்ன என்கிறாய். பிறிதொரு நாளில் இருக்கின்றன மழையில் நனைந்த நந்தியாவட்டை செடிகளாய் நினைவுகள். புகைப்படம் : Karthik Pasupathi சமூக ஊடகங்கள் Share List
நக்கன் வினா பதில்கள் வினாக்கள், வினாக்கள், பதில் வினாக்கள், வினாக்கள்,வினாக்கள், வினாக்கள் .. பிரிதொரு நாளில் மௌனத்தில் பிரபஞ்சம். *நக்கன் – நிர்வாணி. **நக்கன் என்றேத்திடு நாதனை – திருமந்திரம் – 3 புகைப்படம் : இணையத்தளம்/FB சமூக ஊடகங்கள் Share List
மீன் கொத்திகள் பெரு நீர்ப்பரப்பில் மீன் கொத்திகள். பல மீன்களை இழந்தபின்னும் அசைவற்று தனித்திருக்கிறது நீர்ப்பரப்பு. புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List
கரையும் இளமைகள் இருப்பதாய் நினைத்த இளமை கடந்த காலங்களில் கரைந்து கலந்திருந்தது பிரிதொரு நாளில் பிரபஞ்சத்தின் வடிவம் தேடி. புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List
பிரபஞ்சத்தின் சொற்கள் எனக்கென்று கவிதை எதுவும் இல்லை பிரபஞ்சத்தின் சொற்களைத் தவிர. புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List
சூன்யத் தேடல்கள் தேகங்கள் தேவைகள் தேய்கிறது காலங்கள் பின்னொரு நாளில் சூன்யங்கங்கள். புகைப்படம் : SL Kumar சமூக ஊடகங்கள் Share List
சாரல் நினைவுகள் மழை பெய்து முடித்தபின்னும் இருக்கின்றன முன்னொரு நாளின் நினைவுகள் புகைப்படம் : Bhavia Velayudhan சமூக ஊடகங்கள் Share List
அனுபவக் கூடுகள் காலங்களில் கரைந்தபின் எஞ்சி இருக்கின்றன அனுபவக் கூடுகள் புகைப்படம் : Chithiram Photography சமூக ஊடகங்கள் Share List
முக்தி பெரியதாய் இழக்க எதுவும் இல்லை நினைவுகளைத் தவிர. புகைப்படம் : R.s.s.KClicks சமூக ஊடகங்கள் Share List
பிம்பங்கள் காற்றில் ஆடும் குமிழிகளை உடைத்து விளையாடுகிறது குழந்தை தன் தோழமையும் தன்னைப் போல் இருப்பதாய் மகிழ்வுறுகிறார் கடவுள். புகைப்படம் : Karthik Pasupathi சமூக ஊடகங்கள் Share List
இரட்சித்தல் பல பறவைகள் காற்றை கிழித்து சென்ற பின்னும் தடயங்கள் அற்று இருக்கிறது வானம். நிழற்படம் – சித்திரம் நிழற்படம் சமூக ஊடகங்கள் Share List
கரை ஏற்றம் குளித்துக் கரை ஏறிய பின்னும் இருக்கின்றன நீரும் சில நினைவுகளும். புகைப்படம் : Bragadeesh Prasanna சமூக ஊடகங்கள் Share List
இற(ர)த்தல் கடைக்காரனிடம் கடன் சொல்லி வாங்கிவந்த காகிதத்தில் கர்ணன். புகைப்படம் : Karthik Pasupathy சமூக ஊடகங்கள் Share List
பூக்கள் முளைத்த பாதைகள் மாலைச் சூரியன் செந் நெருப்பாகிக் கொண்டிருக்கிறது. முடிவற்ற ஒரு பயணத்திற்கான தொடக்கத்தில் நீயும் நானும். உனக்கான மௌனத்தில் நீயும் எனக்கான மௌனத்தில் நீயும். வார்த்தைகளை உடைத்து கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய். ‘அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏது‘ என்கிறேன். உடைப்பட்ட வார்தைகளில் வலி உன் கண்களில். என்றோ ஒரு நாளின்பயணத்தில் உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம். எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம். அந்த நாளில் நம் இருவருக்கும் மௌனம் பொதுவாக இருக்கலாம் அழகிய கனவுகளையும் சலனம் கொண்ட நிஜங்களையும் தனித்தனியே சுமந்து புகைப்படம் & Model : Stri சமூக ஊடகங்கள் Share List