
தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவிடையாறு
- மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
- ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
- முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
- அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
- கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
- சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
- சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
- மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
| தலம் | திருவிடையாறு |
| பிற பெயர்கள் | திரு இடையாறு, T. எடையார் |
| இறைவன் | மருதீஸ்வரர், இடையாற்றீசர், இடையாற்றுநாதர், கிருபாபுரீஸ்வரர் |
| இறைவி | ஞானாம்பிகை, சிற்றிடை நாயகி |
| தல விருட்சம் | மருதமரம் |
| தீர்த்தம் | சிற்றிடை தீர்த்தம் |
| விழாக்கள் | தைமாதம் ஆற்றுத்திருவிழா |
| மாவட்டம் | விழுப்புரம் |
| திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், மருதீஸ்வரர் தேவஸ்தானம் டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம், PIN – 607203 94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515 |
| வழிபட்டவர்கள் | சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர் |
| பாடியவர்கள் | சுந்தரர் 1 பதிகம் |
| நிர்வாகம் | |
| இருப்பிடம் | திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் . |
| இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 203 வது தலம் நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம். |
ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்

புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 31
திருமுறை எண் 8
பாடல்
தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.
பொருள்
ஒளிவடிவினனும், உயிர்களின் தீவினைகள் குறையுமாறு செய்து நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், `நள்ளாறு` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் ` ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.
கருத்து
தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 31
திருமுறை எண் 9
பாடல்
தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.
பொருள்
எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், (மாயையை விளக்கி ஞானத்தை) தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.
![]()