Category: கவிதை
பிம்பங்கள்
ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ
இரட்சித்தல்
கரை ஏற்றம்
இற(ர)த்தல்
பூக்கள் முளைத்த பாதைகள்
மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நீயும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
‘அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏது‘ என்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின்பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து
புகைப்படம் & Model : Stri
ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்
புனிதத்துவம்
மௌன நாதம்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
‘எனில் உன்னை அறிவது எப்படி‘ என்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
புகைப்பட உதவி : R.s.s.K. Clicks
என்றைக்குமான குளம்
கசியும் நினைவுகள்
சொற்கள் அற்ற இரவு
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
‘நான் உன்னுடன் பேசப் போவதில்லை‘
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில் கைகளால்
எதையோ தேடுகிறாய்.
‘என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா‘
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.
புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்
உள் ஒலி
ஜன்னல் பிடித்த படி
நிறைவு
முன் குறிப்புகள்
வரவேற்றலில் மரணம்
ஈர்ப்பு
கானல் காட்சிகள்
அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
‘வாடா சாப்ட‘ என்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.
Click by : R.s.s.K Clicks