விதியின் புனைதல்


எல்லா கனமில்லா பொருள்களும்
உனக்கானவையாக இருக்கின்றன.
எல்லா கனத்த நினைவுகளுக்கும்
எனக்கானவையாக இருக்கின்றன.

உனக்கான பொருள்கள்
கலைந்து கிடக்கின்றன.
கலையாமல் இருக்கின்றன
என் நினைவுகள்.
யாருமற்ற பொழுதுகளில்
இப்புகைப்படம் பார்த்து
நினைகளைக் கோர்ப்பாய்.
அந்த நாளில் நினைவுகளும்
இன்றைக்கு பத்திரமாய் என்னிடம்.

Click by : Swathika. Photo : Senthil Tiruvarasan and Samyuktha. 

Loading

சமூக ஊடகங்கள்

வழிப்போக்கன்

எல்லாம் கடந்தபின்னும்
எஞ்சி இருக்கும்
எச்சத்தில் கழிகிறது வாழ்வு.












Click by : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

உயிரின் மொழி

உயிரின் மொழி பேசி
மழலை மொழி பேசி,
பிள்ளை மொழி பேசி,
கனவு மொழி பேசி,
காதல் மொழி பேசி,
வியாபார மொழி பேசி,
மூன்றாம் தலைமுறையுடன் மொழி பேசி,
பேசிப் பேசி பின்
பேச்சு அற்ற மௌனமாகி
பிணமாகி போகையில்
நிறைவு பெறுகிறது அழகியல் வாழ்வு.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

வான் விளிம்பு

தேக மாற்றத்தில்
தேய்ந்து போகின்றன
தேவைகளும் நினைவுகளும்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் விளிம்பு

ஒவ்வொரு பயணமும்
இழுத்துச் செல்கிறது
சில மனிதர்களையும்
பல நினைவுகளையும்.







Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

கிலுப்தம்

மனதினைச் சொல்லி
பிரயோஜனமில்லை
உடல் இருக்கும் வரை.












* கிலுப்தம்நிச்சயமாக

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

எச்சங்கள்

நினைவுகள் கடந்த பின்னும்
மிச்சமிருக்கின்றன 
எச்சங்கள்














Click by : HarishKumar

Loading

சமூக ஊடகங்கள்

பூரணம்

அழகிய ஓவியம் ஒன்றை
வரையத் துவங்குகிறேன்.
எழுதப்படா பக்கங்களை
எடுத்து வந்து என்னிடம் தந்து
ஓவியம் எப்படி என்கிறாய்‘.
மகளாகிய உன்னால்
ஒவியங்கள் முழுமை பெறுகின்றன.








Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

என்னவெனில்

கடக்கும்காலங்களில்
கடந்தகாலத்தைத்தேடும்
கனவுவாழ்க்கை.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

புன்னகைக் பூக்கள்

கர்வம் கொண்டு
கனவு காண்பவனைக்
கண்டு சிரிக்கின்றன மயானங்கள்.











Click by : RssK Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காயம் படிந்த காயங்கள்

மௌனித்திருக்கும்
மனித உடல் எங்கும்
புலப்படா காயங்கள்.











Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடுவானம்

முந்திச் செல்லும் மழையினில்
நனைந்தபடி நானும்,
சிறு குடை பிடித்த படி நீயும்.
வாகனங்கள் ஒலி எழுப்பி
கரைகின்றன.
யாரும் அற்ற பொழுதுகளில்
குடைக்குள் இருந்து திரும்பிப்பார்த்து
புன்னைக்கிறாய்.
காலங்களும் உறைந்து நிற்கின்றன.
பிறிதொரு மழை நாளில்
மழை நீருடன் உன் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

மினுமினுப்புகள்

தெருவில் பார்த்துவிட்டு
புழக்கடைக்கு திரும்பிய பின்னும்
தெரிகிறது நட்சத்திரங்கள்.









* பல நேரங்களில் வீட்டின் வாசலில் நட்சத்திரங்களை எண்ணிவிட்டு கொல்லைப் புறத்தில் வந்து சரிபார்த்திருக்கிறேன். மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கடந்த காலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நினைவுகள்.

Click by R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் அர்த்தங்கள்

மகளின் உறக்கத்தில்
தகப்பனை தலையணைக்குள் தேடுகையில் வாழ்வு முற்றுப் பெறுகிறது.








Click by : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

நாற்றம்

மலராமல் இருக்கிறது
மலர் விற்பவர்களில்
வாழ்வு

நாற்றம்*மணம்




Click by : R.S.S.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மீதமிருக்கும் பிரபஞ்சம்

ஆற்றில் வழிந்தோடும் நீரை
கைகளில் அள்ளிய பிறகும்
மீதமிருக்கிறது பிரபஞ்சம்.











Click by : VG Santhosh Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி நிகழ்வுகள்

விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று

மௌனத்தின் பாஷைகள் மட்டும்.


Click by : Bragadeesh Prasanna.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணன்

தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து
இது எத்தனை ரூபா அம்மா
எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின்
வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

தான் தொலைதல்

அட ஏரோப்ளேன்என்பது மாறி,
‘இத்தானே’ என்னும் கணத்தில்
தொலைகிறது இளமைகள்.




Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் விடுதலை

சொல்லுக்கும் சொல் பிறக்கும்
இடத்திற்கும் இடையில் போராட்டம்
முடிவில் வென்றது மௌனம் மட்டுமே.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்