ஆகாய அலைகள்

ஆற்று நீரின் வாசம்
மனதுக்குள்.
நேர் எதிரில் நிலா.
மெதுவாய் பாதம் பிடித்து விடுகிறேன்.
இதழ் வழி புன்னகைப் பூக்கிறாய்.
பேச்சுக்கள் தொடர்கின்றன.
நேர் மேலே நிலா.
‘தேகம் பொய்’ எனில்
‘நினைவுகளும் பொய்யா’ என்கிறேன்;
என்றைக்குமான புன்னகையை வீசுகிறாய்.
சுற்றிலும் கொட்டிக்கிடக்கின்றன
பூக்களும் நினைவுகளும்.
பதிலுக்காக மீண்டும்
கேள்வி தொடுக்க துவங்குகிறேன்.
அறை எங்கும் ஒலிக்கிறது ஒரு குரல்.
வேளா வேளைக்கு சோறு தின்னுட்டு
சாமி கும்பிடாம
என் உயிர எடுக்கிறான் உங்கப்பன்‘.

புகைப்படம் : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

முக்தி

பெரியதாய் இழக்க
எதுவும் இல்லை
நினைவுகளைத் தவிர.







புகைப்படம் : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்கள்

காற்றில் ஆடும்
குமிழிகளை உடைத்து
விளையாடுகிறது குழந்தை
தன் தோழமையும்
தன்னைப் போல் இருப்பதாய்
மகிழ்வுறுகிறார் கடவுள்.







புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ

ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே 
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ * – லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

இரட்சித்தல்

பல பறவைகள்
காற்றை கிழித்து
சென்ற பின்னும்
தடயங்கள் அற்று இருக்கிறது வானம்.

நிழற்படம் – சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

கரை ஏற்றம்

குளித்துக் கரை ஏறிய
பின்னும் இருக்கின்றன
நீரும் சில நினைவுகளும்.









புகைப்படம் : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

இற(ர)த்தல்

கடைக்காரனிடம்
கடன் சொல்லி வாங்கிவந்த
காகிதத்தில் கர்ணன்.
புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

மௌன நாதம்

வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
எனில் உன்னை அறிவது எப்படிஎன்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.


புகைப்பட உதவி :  R.s.s.K. Clicks

Loading

சமூக ஊடகங்கள்

கசியும் நினைவுகள்

மழை நீரில் கரைகிறதோ
இல்லையோ நினைவுகள்;
வலி கொண்ட தனிமையில் மட்டும்.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

உள் ஒலி

காகிதத்தில் வண்ணத்துப் பூச்சி
தாவும் குழந்தை
புன்னகைக்கும் இறை.












புகைப்பட உதவி:  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

பூத்தல் – நினைவுகளுக்கு மட்டும்

என்ன செய்து கொண்டிருக்கின்றன
நினைவுகள்
ஒவ்வொரு வினாடியும்
தன்னை இழத்தல் தவிர.











புகைப்பட உதவி : Karthik Pasupathi


Loading

சமூக ஊடகங்கள்

ஆற்றுப்படுதல்

நட்சத்திரங்களுக்கு
உறவில்லை
தன்னைத் தவிர.














புகைப்பட உதவி : Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்

உயிரின் மொழி

உயிரின் மொழி பேசி
மழலை மொழி பேசி,
பிள்ளை மொழி பேசி,
கனவு மொழி பேசி,
காதல் மொழி பேசி,
வியாபார மொழி பேசி,
மூன்றாம் தலைமுறையுடன் மொழி பேசி,
பேசிப் பேசி பின்
பேச்சு அற்ற மௌனமாகி
பிணமாகி போகையில்
நிறைவு பெறுகிறது அழகியல் வாழ்வு.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

கிலுப்தம்

மனதினைச் சொல்லி
பிரயோஜனமில்லை
உடல் இருக்கும் வரை.












* கிலுப்தம்நிச்சயமாக

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

முன்னேற்றம்

என்ன செய்து கொண்டிருக்கிறது
உடல்
இறப்பு நோக்கி முன்னேறுவது தவிர.









Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

மீதமிருக்கும் பிரபஞ்சம்

ஆற்றில் வழிந்தோடும் நீரை
கைகளில் அள்ளிய பிறகும்
மீதமிருக்கிறது பிரபஞ்சம்.











Click by : VG Santhosh Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி நிகழ்வுகள்

விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று

மௌனத்தின் பாஷைகள் மட்டும்.


Click by : Bragadeesh Prasanna.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணன்

தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து
இது எத்தனை ரூபா அம்மா
எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின்
வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

நாடக முடிவு

வினாக்கள் பல திசைகளில்
விடைகள் மட்டும்
சூன்யத்தில்

Click by : Karthik Pasupathiy

Loading

சமூக ஊடகங்கள்

அக்லிஷ்டா

வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்














அக்லிஷ்டாஉலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.

பதஞ்சலி யோக சூத்திரம் – 5


Click by Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்